திருக்குறள்
சொற்பொருள்:
- வினை – செயல்
- காப்பு – காவல்
- நீரவர் – அறிவுடையார்
- கேண்மை – நட்பு
- நவில்தொறும் – கற்கக்கற்க
- நயம் – இன்பம்
- நகுதல் – சிரித்தல்
- கிழமை – உரிமை
- அகம் – உள்ளம்
- ஆறு – நல்வழி
- உய்த்து – செலுத்தி
- உடுக்கை – ஆடை
- கொட்பின்றி – வேறுபாடு இல்லாமல்
- புனைதல் – புகழ்தல்
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் = திருவள்ளுவர்
- வேறுபெயர்கள் = முதற்பாவலர், பொய்யில் புலவர், பெருநாவலர், செந்நாப்போதார்
- காலம் = கி.மு. 31ம் நூற்றாண்டு
சிறப்பு:
- பாரதியார் இவரை
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகல் கொண்ட தமிழ்நாடு” என்றார்.
- பாரதிதாசன் இவரை
“ வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” என்றார்.
நூல் குறிப்பு:
- இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- குறள் வெண்பாக்களால் ஆனதால், குறள் எனவும், மேன்மை கருதி திரு என்னும் அடைமொழியுடன் திருக்குறள் எனவும் அழைக்கப்பெறுகிறது.
- இது “உலகப்பொதுமுறை” என போற்றப்படுகிறது.
- வாயுறை வாழ்த்து, பொதுமறை, பொய்யா மொழி, தெய்வ நூல் முதலிய பெயர்களும் இதற்கு உண்டு.
நூல் சிறப்பு:
- உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் உள்ள சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறளும் இடம்பெற்றுள்ளது.
- இங்கிலாந்து நாட்டுக் காட்சிச்சாலையில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது.