TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 07/12/2022

Table of Contents

TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 07/12/2022

TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 07/12/2022 – TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 07 டிசம்பர் 2022 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுக்கபட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

2030 ஆம் ஆண்டுக்குள் கார்பன் இல்லா ரயில்வேயாக மாற இலக்கு

  • வரும் 2030-ஆம் ஆண்டிற்குள்  கார்பன் வெளியேற்றத்தை  முற்றிலுமாக நீக்கும் முனைப்பில்  இந்திய ரயில்வேத் துறை செயல்பட்டு வருவதாக மத்திய ரயில்வே, தகவல் // Indian Railways (IR) has envisioned to achieve net zero carbon emission by 2030
  • நாட்டில் உள்ள ரயில் தடங்களில் அகல ரயில்பாதையாக்க மாற்றம் செய்யப்பட்டு 100 சதவீதம் மின்சார மயமாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

18வது இந்தியா, பங்களாதேஷ் எல்லைப் பாதுகாப்பு கூட்டு பணிக்குழு கூட்டம்

  • இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே பாதுகாப்பு மற்றும் எல்லை மேலாண்மை தொடர்பான கூட்டு பணிக்குழுவின் (JWG) 18வது கூட்டம் 2022 டிசம்பர் 5-6 தேதிகளில் நடைபெற்றது // 18th Meeting of the Joint Working Group (JWG) on Security and Border Management between India and Bangladesh
  • எல்லையில் வேலி அமைப்பது, சட்டவிரோதமாக கடப்பது, பயங்கரவாதத்தை ஒழிப்பது, கடத்தல் போன்ற விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இரட்டை அடுக்கு மின்சார பேருந்து

  • மும்பையில் 2023 ஜனவரி 14 முதல் இரட்டை அடுக்கு மின்சார பேருந்து அறிமுகப் படுத்தப்பட உள்ளது // Double-decker electric bus to be introduced in Mumbai
  • மின்சார வாகனங்கள் மூலம் சுற்றுச்சூழல் மாசை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

2023ல் இந்தியா 8வது பெரிய விளம்பர சந்தையாக மாறும்

  • GroupM இன் உலகளாவிய ஆண்டு இறுதிக் கணிப்பின்படி, 2023 ஆம் ஆண்டில் இந்தியா பிரேசிலை முந்தி 8வது பெரிய விளம்பரச் சந்தையாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது // India will become 8th largest advertising market in 2023
  • ‘இந்த ஆண்டு, அடுத்த ஆண்டு 2022’ (This Year, Next Year 2022) அறிக்கையில், குரூப்எம் இந்தியாவை உலகளவில் 9வது பெரிய விளம்பரச் சந்தையாக வரிசைப்படுத்தியுள்ளது.

உலகின் மிகப்பெரிய காற்று-சூரிய கலப்பின மின் நிறுவனம்

TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 07/12/2022
உலகின் மிகப்பெரிய காற்று-சூரிய கலப்பின மின் நிறுவனம்
  • உலகின் மிகப்பெரிய காற்று-சூரிய கலப்பின மின் நிறுவனம் (World’s largest Wind-solar hybrid power company) என்ற பெயரை அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (Adani Green Energy limited (AGEL) ) நிறுவனம் பெற்றுள்ளது.
  • ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மரில் மூன்றாவது 450 மெகாவாட் விண்ட்சோலார் ஹைபிரிட் மின் உற்பத்தி நிலையத்தை இயக்கியதன் மூலம், அதன் மொத்த செயல்பாட்டு உற்பத்தி 7.17 GW ஆக உயர்ந்துள்ளது.

டெல்லிப் பகுதியில் ஜனவரி 1, 2023 முதல் சிஎன்ஜி மற்றும் இ-ஆட்டோக்களை மட்டும் பதிவு செய்ய உத்தரவு

  • ஜனவரி 1, 2023 முதல் தலைநகர் டெல்லிப் பகுதியில் சிஎன்ஜி மற்றும் மின்சார ஆட்டோக்களை மட்டும் பதிவு செய்யுமாறு உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு மத்திய அரசின் காற்றுத் தர ஆணையம் உத்தரவிட்டது.
  • 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் டீசல் ஆட்டோக்களை நிறுத்துமாறு உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை மத்திய அரசின் காற்றுத் தர ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

ட்ரோன் யாத்ரா ‘ஆபரேஷன் 777’

TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 07/12/2022
ட்ரோன் யாத்ரா ‘ஆபரேஷன் 777’
  • சென்னையை தளமாகக் கொண்ட ட்ரோன் ஸ்டார்ட்-அப் நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம், இந்தியாவில் உள்ள 777 மாவட்டங்களில் பல்வேறு விவசாயப் பயன்பாடுகளுக்கு ஆளில்லா விமானங்களின் செயல்திறனைக் கற்பிப்பதற்கும் நிரூபிக்கவும் ‘ட்ரோன் யாத்ரா’ மற்றும் ‘ஆபரேஷன் 777’ ஆகியவற்றை அறிவித்துள்ளது // The start-up also announced ‘drone yatra’ and ‘Operation 777’ to educate and demonstrate the efficacy of drones
  • சென்னையில் உள்ள கருடா ஏரோஸ்பேஸின் தயாரிப்பு பிரிவில் 1000 திட்டமிடப்பட்ட ட்ரோன் மையத்தை (1000 planned Drone Centre of Excellence) மத்திய அமைச்சர் துவக்கி வைத்தார்.
  • கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் 2024-ம் ஆண்டுக்குள் 1 லட்சம் கிசான் (விவசாய) ட்ரோன்களை தயாரிக்கும்.

கல்பாக்கம் அனுமின் நிலையத்தின் புதிய தலைவர்

  • கல்பாக்கத்தில் உள்ள பாரதிய நபிகியா வித்யுத் நிகாம் லிமிடெட் (பவினி – Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited (BHAVINI)) நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக = விஞ்ஞானி கே.வி. சுரேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • வேதியியல் பொறியியலில் பட்டப்படிப்பை முடித்த அவர், 1985 இல் மும்பையில் உள்ள BARC பயிற்சிப் பள்ளியில் (29வது தொகுதி) அணுசக்தித் துறையில் சேர்ந்தார்.

ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பு உச்சி மாநாடு “யூமாகின் சென்னை 23” நடத்தும் தமிழகம்

TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 07/12/2022
ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பு உச்சி மாநாடு “யூமாகின் சென்னை 23” நடத்தும் தமிழகம்
  • தமிழக அரசின் தமிழ்நாடு மின்னணு நிறுவனமான “எல்காட்” தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் குறித்த, ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பு உச்சி மாநாடு “யூமாகின் சென்னை 23” (Asia’s largest tech innovation summit = Umagine Chennai 2023) மாநாட்டை வருகின்ற மார்ச் மாதம் நடத்த உள்ளது.
  • மாநாட்டின் கருப்பொருள் = எதிர்காலத்தை பின்னால் விடுங்கள் (Leave the future behind)
  • உமாஜின் சென்னை 2023 என்பது 2030 ஆம் ஆண்டுக்குள் டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற விரும்பும் மாநிலத்தை நோக்கிய தமிழக அரசின் முக்கிய முயற்சியாகும்.
  • இம்மாநாட்டின் கூட்டு நாடு (PARTNER COUNTRY) = பிரான்ஸ்

டைம்ஸ் 2022 ஆம் ஆண்டின் சிறந்த நபர்

TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 07/12/2022
டைம்ஸ் 2022 ஆம் ஆண்டின் சிறந்த நபர்
  • டைம்ஸ் 2022 ஆம் ஆண்டின் சிறந்த நபர் (Time’s 2022 Person of the Year) = உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி
  • புகழ் பெற்ற டைம்ஸ் இதழின் இந்த ஆண்டின் சிறந்த நபராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் முதல் ட்ரோன் திறன் பயிற்சி மாநாடு

TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 07/12/2022
இந்தியாவின் முதல் ட்ரோன் திறன் பயிற்சி மாநாடு
  • இந்தியாவின் முதல் ட்ரோன் திறன் பயிற்சி மாநாட்டை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் 06 டிசம்பர் 22 அன்று சென்னையில் தொடங்கி வைத்தார் // India’s first Drone Skill Training Conference in Chennai
  • சென்னையில் உள்ள கருடா ஏரோஸ்பேஸின் தயாரிப்பு நிறுவனம் இம்மாநாட்டை ஏற்பாடு செய்தது.

பணம் அனுப்புவதன் மூலம் 100 பில்லியன் டாலர்களைப் பெறும் உலகின் முதல் நாடு

  • 2022 ஆம் ஆண்டில் பணம் அனுப்புவதன் மூலம் 100 பில்லியன் டாலர்களைப் பெறும் உலகின் முதல் நாடு இந்தியாவாகும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது // India will be the first country in the world to receive $100 billion from remittances during 2022
  • மற்ற தெற்காசிய நாடுகளுக்கு பணம் அனுப்புவது 10% குறைந்தாலும், இந்தியாவின் விஷயத்தில் 12% உயர்ந்துள்ளது.

2022 உலக பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில் மீராபாய் சானு வெள்ளி வென்றார்

  • 2022 உலக பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்ற இடம் = கொலம்பியா // Mirabai Chanu won silver at the 2022 World Weightlifting Championships in Colombia on 7 Dec
  • டோக்கியோ 2020 சாம்பியனான சீனாவின் ஹூ ஜிஹுவாவை தோற்கடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். சீன வீராங்கனை தங்கம் வென்றார்.

