சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் பாம்புகள்

பாம்புகள்

  • பாம்புகள் ஊர்வன வகையை சார்ந்தவை.
  • சில பாம்புகள் குட்டிபோடும், பெரும்பாலானவை குஞ்சி பொரிப்பன.
  • பாம்பினம் உலகில் மனித இனம் தோன்றுவதற்கு பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது.
  • உலகம் முழுவதும் 2750 வகை பாம்புகள் உள்ளன. இந்தியாவில் 244 வகை பாம்புகள் உள்ளன.
  • 52 வகை பாம்புகளில் மட்டுமே நச்சுத்தன்மை வாய்ந்தவை.
  • பாம்பு பால் குடிக்காது. அவை விழுங்குகிற எலி, தவளைகள் உடம்பில் உள்ள நீர்ச்சத்தே அதற்கு போதும்.
  • பாம்பானது, தான் பிடிக்கும் இரையை கொள்ளவும், செரிமானத்திற்காகவும் தான் தன்னுடைய எச்சிலில் நஞ்சு வைத்துள்ளது.
  • பாம்புகளுக்கு காது கேட்காது. அவை தரையில் ஏற்படும் அதிர்வுகளை உணர்ந்து செயல்படும்.
  • வயலிலுள்ள எலிகளை பாம்பு அழிப்பதால், பாம்புகளை “விவசாயிகளின் நண்பன்” என்று அழைக்கப்படும்.
  • பாம்பு கடித்தவுடன் கடிபட்ட இடத்தை அசையாமல் வைத்து, கட்டுபோட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
  • இந்தியாவிலுள்ள இராஜநாகம் தான் உலகிலேயே மிக நீளமான நஞ்சுள்ள பாம்பு. 15 அடி நீளமுடையது. கூடுகட்டி வாழும் ஒரே வகை பாம்பு இது. இராஜநாகம் மற்ற பாம்புகளையும் உணவாக்கி கொள்ளும்.
  • ஒரு பாம்பை கொன்றால், அதன் இணைபாம்பு பழி வாங்கும் என்று சொல்வதுண்டு. இது உண்மையன்று. கொள்ளப்பட்ட ஒருவகை வாசனைத் திரவியம் மற்றப் பாம்புகளையும் அந்த இடம் நோக்கி வரவழைக்கிறது. பழிவாங்க, பாம்புகள் வருவதில்லை.
  • பாம்பு தன் நாக்கை அடிகடி வெளியே நீட்டும். சுற்றுபுரத்தின் வாசனையை அறிந்து கொள்ளத் தான் பாம்பு அவ்வாறு செய்கிறது.
  • நல்ல பாம்பின் நநஞ்சு கோப்ராக்சின் (cobrozincobrozin) எனும் வலி நீக்கி மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
  • இந்திய அரசு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972இன்படி, தோலுக்காகப் பாம்புகள் கொள்ளபடுவதைத் தடுக்க சட்டம் நிறைவேற்றி உள்ளது.

Leave a Reply