சிறுபாணாற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை

  • பொருள் = ஆற்றுப்படை
  • தினை = புறத்திணை
  • பாவகை = ஆசிரியப்பா
  • அடி எல்லை = 269

சிறப்புப் பெயர்

  • சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப் படை (தக்கயாகப்பரணி உரையாசிரியர்)

பாணர்

  • பாணர்கள் மூன்று வகைப்படுவர் = இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர்
  • சிறிய யாழைக் கையில் வைத்திருப்போர் சீறியாழ்பாணர் என்பர்

சிறுபாணாற்றுப் படை ஆசிரியர்

  • பாடிய புலவர் = நல்லூர் நத்தத்தனார்
  • பாட்டுடைத் தலைவன் = ஒய்மா நாட்டு நல்லியக்கோடன்

கடை ஏழு வள்ளல்கள்

பேகன்

மயிலுக்கு போர்வை அளித்தவன்
பாரி

முல்லைக்கு தேர் தந்தவன்

காரி

இரவலர்க்கு குதிரைகள் நல்கியவன்
ஆய்

நீலமணியையும், நாகம் தந்த கலிங்கத்தையும் சிவனுக்கு அளித்தவன்

அதியமான்

ஒளவைக்கு நெல்லிக்கனி அளித்தவன்
நள்ளி

நடைப்பரரிகாரம் முட்டாது கொடுத்தவன்

ஓரி

இரவலர்க்கு நாடுகளை பரிசாக நல்கியவன்

கடையேழு வள்ளல்கள் வாழ்ந்த இடம்

பேகன்

பொதினி மலை
பாரி

பறம்பு மலை

காரி

மலையமான் நாடு
ஆய்

பொதிய மலை

அதிகன் (அதியமான்)

தகடூர்
நள்ளி

நளிமலை

ஓரி

கொல்லிமலை

கடையேழு வள்ளல்களின் பகுதிகள்

சிறுபாணாற்றுப்படை

பேகன்

  • பேகனின் ஊரான ஆவினன்குடி ‘பொதினி’ என்றழைக்கப்பட்டு, தற்போது பழனி எனப்படுகிறது.
  • பழனி மலையும் அதைச் சுற்றிய மலைப்பகுதிகளும் பேகனது நாடாகும்.

பாரி

  • பாரியின் நாடு பறம்பு மலையும், அதைச் சூழ்ந்திருந்த முந்நூறு ஊர்களும் ஆகும்.
  • பறம்பு மலையே பிறம்பு மலையாகி, தற்போது பிரான்மலை எனப்படுகிறது.
  • இம்மலை சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது.

காரி

  • காரியின் நாடு (மலையமான் திருமுடிக்காரி) மலையமான் நாடு என்பதாகும். இது மருவி ‘மலாடு’ எனப்பட்டது.
  • இது விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருக்கோவிலூரும் (திருக்கோயிலூர்) அதைச் சூழ்ந்துள்ள பகுதிகளுமாகும்.

ஆய்

  • ஆய் நாடு (ஆய் அண்டிரன்) – பொதிய மலை எனப்படும் மலை நாட்டுப் பகுதியாகும்.
  • தற்போது அகத்தியர் மலை என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம், பாபநாசம் ஆகிய மலைப்பகுதிகளும் அதைச் சூழ்ந்துள்ள பகுதிகளுமாகும்.

அதியமான்

  • அதியமான் நாடு (அதிகமான் நெடுமான் அஞ்சி) ‘தகடூர்’ என்றழைக்கப்பட்ட தருமபுரியைத் தலைநகராகக் கொண்டு விளங்கிய பகுதி.
  • இப்பகுதியில் உள்ள ‘பூரிக்கல்’ மலைப்பகுதியில் இருந்து பறித்து வந்த நெல்லிக்கனியையே ஔவையாருக்கு அதிகமான் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

நள்ளி

  • நள்ளியின் நாடு (நளிமலை நாடன்) நெடுங்கோடு மலை முகடு என்றழைக்கப்பட்ட பகுதி.
  • தற்போது உதகமண்டலம் ஊட்டி என்று கூறப்படுகிறது.

ஓரி

  • ஓரியின் நாடு (வல்வில் ஓரி) – நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ‘கொல்லி மலையும்’ அதைச் சூழ்ந்துள்ள பல ஊர்களும் ஆகும்.

சிறுபாணாற்றுப்படை உரை

  • நச்சினார்க்கினியர் உரை உள்ளது
  • மு.வை.அரவிந்தன் உரை

சிறுபாணாற்றுப் படை விளக்கம்

சிறுபாணாற்றுப்படை

  • தக்கயாகப் பரணியின் உரையாசிரியர் இந்நூலை “சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப் படை” என்கிறார்.
  • திண்டிவனப் பகுதி ஒய்மா நாடு ஆகும்.
  • நல்லியக்கோடனின் தலைநகரம் “கிடங்கில்”
  • இந்நூல் கடை ஏழு வள்ளல்கள் பற்றி கூறுகிறது.
  • வேளாளர் வீடுகளில் நாய் வளர்த்ததைப் போல, உமணர்கள் வீட்டில் குரங்குகளை வளர்த்தனர்.

சிறுபாணாற்றுப்படை முக்கிய அடிகள்

  • பன்மீன் நடுவே பால்மதிபோல

            இன்நடை ஆயமொடு இருந்தோன்

  • முல்லை சான்ற கற்பின் மெல்லியல்

             மடமா நோக்கின் வாணுதல் விறலியர்

  • தமிழ்நிலை பெற்ற தாங்கறு மரபின்

            மகிழ்நனை மறுகின் மதுரை

  • எழுவர் பூண்ட ஈகைச் செந்துகம்

 

 

Leave a Reply