இராவண காவியம்

இராவண காவியம்

இராவண காவியம்

புலவர் குழந்தை குறிப்பு

  • பெயர் = புலவர் குழந்தை
  • ஊர் = ஈரோடு மாவட்டம் ஓலவலசுப் பண்ணைக்காரர்குடி
  • பெற்றோர் = முத்துச்சாமிக் கவுண்டர், சின்னம்மையார்
  • காலம் = ஜூலை 1, 1906 – செப்டம்பர் 22, 1972

புலவர் குழந்தை நடத்திய இதழ்

  • வேளாண் (மாத இதழ்)

புலவர் குழந்தை செய்யுள் நூல்கள்

  • இராவணகாவியம்
  • அரசியலரங்கம் (சிந்துப்பாவில் தமிழக வரலாற்றினைச் சுவைபடக் கூறுகிறது)
  • காமஞ்சரி (இது பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் மனோன்மணீயம் போல ஒரு நாடகக் காவியமாகும்)
  • நெருஞ்சிப்பழம்
  • உலகப் பெரியோன் கென்னடி
  • திருநணா சிலேடை வெண்பா
  • புலவர் குழந்தைப் பாடல்கள்
  • கன்னியம்மன் சிந்து
  • ஆடி வேட்டை
  • நல்லதம்பி சர்க்கரைத் தாலாட்டு
  • வெள்ளகோவில் வீரகுமாரசாமிரத உற்சவச்சிந்து
  • வீரகுமாரசாமி காவடிச்சிந்து
  • வெள்ளகோவில் வழிநடைச்சிந்து
  • ஆடிப்பேட்டை நல்லதம்பி சர்க்கரைத் தாலாட்டு
  • வெள்ளகோவில் வீரகுமாரசாமி ரத உற்சவச்சிந்து
  • வீரகுமாரசாமி காவடிச்சிந்து
  • வெள்ளகோவில் வழிநடைச்சிந்து

புலவர் குழந்தை உரை எழுதிய நூல்கள்

  • திருக்குறள் குழந்தை உரை (25 நாட்களில் முடித்தார்)
  • தொல்காப்பியப் பொருளதிகாரம்
  • நீதிக்களஞ்சியம்

புலவர் குழந்தை யாப்பிலக்கண நூல்கள்

  • யாப்பதிகாரம்
  • தொடையதிகாரம்
  • இந்நூல் (பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் எனும் இலக்கண நூல் போன்றே இலக்கண நூற்பா நூல்)

புலவர் குழந்தை உரைநடை நூல்கள்

  • தொல்காப்பியர் காலத்தமிழர்
  • திருக்குறளும் பரிமேலழகரும்
  • புவாமுல்லை
  • கொங்கு நாடு
  • தமிழக வரலாறு
  • தமிழ் வாழ்க
  • தீரன் சின்னமலை
  • கொங்குநாடும் தமிழும்
  • கொங்குகுலமணிகள்
  • அருந்தமிழ்விருந்து
  • அருந்தமிழ் அமிழ்து
  • சங்கத் தமிழ்ச் செல்வம்
  • ஒன்றேகுலம்
  • அண்ணல் காந்தி
  • தமிழ் எழுத்து சீர்திருத்தம்

இராவண காவியம்

இராவண காவியம் நூல் அமைப்பு

  • காண்டம் = 5 காண்டங்கள்
  • படலங்கள் = 57 படலங்கள்
  • பாடல்கள் = 3100
  • முதல் படலம் = தமிழகப் படலம்
  • இறுதி படலம் = இறுவாய்ப் படலம்

இராவண காவியம் காண்டப் பிரிவுகள்

  • முதல் காண்டம் = தமிழ்க் காண்டம்
  • 2-வது காண்டம் = இலங்கைக் காண்டம்
  • 3-வது காண்டம் = விந்தக் காண்டம்
  • 4-வது காண்டம் = பழிபுரி காண்டம்
  • 5-வது காண்டம் = போர்க் காண்டம்

புலவர் குழந்தை ஆசிரியர் சிறப்பு

  • இயற்கையிலேயே கவிபாடும் ஆற்றல் வாய்க்கப் பெற்றவர்.
  • இசைப் பாடல்களே இவர் முதன் முதலாகப் பாடிய பாடல்கள்.
  • ஆசிரியர் உதவியின்றித் தாமே முயன்று தமிழ் கற்றுச் சீரிய புலமை எய்தினார்.
  • அதன் அடையாளமாக 1934இல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் புலவர் பட்டம் பெற்றார்.
  • ஆசிரியராகவும் தலைமைத் தமிழாசிரியராகவும் 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
  • இவரது நூல்கள் 2006 இல் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டது.

