சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் தமிழ் நாடக முன்னோடிகள்

தமிழ் நாடக முன்னோடிகள்

நாடகம்:

  • கண்ணுக்கும் காதுக்கும் மனத்துக்கும் இன்பம் பயக்கும் கலை நாடகக்கலை.
  • உணர்ச்சியை தூண்டி, உள்ளத்தில் புதைத்து கிடக்கும் அன்பையும் அறிவையும் வெளிப்படுத்தி மக்களைப் பண்படுத்தும் சிறந்த கலை நாடகம்.
  • சயந்தம், முறுவல், மதிவாணன் நாடகத்தமிழ், செயிற்றியம் முதலிய நாடக இலக்கான நூல்களின் பெயர்கள் மட்டுமே இப்போது கிடைக்கின்றன.
  • இடைக்காலச் சோழப் பேரரசர்கள் ஆதரவில் ஆலயங்களில் நாடங்கங்கள் நடத்தப் பெற்றுள்ளன என அறிகிறோம்.

பரிதிமாற் கலைஞர்(1870 – 1903):

தமிழ் நாடக பேராசிரியர்
  • உயர்தனிச் செம்மொழித் தகுதி தமிழுக்கே உண்டு என அக்காலத்திலேயே முழங்கியவர்.
  • சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தம் பெயரைத் தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என மாற்றி அமைத்துக் கொண்டார்.
  • இவர், தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டே நாடகத் தொண்டாற்றினார்.
  • மேலைநாட்டு நாடக ஆசிரியர்களான ஷேக்ஸ்பியர், எப்சன், மோலியர் ஆகியோரைப் போன்று தமிழகத்தில் நாடகாசிரியர்கள் தோன்ற வேண்டும் எனப் பெரிதும் விழைந்தவர்.
  • ரூபாவதி, கலாவதி, மான்விஜயம் என்பது இவரின் நாடங்கங்கள்.
ரூபாவதி, கலாவதி, மானவிஜயம், நாடகவியல்
  • இவர் வடமொழி, மேனாட்டு மரபுகளைத் தமிழ் நாடக மரபோடு இணைத்து “நாடகவியல்” என்னும் நூலைப் படைத்தார்.
  • இவரது “மானவிஜயம்” நாடகம், “களவழி நாற்பது” என்னும் இலக்கியத்தை அடிப்படையாக கொண்டு இயற்றப்பட்டது. சேரமான் கணைக்கால் இரும்போரையுடன் புலவர் பொய்கையாரும் இறந்துபடுகின்றார்; இவ்விருவர் இறப்பிற்கும் தானே காரணம் என்று எண்ணிய சோழன் செங்கணான்
“மானப் பெருமையை மனக்கொண்டு அந்தோ
ஈனப் பாரில் இருத்தல் வேட்டிலை
உண்ணும் போழ்தினில் உன்னைத் கொன்றவன்
செங்கணான் எனும்இச் சிறுமதி யுடையான்”
  • என்று புலம்பித் தன்னை மாய்த்துக்கொள்ளும் காட்சி, செந்தமிழ் நடைபயில, அவலச்சுவையை வெளிப்படுத்தும் இடமாகும்.

சந்க்கரதாசு சுவாமிகள்(1867 – 1920):

நாடகத்தமிழ் உலகின் இமயமலை, தமிழ்த் நாடக தலைமைஆசிரியர்
  • நாடகம் மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே சுவாமிகளின் முதல் நோக்கமாகும்.
  • எனவே, பாமர மக்களுக்குத் தெரிந்த பழங்கதைகளை நாடகமாக்கினார்.
  • நாடகத்தைச் சமுதாய சீர்திருத்தக் கருவியாகவும் கையிலெடுத்த சுவாமிகள், தம் நாடகங்கள் வாயிலாகப் பக்தி, ஒழுக்கம் ஆகியனவற்றை வலியுறுத்தி, மக்களுக்கு நல்லறிவு புகுட்டினார்.
  • சிறுவர்களைக் கொண்டு நாடகக் குழுக்களைத் தோற்றுவித்தார்.

நாடகங்கள்:

வள்ளி திருமணம், கோவலன் சரித்திரம், சதி சுலோச்சனா, இலவகுசா, பக்தப் பிரகலாதா, நல்லதங்காள், சதி அனுசுயா, வீர அபிமன்யு,
  • இவர் நாற்பது நாடகங்களை இயற்றியுள்ளார்.

புத்தநெறி சுப்பிரமணியம் பாராட்டு:

“துடிப்பிருக்கும் சங்கரதாசு எழுத்தில் எல்லாம்
சுவைசொட்டும் சந்தநயம் தேய்ந்திருக்கும்”
  • என்று சுவாமிகளின் சந்தப்பாடல்களை பற்றி புகழ்கிறார்.

