ஐங்குறுநூறு
ஐங்குறுநூறு
- திணை = அகத்திணை
- பாவகை = ஆசிரியப்பா
- பாடல்கள் = 500
- பாடியோர் = 5
- அடி எல்லை = 3-6
ஐங்குறுநூறு விளக்கம்
- ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு
- குறுகிய அடிகளை கொண்டு ஐநூறு பாடல்களை கொண்டதால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது.
தொகுப்பு
- தொகுத்தவர் = புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்
- தொகுப்பித்தவர் = யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
உரை, பதிப்பு
- முதலில் பதிப்பித்தவர் = உ.வே.சாமிநாதர்
- முதலில் உரை எழுதியவர் = ஔவை சு. துரைசாமிப்பிள்ளை
கடவுள் வாழ்த்து
- இந்நூலில் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
- இந்நூலில் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = சிவபெருமான்
நூல் பகுப்பு
- ஐங்குறுநூற்றில் ஒவ்வொரு தினைக்கும் நூறு நூறு பாடல்கள் என்னும் வீதத்தில் நூல் பகுக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு நூறும் பத்து பத்து பாடல்கள் எனப் பத்து பிரிவுகளாக பகுக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு பத்து பாடல்களின் தலைப்பும் “பத்து” என முடிகிறது.
- குரங்குப்பத்து, எருமைப்பத்து, குயிற்பத்து போன்ற தலைப்புகள் உள்ளன.
பாடியோர்
- இந்நூலை இயற்றியவர்கள் பற்றிப் பழம்பெரும் பாடல் ஒன்று கூறுகிறது.
மருதமோ ரம்போகி, நெய்தலம் மூவன் கருதும் குறிஞ்சி கபிலன் – கருதிய பாலை ஓதலாந்தை பனிமுல்லை பேயனே நூலை ஓது ஐங்குறு நூறு |
- மருதம் திணை பாடல்கள் பாடியவர் = ஓரம்போகி
- நெய்தல் திணை பாடல்கள் பாடியவர் = அம்மூவன்
- குறிஞ்சி திணை பாடல்கள் பாடியவர் = கபிலர்
- பாலை திணை பாடல்கள் பாடியவர் = ஓதலாந்தை
- முல்லை திணை பாடல்கள் பாடியவர் = பேயனார்
நூலில் கூறப்படும் அரசர்கள்
கடுமான் |
குட்டுவன் |
ஆதன் |
அவினி |
கொற்கை கோமான் |
மத்தி |
நூலில் கூறப்படும் ஊர்கள்
தொண்டி |
தேனூர் |
கழார் (காவிரி) |
கொற்கை |
கிடைக்காதவை
- ஐங்குறுநூற்றில் உள்ள ஐநூறு பாடல்களில் 129, 130 ஆகிய இரண்டு பாடல்கள் மறைந்து போனதால் 498 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
ஐங்குறுநூறு நூல் குறிப்பு
- தொகை நூல்களில் மருதத்தினையை முதலாவதாக கொண்டு அமைக்கப்பட்ட நூல் இதுவே.
- தாய்முகம் நோக்கியே ஆமைக் குட்டிகள் வளரும் என்ற உண்மையையும், முதலைகள் தம் குட்டிகளையே கொன்று தின்று விடும் என்ற உண்மையையும் கூறப்பட்டுள்ளது.
- அம்மூவனார் இயற்றிய நெய்தல் திணையில் இடம்பெற்றுள்ள தொண்டிப்பத்து, அந்தாதி முறையில் அமைந்துள்ளது.
- சங்க இலக்கியத்தில் உள்ளுறையும் இறைச்சியும் மிகுதியாக இடம் பெற்றுள்ள நூல் ஐங்குறுநூறு.
- இந்திர விழா குறித்து கூறும் தொகை நூல் இதுவே.
- தொல்காப்பியர் குறிப்பிடும் அம்மை என்ற வனப்பு இதில் விரவி வந்துள்ளது.
முக்கிய அடிகள்
- அன்னாய் வாழி வேண்டன்னை நம்படப்பைத்
தேன் மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
உவலைக் கூவல் கீழ
மானுண்டு எஞ்சிய கலுழி நீரே – (கபிலர்)
- நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
விளைக வயலே வருக இரவலர்
என வேட்டோய் யாயே – (ஓரம்போகியார்)
- பூத்த கரும்பில் காய்ந்த நெல்லிற்
கழனி யூரன்
- வாழி ஆதன் வாழி அவினி
- ஐம்பெரும் காப்பியம்
- ஐஞ்சிறுங் காப்பியம்
- நாலாயர திவ்வியப் பிரபந்தம்
- திருவிளையாடற் புராணம்
- தேம்பாவணி
- சீராபுரணம்
- சிற்றிலக்கியங்கள்
- மனோன்மணியம்
- பாஞ்சலிசபதம்