எட்டுத்தொகை நூல்கள்
எட்டுத்தொகை நூல்கள்
- எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர்.
- எட்டுத் தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம் பெரும் பாடல் ஒன்று கூறுகிறது.
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம்புறமென்று இத்திறத்த எட்டுத் தொகை |
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
எட்டுத்தொகை நூல்கள் விளக்கம்
- எட்டுத் தொகை நூல்கள் ஆவன,
- எட்டுத் தொகையில் அகம் பற்றிய நூல்கள் = 5 (நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு)
- எட்டுத் தொகையில் புறம் பற்றிய நூல்கள் = 2 (பதிற்றுப்பத்து, புறநானூறு)
- எட்டுத் தொகையில் அகமும் புறமும் கலந்த நூல் = 1 (பரிபாடல்)
- எட்டுத் தொகையில் நானூறு என்னும் எண்ணிக்கையில் குறிக்கப்படும் நூல்கள் = 4 (நற்றிணை நானூறு, அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை நானூறு)
- எட்டுத்தொகையில் எண்ணிக்கையால் பெயர் பெறாத நூல்கள் = 2 (கலித்தொகை, பரிபாடல்)
- கலிப்பா வகையால் ஆன நூல் = கலித்தொகை
- பரிபாட்டு வகையால் ஆன நூல் = பரிபாடல்
- மற்ற ஆறு நூல்களும் ஆசிரியப்பாவால் ஆனது.
- முதலும் முடிவும் கிடைக்காமல் இருக்கும் எட்டுத் தொகை நூல்கள் = 2 (பதிற்றுப்பத்து, பரிபாடல்)
- எட்டுத் தொகை நூல்களுள் காலத்தால் முந்தியது = புறநானூறு
- எட்டுத் தொகை நூல்களுள் காலத்தால் பிந்தியது = பரிபாடல், கலித்தொகை
- எட்டுத் தொகை நூல்களுள் முதன் முதலாக தொகுக்கப்பட்ட நூல் = குறுந்தொகை
எட்டுத்தொகை நூல்கள் ஆசிரியர் பெயர்
எட்டுத் தொகை நூல்கள் ஆசிரியர் பெயர், தொகுத்தோர், தொகுப்பித்தோர் ஆகிய விவரங்கள், அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது..
நூல் | புலவர் | பாடல் | அடி | பொருள் | தொகுத்தவர் | தொகுபித்தவர் | கடவுள் வாழ்த்து பாடியவர் | தெய்வம் |
---|---|---|---|---|---|---|---|---|
நற்றிணை | 175 | 400 | 9-12 | அகம் | தெரியவில்லை | பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி | பாரதம் பாடிய பெருந்தேவனார் | திருமால் |
குறுந்தொகை | 205 | 400 | 4-8 | அகம் | பூரிக்கோ | தெரியவில்லை | பாரதம் பாடிய பெருந்தேவனார் | முருகன் |
ஐங்குறுநூறு | 5 | 500 | 3-6 | அகம் | புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் | யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை | பாரதம் பாடிய பெருந்தேவனார் | சிவன் |
பதிற்றுபத்து | 8 | 100(80) | 8-57 | புறம் | தெரியவில்லை | தெரியவில்லை | ||
பரிபாடல் | 13 | 70(22) | 25-400 | அகம் + புறம் | தெரியவில்லை | தெரியவில்லை | ||
கலித்தொகை | 5 | 150 | 11-80 | அகம் | நல்லந்துவனார் | தெரியவில்லை | நல்லந்துவனார் | சிவன் |
அகநானூறு | 145 | 400 | 13-31 | அகம் | உருத்திர சன்மனார் | பாண்டியன் உக்கிரப்பெருவழுதி | பாரதம் பாடிய பெருந்தேவனார் | சிவன் |
புறநானூறு | 158 | 400 | 4-40 | புறம் | தெரியவில்லை | தெரியவில்லை | பாரதம் பாடிய பெருந்தேவனார் | சிவன் |
எட்டுத்தொகை நூல்களின் சிறப்பு பெயர்கள்
எட்டுத்தொகை நூல்கள் |
வேறு பெயர்கள் |
எட்டுத் தொகை |
எண்பெருந்தொகை |
நற்றிணை |
நற்றிணை நானூறு
தூதின் வழிகாட்டி |
குறுந்தொகை |
நல்ல குறுந்தொகை குறுந்தொகை நானூறு |
ஐங்குறுநூறு |
|
பதிற்றுப்பத்து |
இரும்புக் கடலை |
பரிபாடல் |
பரிபாட்டு ஓங்கு பரிபாடல் இசைப்பாட்டு பொருட்கலவை நூல் தமிழின் முதல் இசைபாடல் நூல் |
கலித்தொகை |
கலி
குறுங்கலி கற்றறிந்தோர் ஏத்தும் கலி கல்விவலார் கண்ட கலி அகப்பாடல் இலக்கியம் |
அகநானூறு |
அகம் அகப்பாட்டு நெடுந்தொகை நெடுந்தொகை நானூறு நெடும்பாட்டு பெருந்தொகை நானூறு |
புறநானூறு |
புறம் புறப்பாட்டு புறம்பு நானூறு தமிழர் வரலாற்று பெட்டகம் தமிழர் களஞ்சியம் திருக்குறளின் முன்னோடி. |
- ஐம்பெரும் காப்பியம்
- ஐஞ்சிறுங் காப்பியம்
- நாலாயர திவ்வியப் பிரபந்தம்