சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் ஜி.யு.போப்

ஜி.யு.போப்

பிறப்பு:

 • பெயர் = ஜியார்ஜ் யுக்ளோ போப் என்று அழைக்கப்படும் ஜி.யு.போப்
 • பிறந்த ஊர் = பிரான்ஸ் நாட்டின் எட்வர்ட் தீவு
 • பிறப்பு = கி.பி.1820ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி
 • பெற்றோர் = ஜான் போப், கேதரின் போப்

ஹென்றி:

 • போப்பின் தமையனார் ஹென்றி என்பவர், தமிழகத்தில் கிறித்துவமதத்தைப் பரப்பும் சமய குருவாகப் பணியாற்றினார்.
 • அவரைப்போன்று பணியாற்ற விரும்பி, தமது 19வது வயதில் தமிழகம் வந்தார்.
 • அவர் பாய்மரக் கப்பலில் தமிழகம் வந்து சேர எட்டு மாதங்கள் ஆகின.

முதல் சமயப்பணி:

 • தமிழ்நாட்டில் சென்னை சாந்தோம் பகுதியில் முதலில் சமயப்பணி ஆற்றினார்.

திருநெல்வேலி – சாயர்புரம்:

 • திருநெல்வேலி மாவட்டம் சாயர்புரம் என்னும் பகுதியில் சமயப்பணி ஆற்றினார்.
 • அங்கு பள்ளிகளை நிறுவினார். கல்விப்பனியையும் சமயப்பணியையும் ஒருங்கே ஆற்றினார்.
 • சமயக்கல்லூரியில் தமிழ் இலக்கியங்கள், ஆங்கில இலக்கியங்கள் முதலியவற்றையும் கிரேக்கம், இலத்தின், எபிரேயம் முதலிய மொழிகளையும் கற்றுத்தர ஏற்பாடு செய்தார்.
 • கணிதம், அறிவாய்வு(தருக்கம்), மெய்யறிவு(தத்துவம்) ஆகியவற்றை கற்பிக்கும் கல்லூரி ஆசிரியராகவும் பணியாற்றினார்.
 • திருநெல்வேலியில் 1842 முதல் 1849 வரை பணியாற்றினார்.

திருமணம்:

 • 1850இல் இங்கிலாந்து சென்று திருமணம் செய்துக்கொண்டு, தம் மனைவியுடன் மீண்டும் தமிழகம் வந்து தஞ்சாவூரில் சமயப்பணி ஆற்றினார்.

தமிழ் இலக்கிய ஆர்வம்:

 • தஞ்சையில் பணியாற்றிய எட்டு ஆண்டுக் காலத்தில், புறநானூறு முதலான சங்க நூல்களையும் நன்னூல் முதலான இலக்கணங்களையும் பயின்றார்.
 • அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

ஏடுகளில் தமிழ் பணி:

 • “இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு” போன்ற ஏடுகளில் ஆராய்ச்சி கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினார்.
 • அக்கட்டுரைகளில் புறநானூற்றுப் பாடல்களும், புறப்பொருள் வெண்பாமாலைத் திணை விளக்கங்களும், தமிழ்ப்புலவர் வரலாறும் இடம் பெற்றன.

தமிழ் செய்யுட் கலம்பகம்:

 • போப் உயர்ந்த பண்பாட்டுக்குரிய பொறுமை, சினமின்மை, நட்பு முதலானவற்றை விளக்கும் 600 செய்யுள்களை, நீதிநூல்களில் இருந்து எடுத்து,  “தமிழ் செய்யுட் கலம்பகம்” என்னும் தொகுத்து அதன் விளக்கங்களையும் எழுதி வெளியிட்டார்.

தமிழ் பாடநூலின் முன்னோடி:

 • பள்ளி குழந்தைகளுக்காக வினாவிடை முறையில் இரு இலக்கண நூல்களை எழுதி வெளியிட்டார்.
 • பெரியவர்கள் கற்கும் வகையில் இலக்கண நூலொன்றையும் படைத்தார்.
 • மேலை நாட்டார் தமிழை எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில் “தமிழ்-ஆங்கில அகராதி” ஒன்றையும், “ஆங்கிலம்-தமிழ் அகராதி” ஒன்றையும் எழுதி வெளியிட்டார்.
 • பழைய தமிழ் இலக்கியங்களில் இருந்து சில செய்யுள்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டு, அதனைப் பாடநூலாக வைக்க ஏற்பாடு செய்தார்.

உதகை:

 • 1858ஆம் ஆண்டு உதகமண்டலம் சென்ற அவர், பள்ளி ஒன்றைத் தொடங்கி அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

தமிழ்த்தொண்டு:

 • இங்கிலாந்திற்கு சென்ற போப் 23 ஆண்டுகள் இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக பணிபுரிந்தார்.
 • திருக்குறளை 40 ஆண்டுகள் படித்துச் சுவைத்த போப் அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து செப்டம்பர் 1, 1886ஆம் ஆண்டு வெளியிட்டார்.
 • தமது 86ஆம் வயதில் 1900ஆம் ஆண்டு திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பினை வெளியிட்டார்.

தமிழ் மாணவன்:

 • 13.02.1908 அன்று போப் தம் இன்னுயிரை நீத்தார்.
 • அவர், தம் கல்லறையில் “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்” என எழுத வேண்டும் என்று தமது இறுதிமுறியில் எழுதி வைத்தார்.
 • அவர் தன்னை “தமிழ் மாணவன்” என்றே தம்மை கூறிக்கொண்டார்.

Leave a Comment

Your email address will not be published.