நிற்க நேரமில்லை
இன்றிளைப் பாறுவம் என்றிருந்தால் – வழி என்னென்ன வாகுமோ ஓரிரவில் சென்றிளைப் பாறுக முற்றிடத்தே – தம்பி தேன்வந்து பாயும் உன் நெஞ்சிடத்தே! சாதனைப் பூக்களை ஏந்துமுன்னே – இங்கு நல்லசெடி இளைப் பாறிடுமோ? வேதனை யாவும் மறந்ததுபார் – செடி வெற்றி கொண்டேந்திய பூவினிலே – சாலை இளந்திரையன் |
சொற்பொருள்:
- செத்தை – குப்பைகூளம்
- இளைப்பாறுதல் – ஓய்வெடுத்தல்
ஆசிரியர் குறிப்பு:
- சாலை. இளந்திரையனின் பெற்றோர் இராமையா, அன்னலட்சுமி.
- இவர் திருநெல்வேலி மாவட்டம் சாலைநயினார் பள்ளிவாசல் என்னும் இடத்தில பிறந்தார்.
- தில்லிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவாரக இருந்தார்.
- உலகத்தமிழ் ஆராய்சிக் கழகம், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், தில்லித் தமிழ் எழுத்தாளர் சங்கம், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் தோன்றக் காரணமாக இருந்தவர்.
- 1991இல் “பாவேந்தர் விருதினை” பெற்றவர்.
- காலம் = 06.09.1930 – 04.10.1998.
நூல் குறிப்பு:
- இப்பாடல் “பூத்தது மானுடம்” என்னும் கவிதைத் தொகுப்பில் இல்லது.
- மேலும் இவர் புரட்சி முழக்கம், உரை வீச்சு போன்ற நூல்களை படைத்துள்ளார்.
நூலகம்:
- ஒரு மனிதன் ஆண்டுக்கு 2000 பக்கங்களாவது படித்தால் தான் அன்றாட உலக நடப்புகளைத் அறிந்த மனிதனாகக் கருதப்படுவான் என யுனெஸ்கோ கூறியுள்ளது.
- கிரீஸ் நகர அரசுகளே முதன் முதலாக மக்களுக்கான நூல் நிலையங்களை அமைத்தன.
- இந்தியாவில் உள்ள நூலகங்களில் கல்கத்தா தேசிய நூலகம் முதன்மையானது.
- புத்தகச்சாலை, ஏடகம், சுவடியகம், சுவடிச்சாலை, வாசகசாலை, படிப்பகம், நூல்நிலையம், பண்டாரம் என நூலகம் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.
- ஆங்கிலத்தில் “லைப்ரரி” என்னும் சொல் நூலகத்தை குறிக்கின்றது.
- இலத்தின் மொழியில் “லிப்ரா” என்னும் சொல்லிற்குப் புத்தகம் என்பது பெயர்.
- இந்தியாவிலேயே முதன் முறையாகத் தமிழக அரசுத் தான் 1948ஆம் ஆண்டு சென்னை பொது நூலகச் சட்டத்தை இயற்றியது.
- தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை “புத்தகப்பூங்கொத்து” என்னும் வகுப்பறை நூலகத் திட்ட்டத்தை தொடங்கியுள்ளது.
- இந்திய நூலகத் தந்தை = சீர்காழி சீ.இரா.அரங்கநாதன்.