திரு.வி.க
பண்ணினை இயற்கை வைத்த பண்பனே போற்றி போற்றி பெண்மையில் தாய்மை வைத்த பெரியனே போற்றி போற்றி வண்மையை உயிரில் வைத்த வள்ளலே போற்றி போற்றி உண்மையில் இருக்கை வைத்த உறவனே போற்றி போற்றி – திரு.வி.க |
சொற்பொருள்:
- பண் – இசை
- வண்மை – கொடைத்தன்மை
- போற்றி – வாழ்த்துகிறேன்
ஆசிரியர் குறிப்பு:
- திரு.வி.கலியாணசுந்தரனார்(திருவாரூர் விருதாச்சலனார் மகனார் சுருக்கமே திரு.வி.க என்பது)
- பெற்றோர் = விருதாச்சலனார் – சின்னம்மையார்
- பிறந்த ஊர் = காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம்.
- இவ்வூர், தற்போது தண்டலம் என அழைகப்படுகிறது. இவ்வூர் சென்னையை அடுத்துள்ள போரூருக்கு மேற்கே உள்ளது.
சிறப்பு:
- இவர் தொழிலாளர் நலனுக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்டார்.
- மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தார்.
- இவரின் தமிழ்நடையைப் போற்றித் “தமிழ் தென்றல்” எனச் சிறப்பிக்கபடுகிறார்.
படைப்புகள்:
|
காலம்:
- 26.08.1883 – 17.09.1953
நூல் குறிப்பு:
- வாழ்த்துப் பகுதியில் இடம்பெற்றுள்ள இப்பாடல், திரு.வி.க இயற்றிய “பொதுமை வேட்டல்” என்னும் நூலில் “போற்றி” என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது.
- “தெய்வ நிச்சயம்” முதலாக “போற்றி” ஈறாக உள்ள நாற்பத்து நான்கு தலைப்புகளில், நானூற்று முப்பது பாக்களால் ஆனது இந்நூல்.
பணி:
- இவர் சென்னை இராயப்பேட்டை வெஸ்லி பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.