சதி சுலோசனா:

  • சதி சுலோச்சனா நாடகத்தில் இந்திரசித்து, தன் நண்பனிடம் பூக்கள் பற்றிக் கேட்க,
“பூவின் வேய்வறம் பலகோடி அதனை
எவர் போதிப்பார் தேடி
அப்பு கலப்பு பதிப்பு கொதிப்பு
செப்பு அருப்பு இருப்பு நெருப்பு
உப்பு உரப்பு கசப்பு புளிப்புஇத்தனை பூவிற்குமேல் இரவில் கண்விழிப்பு
இயம்பிய மொழியெல்லாம் தமிழ்ப் புத்தகக் குறிப்பு”
  • என அடுக்குமொழி பகர்வது இவரது சந்த நடைக்குச் சான்றாகும்.

கோவலன் சரித்திரம்:

  • இவர் இயற்றிய “கோவலன் சரித்திரம்” மதுரையில் அரங்கேறியபொழுது, காற்சிலம்பு விற்று வர நகருக்குப் போவதாகக் கோவலன் கூறக் கண்ணகியோ,
“மாபாவியோர் கூடி வாழும் மாநகருக்கு
மன்னா போகாதீர்”

என்று பாடுவது போன்ற காட்சி. இதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டது.

  • சுவாமிகள் அவையினர் முன்பு, “மா என்பது அலைமகளையும், பா என்பது கலைமகளையும், வி என்பது மலைமகளையும் குறிக்கிறது” என்று திருவிளையாடல்புராணம் சான்று காட்டி விளக்கினார்.

நடிப்புத் திறமை:

  • நல்ல உடற்கட்டும் எடுப்பான தோற்றமும் உடைய இவர் “எமன், இராவணன், இரணியன்” முதலிய வேதங்கள் புனைந்து மேடையில் நிற்கும் பொது பார்பவர்களுக்குக் கிலி அடிக்கும். இவர் எழுத்துத் திறமையோடு நடிப்புத் திறமையும் பெற்றிருந்தார்.

பம்மல் சம்பந்தனார்(1875 – 1964):

தமிழ் நாடகத் தந்தை, கலைஞர்
  • பம்மல் சம்பந்தனார் தனது 18வது வயதில் “சுகுணவிலாச சபையைத்” தொடினார்.
  • இவர் தேவையற்ற ஆடல் பாடல்களைக் குறைத்தார்.

கலைஞர்:

  • பம்மல் சம்பந்தனார், கட்டுக்குலையாதக் நாடகக் குழுவை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.
  • அதனால், நாடகர்களால், “கலைஞர்” என மதிக்கப்பட்டார். இவர் நீதித்துறையில் பணியாற்றியவர்.

நாடகங்கள்:

  • இவர் 94 நாடகங்களைத் படைத்துள்ளார்.
மனோகரா, யயாதி, சிறுத்தொண்டன், கர்ணன், சபாபதி, பொன்விலங்கு, வாணிபுரத்து வீரன் (ஷேக்ஸ்பியர் நாடகங்களை தழுவி), விரும்பிய விதமே, அமலாதித்தியன்

கேளிக்கை நாடகம், நையாண்டி நாடகம்:

  • இவர், நாடகக் காட்சிக்கேற்பத் திரைச்சீலைகளையும் பொருத்தமான ஓவியங்களையும் தொங்கவிடுமாறு வற்புறுத்தினார். இவர் கேளிக்கை நாடகம் என்ற வகையினையும், நாடக நையாண்டியினையும் தமிழ் நாடக உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அடுக்குமொழிகள்:

“போட்டும் புனைந்தழகாய்க் கட்டும்
பீதாம்பரமாம் பட்டும்
சோதி செய் பகட்டும்
செயலைக் கண்டு கிட்டும் வருணிக்கும்
பொழுது எனக்கு மட்டும்.

சபாபதி நாடகம்:

  • இவரின் சபாபதி என்ற நாடகம் இன்றளவும் மறக்கமுடியாத நகைச்சுவை நாடகம் ஆகும்.
  • சபாபதி என்ற இந்நாடகம் படிக்கவும் பார்க்கவும் நகைச்சுவையை ஏற்படுத்தவல்லது.

குறள் மாற்றுதல்:

  • குறள் வடிவத்தைத் தன் போக்கிற்கேற்ப மாற்றி எழுதுவார்.
“சூதினும் சூதானது யாதெனில் சூதினும்
சூதே சூதா னது”

2 thoughts on “சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் தமிழ் நாடக முன்னோடிகள்”

    1. பழைய சமச்சீர் கல்வி 7 ஆம் வகுப்பு புத்தகம்

Leave a Reply