சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருவருட்பா

திருவருட்பா

வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த
வெற்றாறைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ்
சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.
– இராமலிங்க அடிகள்

சொற்பொருள்:

  • பசியறாது – பசித்துயர் நீங்காது
  • அயர்ந்த – களைப்புற்ற
  • நீடிய – தீராத

ஆசிரியர் குறிப்பு:

  • பெயர் – இராமலிங்க அடிகளார்
  • பெற்றோர் – இராமையா, சின்னம்மை
  • ஊர் – சிதம்பரத்திற்கு அருகிலுள்ள மருதூர்
  • சிறப்பு பெயர் – திருவருட்பிரகாச வள்ளலார்
  • சிறப்பு – வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம், சத்திய ஞானசபை, சத்திய தருமசாலை ஆகியவற்றை நிறுவினார்.
  • இயற்றிய நூல்கள் – திருவருட்பா, சீவகாருணிய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்
  • கால – 1823-1874

நூல் குறிப்பு:

  • திரு + அருள் + பா = திருவருட்பா.
  • இறைவன் திருவருளைப் பெறுவதற்காகப் பாடிய பாடல் என்றும், இறைவனின் திருவருளால் பாடிய பாடல் என்றும் இருவகைப் பொருள் கொள்வர்.
  • இது 5818 பாடல் கொண்டது.

Leave a Reply