புலவர் குழந்தை ஆசிரியர் குறிப்பு

  • இராவண காவியம், இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழியில் தோன்றிய காவியங்களுள் ஒன்று.
  • திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் புலவர் குழந்தை அவர்களால் இயற்றப்பட்ட இக்காவியம் 1946 இல் வெளிவந்தது.
  • இராமாயண காவியக் கதையைக் கொண்டே இராவணனைக் காவியத் தலைவனாகக் கொண்டு இக்காவியம் படைக்கப்பட்டது.
  • இக்காவியத்தை வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணனைத் தமிழ்க் கதாநாயகனாகச் சித்திரிக்கிறது.
  • இந்த நூல் சென்னை மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியில் 1948 – ஆம் ஆண்டு ஜூன் 2 – ஆம் தேதி தடைசெய்யப்பட்டு பிறகு 1971-ஆம் ஆண்டு அரசின் தடை நீக்கப்பட்டது.
  • தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தில் புலவர் குழந்தை தம்மை இணைத்துக் கொண்டார்.
  • சுயமரியாதைக் கொள்கையில் உறுதியுடையவராய்த் திகழ்ந்தார். இறை நம்பிக்கை இல்லாதவர்.
  • 1938, 1948 ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டார்.
  • விதவை மணம், கலப்பு மணம், சீர்திருத்தமணம் ஆகியவற்றை முன்னின்று நடத்தினார்.
  • திருக்குறள் குழந்தை உரை என்ற நூலினை இருபத்தைந்து நாட்களில் எழுதி வெளியிட்டார்.
  • புலவர் குழந்தையின் யாப்பிலக்கண நூல்கள் எளிமையாக யாப்பிலக்கணத்தை, கவிதை இயற்றும் நெறிகளை விளக்குகின்றன. அவ்வகையில் யாப்பதிகாரம், தொடையதிகாரம் ஆகியவை சூத்திர வடிவில் இலக்கண நெறிகளை விளக்குவனவாகும்.
  • பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் எனும் இலக்கண நூல் போன்றே இன்னூல் என்னும் இலக்கண நூற்பா நூலை எழுதி வெளியிட்டார்.
  • “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற இயக்கத்தின் போது தமிழ்நாடு தமிழருக்கே என்ற எழுத்துக்கான அச்சு கட்டைகளை செய்து கொடுத்து ஒரு துணி வணிகம் கொண்டு வேட்டி, துண்டு, சேலை கரைகளில் அச்சிட்டு தமிழ்நாடு முழுவதும் பரப்பினார்.

இராவண காவியம்

இராவண காவியம் நூல் குறிப்பு

  • உயிர்க்கொலை மறுப்பு இக்காப்பியத்தின் கருப்பொருள் ஆகும்.
  • 1944-ல் கம்பராமாயணம் குறித்து அறிஞர் அண்ணாவுக்கும், நாவலர் சோமசுந்தர பாரதியார், இரா.பி. சேதுப்பிள்ளை ஆகியோருக்கும் நடந்த சொற் போரும், அதனைத் தொடர்ந்து அப்பேச்சுகளின் தொகுப் பாக வெளிவந்த “தீ பரவட்டும்” எனும் நூலும் தமிழ் மக்களிடையே பரப்பரப்பை ஏற்படுத்தியது.
  • 1946-ல் “செந்தமிழ்க் குழந்தை செப்பினான் அறிவுல கொப்பு மாறே” என்று புரட்சிக் கவிஞர் வழங்கிய சிறப்புப் பாயிரத்தோடு, இராவண காவியம் வெளி வந்தது.
  • “தமிழ் புலவர்கள் எல்லாம் தமிழரை இழிவுபடுத்தும் புராணக் கதைகளையே பாடிவந்தார்கள். அதற்கு மாறாக இராவண கவியத்தைப் படைத்து இழிவைப் போக்கிய புலவர் குழந்தை அவர்களைப் பாராட்டுகிறேன்” என்று 1971-ம் ஆண்டு விழுப்புரத்தில் புலவர் குழந்தையை பாராட்டினார் தந்தை பெரியார்.
 

அறிஞர் அண்ணா

இராவண காவியம் பழைமைக்குப் பயணச்சீட்டு. புதுமைக்கு நுழைவுச் சீட்டு
புரட்சிக் கவிஞரின் புதுக் கவிதை போல, புதிய தமிழகத்தின் ஓவியம் இந்நூல்
தன்மான இயக்கத்தார், தமிழ்ப் பகைவர்கள், காவியமறியாதோர், கலையுணர்வு இல்லாதோர் என்ற அவமொழியினை அடித்துத் துரத்தும் ஆற்றல் ஆயுதம்
தமிழ் மறுமலர்ச்சியின் தலை சிறந்த நறுமலர்
நெடுநாள் ஆராய்ச்சியும், நுண்ணிய புலமையும், இனப்பற்றும் ஒருங்கே அமைந்த காவியம்

தமிழரின் புது வாழ்விற்கான போர் முரசு.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *