திருவருட்பா
வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றாறைக் கண்டுளம் பதைத்தேன் நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன் ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன். – இராமலிங்க அடிகள் |
சொற்பொருள்:
- பசியறாது – பசித்துயர் நீங்காது
- அயர்ந்த – களைப்புற்ற
- நீடிய – தீராத
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் – இராமலிங்க அடிகளார்
- பெற்றோர் – இராமையா, சின்னம்மை
- ஊர் – சிதம்பரத்திற்கு அருகிலுள்ள மருதூர்
- சிறப்பு பெயர் – திருவருட்பிரகாச வள்ளலார்
- சிறப்பு – வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம், சத்திய ஞானசபை, சத்திய தருமசாலை ஆகியவற்றை நிறுவினார்.
- இயற்றிய நூல்கள் – திருவருட்பா, சீவகாருணிய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்
- கால – 1823-1874
நூல் குறிப்பு:
- திரு + அருள் + பா = திருவருட்பா.
- இறைவன் திருவருளைப் பெறுவதற்காகப் பாடிய பாடல் என்றும், இறைவனின் திருவருளால் பாடிய பாடல் என்றும் இருவகைப் பொருள் கொள்வர்.
- இது 5818 பாடல் கொண்டது.