தேவாரம்

சமசீர் கல்வி 10 ஆம் வகுப்பு பாட புத்தகம் தேவாரம்

தேவாரம்

சொற்பொருள்

இடர் – துன்பம் ஏமாப்பு – பாதுகாப்பு
பிணி – நோய் நடலை – துன்பம்
சேவடி –இறைவனின் செம்மையான திருவடிகள் நமன் – எமன்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

இலக்கணக்குறிப்பு

  • நற்சங்கு – பண்புத்தொகை
  • வெண்குழை – பண்புத்தொகை
  • மலர்ச்சேவடி – உவமைத்தொகை
  • மீளா ஆள் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பிரித்தறிதல்

  • பிநியறியோம் = பிணி + அறியோம்
  • எந்நாளும் = எ + நாளும்
  • நாமென்றும் = நாம் + என்றும்

தேவாரம்

திருநாவுக்கரசர் ஆசிரியர் குறிப்பு

  • திருநாவுக்கரசர் திருவாமூரில் பிறந்தவர்.
  • பெற்றோர் = புகழனார், மாதினியார்.
  • இவரது தமக்கையார் திலகவதியார்.
  • இயற் பெயர் = மருணீக்கியார்
  • சிறப்பு பெயர்கள் = தருமசேனர், அப்பர், வாகீசர்.
  • இவரின் நெறி = தொண்டு நெறி
  • இவர் தாண்டகம் பாடுவதில் வல்லவர். அதனால் இவரை “தாண்டக வேந்தர்” எனப்படுவார்.
  • இவரது காலம் கி.பி.ஏழாம் நூற்றாண்டு.
  • திருவாமூர், கடலூர் மாவட்டம் பண்ணுருட்டியை அடுத்து உள்ளது.

தேவாரம் நூல் குறிப்பு

  • தேவாரம் என்னும் சொல்லைத் தே+வாரம் எனப் பிரித்துத் தெய்வத்தன்மையை உடைய இசைப்பாடல்கள் என்று கூறுவர்.
  • தே+ஆரம் எனப் பிரித்து தெய்வத்திற்குச் சூட்டப்பெற்ற பாமாலை என்றும் கூறுவர்.
  • அப்பர் அருளிய பாடல்கள் நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகள்.

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்

  • திருநாவுக்கரசரின் “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்னும் தேவாரப் பாடல், மகாகவி பாரதியாரை “அச்சமில்லை, அச்சமில்லை” எனப் பாடத் தூண்டியது.
  • தமிழகத்தில் விடுதலை வேட்கைக் கனலைத் தம் வீறுகொண்ட பாக்களால் மக்களைத் தட்டியெழுப்பியமகாகவி பாரதியின் “அச்சமில்லை ! அச்சமில்லை!” எனும் பாடலுக்கு முன்னோடி இத்திருத்தாண்டகப் பாடலே.

Leave a Reply