இலக்கியத்தில் நகைச்சுவை
நகைச்சுவை:
- இலக்கியச் சுவைகளில் மிகவும் நுட்பமானது நகைச்சுவை.
- இச்சுவையை உணர்ந்து போற்ற தனி ஆற்றல் வேண்டும்.
- நகைச்சுவையை போற்றுவதற்குத் தேவைப்படும் ஆற்றல், அதைக் கவிதைகளில் வடிபதிலேயே உள்ளது.
தொல்காப்பியம்:
- தொல்காப்பியம், “எள்ளல், இளமை, அறியாமை, மடமை” ஆகிய நான்கு காரணங்களால் நகைச்சுவை தோன்றும் என்கிறது.
திருக்குறள்:
-
- நகைச்சுவையின் இன்றியமையாமைப் புலப்படுத வந்த வள்ளுவர்,
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன் றிருள். |
- என நகைச்சுவை உணர்வு இல்லாதவர்களுக்கு பகலும் இருளாகத் தோன்றும் என்கிறார் காந்தியடிகள்
- காந்தியடிகள், நகைச்சுவை உணர்வு மட்டும் தனக்கு இல்லையெனில், எப்பொழுதோ தனது வாழ்கையை இழந்திருக்கக்கூடும் எனக் கருதினார்.
இலக்கியங்களில் நகைச்சுவை:
-
- கம்பராமாயணத்தில் கம்பரின் நகைச்சுவை உணர்வு அவர் தம் பாடல்களின் மூலம் அறியலாம்.
அஞ்சலை அரக்க! பார்விட் டந்தர மடைந்தா னன்றே வெஞ்சின வாழி, மீலான், வாளும்போய் வீழ்ந்ததன்றே |
- வாலியை பற்றி அனுமனிடம் இராவணன் வினவும் போது, அனுமன் அதற்கு, “அஞ்ச வேண்டா! அரக்கர் தலைவா, வாலியும் இறந்தான், அவனது வாழும் இறந்துவிட்டது! ஆனால் சூரியகுலத் தோன்றலாகிய வாலியின் அழிவுக்குக் காரணமானது இராமனின் ஒரு கணையே என்பதை மட்டும் மறந்துவிடாதே!” எனக் கூறினான்.
- இராவணனுக்கு வாலியை பற்றி கவலை இல்லை, அவனின் வாழை பற்றி தான் கவலை.
கலிங்கத்துப்பரணி:
- சிற்றிலக்கியங்களில் ஒன்றான கலிங்கத்துப் பரணியில் சயங்கொண்டார் நகைச்சுவை உணர்வு தோன்ற, பல பாடல்களைப் பாடியுள்ளார்.
- காணமுடியாத பேய்களை உருவாக்கி, உயிருள்ள உண்மைப்பிறவிகள் போல் நம் கண்முன்னே நடமாடவிட்டு நகைச்சுவைக்குரிய செயல்களை அவற்றிடையே காட்டியுள்ளார்.
காளமேகப்புலவர்:
- இரு பொருள் தருமாறு பாடுவதில் வல்லவர்.
- “நாங்கள் கவிராசர்கள்” என்று செருக்குடன் கூறிய புலவர்களின் செருக்கை அடக்கும்படி, கவி என்பதற்கு குரங்கு என்னும் பொருள் தோன்றுமாறு
வாலெங்கே? நீண்டுஎழுந்த வல்லுகி ரெங்கே? நாலு காலெங்கே? ஊன்வடிந்த கண்ணெங்கே? – சாலப் புவிராயர் போற்றும் புலவர்காள்! நீங்கள் கவிராயர் என்றிருந்தக் கால். |
எனும் பாடலைப் பாடினார்.
பாரதிதாசன்:
- பாவேந்தர் பாரதிதாசன் மயிலின் கழுத்து நீண்டு இருப்பதாய் நகைச்சுவையுடன் பாடியுள்ளார்.
அயலான் வீட்டில் அறையில் நடப்பதை எட்டிப் பார்க்கா திருப்ப தற்கே இயற்கை யன்னை இப்பெண் கட்கெல்லாம் குட்டைக் கழுத்தைக் கொடுத்தான்; உனக்கோ கறையொன் றில்லாக் கலாப மயிலே! நிமிர்ந்து நிற்க நீள் கழுத்து அளித்தான். |
- பெண்களின் கழுத்து நீண்டிருந்தால், அண்டைவீடு அறையிலே நடப்பதை ஆர்வத்தோடு பார்ப்பார்களாம் மயில் அப்படிப் பார்காதாம்” அனக் கூறுகிறார்.
கவிமணி:
- நாஞ்சில் நாடு கவிஞர் கவிமணி தேசிய விநாயகம், “மருமக்கள் வழி மான்மியம்” என்னும் நகைச்சுவை நூலினை அளித்துள்ளார்.
- இந்நூல் “நகைச்சுவை களஞ்சியம்” எனப்படுக்கிறது.