ஐசிசி பெண்கள் U-19 மகளிர் டி20 உலகக் கோப்பை

  • ஐசிசி பெண்கள் U-19 மகளிர் டி20 உலகக் கோப்பை (ICC women’s U-19 Women’s T20 World Cup) போட்டிகள் நடைபெறும் நாடு = தென்னாப்பிரிக்கா
  • அடுத்த ஆண்டு ஜனவரி 14 முதல் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையில், பதினெட்டு வயதான தொடக்க வீரர் ஷஃபாலி வர்மா இந்தியாவை வழிநடத்துவார்.

பெரு பாரா-பேட்மிண்டன் இன்டர்நேஷனல் 2022

  • பெரு பாரா-பேட்மிண்டன் இன்டர்நேஷனல் 2022 (Peru Para-Badminton International 2022) போட்டிகள் நடைபெற்ற இடம் = பெரு நாட்டின் லிமா நகரம்
  • மொத்தம் 14 பதக்கங்களை இந்தியா வென்றது (6 தங்கம், 1 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களை) இந்தியா வென்றுள்ளது

புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஒய்.கே.அலாக் காலமானார்

  • புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஒய்.கே.அலாக் காலமானார். அவருக்கு வயது 82.
  • சர்தார் படேல் பொருளாதாரம் மற்றும் சமூக ஆராய்ச்சி நிறுவன (Sardar Patel Institute of Economic and Social Research (SPIESR)) பேராசிரியர் ஆவார்.
  • அவர் 1939 இல் சக்வால் (இன்றைய பாகிஸ்தானில்) பிறந்தார்.

ஆயுதப்படை கொடி தினம்

  • ஆயுதப்படைகளின் கொடி நாள் (Armed Forces Flag Day) அல்லது இந்தியாவின் கொடி நாள் (Flag Day of India) என்பது இந்தியாவின் ஆயுதப்படைகளின் வீரர்கள் மற்றும் படைவீரர்களை கௌரவிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாள் ஆகும்.
  • இது 1949 முதல் இந்தியாவில் ஆண்டுதோறும் டிசம்பர் 7 அன்று அனுசரிக்கப்படுகிறது.

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம்

TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 07/12/2022
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம்
  • சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தினம் (International Civil Aviation Day) = டிசம்பர் 7
  • நோக்கம் = சர்வதேச சிவில் விமான சேவையின் பங்கு மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த.

நட்பு தினம் (மைத்ரி திவாஸ்)

  • 1971 ஆம் ஆண்டு புதிதாக உருவான பங்களாதேஷை இந்தியா அங்கீகரித்ததைக் குறிக்கும் வகையில் டிசம்பர் 6 ஆம் தேதி “நட்பு தினம்” (மைத்ரி திவாஸ் தினம்) கொண்டாடப்படுகிறது. // MAITRI DIWAS IS BEING OBSERVED ON 6 DEC TO MARK INDIA RECOGNIZING THE NEWLY-FORMED COUNTRY BANGLADESH IN
  • வங்காளதேசம் விடுதலை பெறுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு, டிசம்பர் 6, 1971 அன்று இந்தியா பங்களாதேஷை அங்கீகரித்தது.

போர்ப்ஸ் உலகின் அதிகாரமிக்க 100 பெண்கள் பட்டியலில் 6 இந்திய பெண்மணிகள்

TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 07/12/2022
போர்ப்ஸ் உலகின் அதிகாரமிக்க 100 பெண்கள் பட்டியலில் 6 இந்திய பெண்மணிகள்
  • உலகில் அதிகாரம் மிகக் 100 பெண்களின் பட்டியலை (The World’s 100 Most Powerful Women 2022 – Forbes) போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் 6 இந்திய பெண்மணிகள் இடம் பெற்றுள்ளனர்.
  • 36 வது இடம் = மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
  • 53 வது இடம் = எச்.சி.எல் நிறுவன தலைவர் ரோஷினி நாடார்
  • 54 வது இடம் = இந்திய பங்கு வர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவரான மாதவு புரி புச்
  • 67 வது இடம் = இந்திய எஃகு வாரியத்தின் தலைவரான சோமா மண்டல்
  • 77 வது இடம் = பயோகான் நிர்வாகத் தலைவர் கிரண் மஜூம்தார் ஷா
  • 89 வது இடம் = நைகா நிறுவனர் பால்குனி நாயர்
  • பட்டியலில் முதல் இடம் = ஐரோப்பிய கமிசனின் தலைவர் ஊர்சுளா வான்டர் லையான் உள்ளார்
  • 100 வது இடம் = ஈரானில் ஆடைக் கட்டுபாட்டு போராட்டத்தின் பொழுது உயிரிழந்த “மாஷா அமெனிக்கு” வழங்கப்பட்டுள்ளது.

