கணக்கிடுவதற்காக முதலில் எளிதான “மணிச்சட்டம்” உருவாக்கப்பட்டது. இதுவே கணினி உருவாக முதல் படியாக இருந்தது.
பாரிஸ் நகரை சேர்ந்த பிளேஸ் பாஸ்கல் என்பவர் கணக்கிடும் கருவியை கண்டுபிடித்தார்.
1833இல் இங்கிலாந்தை சேர்ந்த சார்லஸ் பாப்பேஜ் என்பவர் கணினியை முதலில் வடிவமைத்தார். இவரே “கணினியின் தந்தை” என அழைக்கப்படுகிறார்.
ஆங்கில கவிஞர் பைரனின் மகள் லேடி லவ்வோஸ் என்பவர், கணிதச் செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வகுத்தமையால் அவர் “முதல் செயல் திட்ட வரைவாளர்” எனப் போற்றப்படுகிறார்.
ஹார்வார்ட் பல்கலைக்கலகத்தை சேர்ந்த பேராசிரியர் ஹோவார்டு ஜக்கன் என்பவர் எண்ணிலக்க கணினியை கண்டுபிடித்து அதற்கு “ஹார்வார்டு மார்க்-1” எனப் பெயரிட்டனர்.
1960ஆம் ஆண்டு மின்காந்த நாடா பயன்படுத்தி செய்தி அனுப்பப்பட்டது.
சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டிம்பெர்நெர் லீ என்னும் வல்லுநர் “உலகளாவிய வலைப்பின்னல்” எனப் பெயரிட்டார். இதனை “வையாக விரிவு வலை” எனவும் அழைக்கலாம்.
“கடந்த 20 ஆண்டுக் கணினிப் பயணத்தில் இணையத்தின் பங்கு மிகச் சிறந்தது என்றே சொல்வேன்” என பில் கேட்ஸ் கூறுகிறார்.