Skip to content
முக்கூடற்பள்ளு
சொற்பொருள்:
- தத்தும் புனல் – அலையெறியும் நீரும்
- கலிப்புவேளை – கருமார், கொல்லர், தட்டார் முதலியோர் செய்யும் தொழில்கள்
- மதோன்மத்தர் – சிவபெருமான்
ஆசிரியர் குறிப்பு:
- இந்நூலின் ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை.
- ஆயினும் நாடகப் பாங்கில் அமைந்த இந்நூலை இயற்றியவர் “என்னயினாப் புலவர்” எனச் சிலர் கூறுவர்.
- சந்த நயம் மிக்க நூல்.
- திருநெல்வேலி மாவட்ட பேச்சு வழக்கு அமைப்பில் வடிக்கப்பட்டுள்ளது.
நூல் குறிப்பு:
- நீர் நிறைந்த பள்ளமான சேற்று நிலத்தில் தொழில் செய்யும் பள்ளர்களை பற்றியது.
- திருநெல்வேலியில் உள்ள “தன்பொருணை, சிற்றாறு, கோதண்டராம ஆறு” ஆகிய மூன்று ஆறுகளும் கூடும் இடம் “முக்கூடல்” ஆகும்.
- முக்கூடலை “ஆசூர் வடகரை நாடு” என்றும் அழைப்பர்.
- இதன் தென்பகுதியில் உள்ளது “சீவல மங்கைத் தென்கரை நாடு”.
- தென்கரை நாட்டில் “மருதசீர்” வீற்றிருக்கும் ஊர் மருதூர்.
- முக்கூடலில் வாழும் பள்ளி மூத்த மனைவி, மருதூரில் வாழும் பள்ளி இளைய மனைவி.
- இருவரையும் மணந்து திண்டாடும் பள்ளனின், வாழ்க்கை வளத்தை கூறுகிறது இந்நூல்.
Related