கல்விக்கு எல்லை இல்லை
கற்றதுகைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்(று) உத்தர கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த வெறும்பந் தயம்கூற வேண்டாம் புலவீர் எறும்புந்தன் கையால்எண் சாண் – ஔவையார் |
சொற்பொருள்:
- கைம்மண்ணளவு – ஒரு சாண் எனவும் பொருள் கொள்வர்
- மெத்த – மிகுதியாக
- புலவீர் – புலவர்களே
- கலைமடந்தை – கலைமகள்
ஆசிரியர் குறிப்பு:
- இங்கு குறிப்பிடும் ஔவையார், சங்க கால அவ்வையாருக்கு மிகவும் பிற்பட்டவர். கம்பர், ஓட்டகூதர், புகழேந்திப்புலவர் முதலிய புலவர்கள் இவர் காலத்தில் வாழ்ந்ததாகக் கூறுவர்.