நிலையான வேளாண்மைக்கான மண் ஆரோக்கிய மேலாண்மை குறித்த தேசிய மாநாடு

  • உலக மண் தினத்தை முன்னிட்டு (டிசம்பர் 5, 2022) நிலையான விவசாயத்திற்கான மண் சுகாதார மேலாண்மை குறித்த தேசிய மாநாட்டை (National Conclave on Soil Health Management for Sustainable Farming) நிதி ஆயோக் புதுதில்லியில் நடத்தியது.
  • ஜெர்மனி மற்றும் இந்தியா இணைந்து இம்மாநாட்டை நடத்தின.
  • மே 2022 இல், இந்தியாவும் ஜெர்மனியும் வேளாண் சூழலியல் மற்றும் இயற்கை வளங்களின் நிலையான மேலாண்மை குறித்த முதல் இருதரப்பு கலங்கரை விளக்க முயற்சியை (first-ever bilateral lighthouse initiative on agro ecology நிறுவுவதற்கான கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டன.

12வது உலக ஹிந்தி மாநாடு

  • 12வது உலக ஹிந்தி மாநாடு (12th World Hindi conference in Fiji) நடைபெற உள்ள இடம் = பிஜி தீவுகள்
  • மாநாட்டின் கருப்பொருள் “இந்தி: பாரம்பரிய அறிவிலிருந்து செயற்கை நுண்ணறிவு வரை” (Hindi: From Traditional Knowledge to Artificial Intelligence)

உலக பாதுகாப்பு மாநாடு

  • வருகின்ற பிப்ரவரி மாதம் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் “சர்வதேச ரயில்வே யூனியன் உலக பாதுகாப்பு மாநாடு” நடைபெற உள்ளது // India to host International Union of Railways World Security Congress in Jaipur
  • இது 18 வது சர்வதேச ரயில்வே யூனியன் உலக பாதுகாப்பு மாநாடு ஆகும்.

யுனஸ்கோவின் உலக அறிவியல் அகாடமியில் பெல்லோஷிப் பெற்ற இந்திய அறிஞர்

  • மைசூருவைச் சேர்ந்த விஞ்ஞானி கே எஸ் ரங்கப்பா யுனெஸ்கோவின் திட்டப் பிரிவான உலக அறிவியல் அகாடமி (The World Academy of Sciences (TWAS)) பெல்லோஷிப்பைப் பெற்றுள்ளார் // Mysuru scientist becomes UNESCO-TWAS fellow
  • இவர் இந்திய அறிவியல் காங்கிரஸ் சங்கத்தின் (ISCA) பொதுத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.

உலகளாவிய சாதனையாளர் விருது

  • HBW News 6 உலகளாவிய சாதனையாளர் விருது (Global Achievers Award) 2022 வெற்றியாளர்களை அறிவித்துள்ளது // Nandan Nilekani, Katrina Kaif awarded Global Achievers Award 2022
  • 2022 பாலிவுட்டில் சாதனை படைத்ததற்காக கத்ரீனா கைஃப், தகவல் தொழில்நுட்பத் துறைக்காக நந்தன் நிலேகனி, பாடலில் சாதனை படைத்த செலினா கோம்ஸ் போன்றோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

ஓஎன்ஜிசியின் தலைவராக ஸ்ரீ அருண் குமார் சிங் நியமனம்

  • ஓஎன்ஜிசியின் தலைவராக ஸ்ரீ அருண் குமார் சிங்கை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது // Government appoints Shri Arun Kumar Singh as Chairman, ONGC
  • அவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இப்பொறுப்பில் இருப்பார்.

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் பேட்டிங் பயிற்சியாளராக ஹெச். கனிட்கர் நியமனம்

  • இந்திய மகளிர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹிருஷிகேஷ் கனிட்கரை பிசிசிஐ நியமித்தது // BCCI appointed former cricketer Hrishikesh Kanitkar as the new batting coach of the India women’s team
  • 2022 இல் ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்தியாவின் U19 அணியின் பயிற்சியாளராகவும் இருந்தார்.

 

 

  • TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 05/12/2022
  • TODAY BEST  CURRENT AFFAIRS IN TAMIL 04/12/2022
  • TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 03/12/2022
  • TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 02/2/2022
  • TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 01/12/2022
  • TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 30/11/2022
  • TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 29/11/2022
  • TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 28/11/2022
  • TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 27/11/2022
  • TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 26/11/2022
  • TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 25/11/2022
  • TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 24/11/2022
  • TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 23/11/2022
  • TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 22/11/2022
  • TODAY BEST CURRENT AFFAIRS IN TAMIL 21/11/2022

Leave a Reply