சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் கடற்பயணம்

கடற்பயணம்

தமிழரின் கடற்பயணம்:

 • “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்று ஔவையும், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று கணியன் பூங்குன்றனாரும் கூறியுள்ளனர்.
 • தொல்காப்பியம், தமிழர்கள் பிற நாடுகளுக்கு கடற்பயணம் மேற்கொண்டதை “முந்நீர் வழக்கம்” எனக் குறிப்பிட்டுளார்.
 • தொல்காப்பிய பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள “பொருள்வயிற் பிரிவு” விளக்குகிறது. இப்பிரிவு “காலில்(தரைவழிப் பிரிதல்) பிரிவு, களத்தில்(நீர்வழிப் பிரிதல்) பிரிவு” என இரு வகைப்படும்.

யவனர்:

 • தமிழர்கள் கிரேக்கரையும் உரோமானியரையும் “யவனர்” என அழைத்தனர்.

கப்பல் கட்டுதல்:

 • “கலம்செய் கம்மியர்” என ஒருவகைத் தொழிலாளர் தமிழகத்தில் இருந்தனர்.
 • அவர்களால் பெருங்கப்பல்கள் கட்டப்பட்டன.

புறநானூறு கூறும் உவமை:

 • நான்கு பக்கமும் நீர் நிரம்பிய கழனிகள் உள்ளன. அதன் நடுவில் தனியாக மதிலோடு கூடிய அரசனது கோட்டை உள்ளது. அக்கோட்டையின் தோற்றமானது நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு உவமையாகப் புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது.

கடலைக் குறிக்கும் சொற்கள்:

 • ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பௌவம், பரவை, புணரி.

மரக்கலத்தைக் குறிக்கும் சொற்கள்:

 • கப்பல், களம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புனை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஓடம்.

பட்டினப்பாலை:

 • புகார் நகரத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்கள், அலைகளால் அலைப்புண்டு தறியில் கட்டப்பட்ட யானை அசைவதுபோல் அசைந்தன.
 • அவற்றின் உச்சியில் கொடிகள் அசைந்து ஆடின எனப் பட்டினப்பாலை கூறுகின்றது.

முசிறி:

 • முசிறி சேரர் துறைமுகம்.
 • அங்குச் “சுள்ளி” என்னும் பெரிய ஆற்றில் யவனர்களின் மரக்கலங்கள், ஆற்றுத்துறைகள் கலங்கிப் போகும்படி வந்தி நின்றன.
 • யவனர்கள் பொன்னை சுமந்து வந்து அதற்கு ஈடாக மிளகை ஏற்றி சென்றனர் என்ற செய்தியை அகநானூறு கூறுகிறது.

கொற்கை:

 • கொற்கை பாண்டிய துறைமுகம்.
 • இத்துறைமுகத்தில் முத்துக்குளித்தல் மிகச் சிறப்பாக நடந்ததை வெணிசு நாடு அறிஞர் மார்க்கோபோலோ கூறியுள்ளார்.
 • மதுரைக்காஞ்சியும் சிருபாணாற்றுப்படையும் கொற்கை முத்தின் சிறப்பை கூறியுள்ளன.
 • “விளைந்து முதிர்ந்த விழுமுத்து” என மதுரைக்காஞ்சி கூறுகிறது.

காவிரிப்பூம்பட்டினம்:

 • இது சோழர்களின் துறைமுகம்.
 • இங்கு பெரும்பாலும் வாழ்ந்தவர்கள் வணிகர்கள்.
 • அங்கு சுங்கச்சாலையும் கலங்கரை விளக்கமும் இருந்தன.

ஏற்றுமதி இறக்குமதி:

 • பழந்தமிழகத்தின் வணிகப் பொருள்களைப் பற்றிய குறிப்புகள் பட்டினப்பாலையும், மதுரைக்காஞ்சியும் கூறுகின்றது.
 • தமிழகப் பொருள்கள் சீனத்தில் விற்கப்பட்டன.
 • சீனத்துப் பட்டும் சருக்கரையும் தமிழகத்திற்கு இறக்குமதி ஆயின.
 • கரும்பு, அதியமானின் முன்னோர் காலத்தில் சீனாவில் இருந்து கொண்டு வந்து பயிரிடப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published.