குறுந்தொகை
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே – தேவகுலத்தார் |
சொற்பொருள்:
- நீர் – கடல்
- கோல் – கொம்பு
இலக்கணக்குறிப்பு:
- நிலத்தினும், வானினும், நீரினும் – உயர்வு சிறப்பும்மை
- கருங்கோல் – பண்புத்தொகை
பிரித்தறிதல்:
- ஆரளவு – அருமை+அளவு
- கருங்கோல் – கருமை+கோல்
- பெருந்தேன் – பெருமை+தேன்
நூல் குறிப்பு:
- குறுமை + தொகை = குறுந்தொகை
- குறைந்த அடிகளால் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பே குறுந்தொகை.
- இந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
- இந்நூலை தொகுத்தவர் பூரிக்கோ.
- பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார்.