சிற்றிலக்கியங்கள்
சிற்றிலக்கியங்கள்
- சிற்றிலக்கியம் அளவில் (பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை) சுருங்கியதாக அமைவது.
சிற்றிலக்கிய இலக்கணம்
- சிற்றிலக்கியம் அளவில் (பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை) சுருங்கியதாக அமைவது.
- அகப்பொருள், அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியதாக அமையும். (கோவை போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவதும் உண்டு.)
- பாடப்பெறும் கடவுள் அல்லது மன்னன் அல்லது வள்ளல் ஆகியோருடைய வாழ்வின் ஒரு சிறு கூறு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக: உலா இலக்கியம் தலைவன் உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துப் பாடப்படுவது.
- அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றைத் தருவதாக அமைவது சிற்றிலக்கியம்.
சிற்றிலக்கியங்கள்
- நாயக்கர் காலமே “சிற்றிலக்கிய காலம்”
- சிற்றிலக்கியதிற்கு பிரபந்தம் என்ற பெயரும் உண்டு.
- பிரபந்தம் என்ற வடமொழி சொல்லுக்கு “நன்கு கட்டப்பட்டது” என்று பொருள்.
- பிரபந்தம் என்ற சொல்லை முதலில் தமிழில் கொண்டுவந்தவர் = நாதமுனிகள்
- அணைத்து சிற்றிலக்கியங்களும் தொல்காப்பியரின் “விருந்து” என்னும் வகையுள் அடக்குவர்.
- சிற்றிலக்கியங்களில் இலக்கணத்தைக் கூறும் நூல்கள் = பட்டியல் நூல்கள்
- சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தை தெளிவாக கூறும் நூல் = பன்னிரு பாட்டியல்
- சிற்றிலக்கிய வகை = 96
- சிற்றிலக்கியம் 96 வகை என முதலில் கூறிய நூல் = பிரபந்த மரபியல்
பிள்ளைக் கவிமுதல் புராணம் ஈறாகத் தொண்ணூற் றாறுஎன்னும் தொகையதுஆம் |
- பிள்ளைத் தமிழ் என்ற இலக்கிய வகை முதலாகப் புராணம் ஈறாகத் தொண்ணூற்றாறு வகைப்பட்டது பிரபந்தம் என்பது இதன் பொருள் ஆகும்.
- 96 வகை சிற்றிலக்கியங்களின் பெயரை முதலில் கூறிய நூல் = வீரமாமுனிவரின் சதுரகராதி
- சிவந்தெழுந்த பல்லவன் உலா என்ற நூலில், தொண்ணூற்றாறு கோலப் பிரபந்தங்கள் கொண்ட பிரான் (கோலம் = அழகு; பிரான் = தலைவன்) என்ற தொடர் இடம் பெறுகின்றது.
- பாட்டியல் நூல்களுள் காலத்தால் முற்பட்டது = பன்னிரு பாட்டியல்
- வெண்பாப் பாட்டியலின் வேறு பெயர் = வச்சணந்தி மாலை
- நவநீதப் பாட்டியலின் வேறு பெயர் = கலித்துறைப் பாட்டியல்
- வரையறுத்தப் பாட்டியலின் வேறு பெயர் = சம்பந்த பாட்டியல்
- மங்கலப் பொருத்தத்தை மட்டும் வரையறுத்துக் கூறும் நூல் = வரையறுத்தப் பாட்டியல்
- சிற்றிலக்கிய வகைகளைக் கூறாத பாட்டியல் நூல் = வரையறுத்தப் பாட்டியல்
- முழுமையாகச் செய்யுள் இலக்கணங்களையும் பாட்டியல் கருத்துகளையும் கூறும் நூல் = சிதம்பர பாட்டியல்
- சிற்றிலக்கிய வேந்தர் = குமரகுருபரர்
சிற்றிலக்கிய வகைகள்
- அகப்பொருட்கோவை
- அங்கமாலை
- அட்டமங்கலம்
- அரசன்விருத்தம்
- அலங்காரபஞ்சகம்
- அனுராகமாலை
- ஆற்றுப்படை
- இணைமணி மாலை
- இயன்மொழி வாழ்த்து
- இரட்டைமணிமாலை
- இருபா இருபது
- உலா
- பவனிக்காதல்
- உலாமடல்
- உழத்திப்பாட்டு
- உழிஞைமாலை
- உற்பவமாலை
- ஊசல்
- ஊர் நேரிசை
- ஊர்வெண்பா
- ஊரின்னிசை
- எண்செய்யுள்
- ஐந்திணைச் செய்யுள்,
- ஒருபா ஒருபது
- ஒலியந்தாதி
- கடைநிலை
- கண்படைநிலை
- கலம்பகம்
- காஞ்சிமாலை
- காப்புமாலை
- குழமகன்
- குறத்திப்பாட்டு
- கேசாதிபாதம்
- கைக்கிளை
- கையறுநிலை
- சதகம்
- சாதகம்
- சிறுகாப்பியம்
- சின்னப்பூ
- செருக்களவஞ்சி
- செவியறிவுறூஉ
- தசாங்கத்தயல்
- தசாங்கப்பத்து
- தண்டகமாலை
- தாண்டகம்
- தாரகைமாலை
- தானைமாலை
- எழுகூற்றிருக்கை
- தும்பைமாலை
- துயிலெடை நிலை
- தூது
- தொகைநிலைச்செய்யுள்
- நயனப்பத்து
- நவமணிமாலை
- நாமமாலை
- நாழிகைவெண்பா
- நான்மணிமாலை
- நானாற்பது
- நூற்றந்தாதி
- நொச்சிமாலை
- பதிகம்
- பதிற்றந்தாதி
- பரணி
- பல்சந்தமாலை
- பன்மணிமாலை
- பாதாதிகேசம்
- பிள்ளைக்கவி
- புகழ்ச்சி மாலை
- புறநிலை
- புறநிலைவாழ்த்து
- பெயர் நேரிசை
- பெயரின்னிசை
- பெருங்காப்பியம்
- பெருமகிழ்ச்சிமாலை
- பெருமங்கலம்
- போர்க்கெழுவஞ்சி
- மங்கலவள்ளை
- மணிமாலை
- முதுகாஞ்சி
- மும்மணிக்கோவை
- மும்மணிமாலை
- முலைப்பத்து
- மெய்க்கீர்த்திமாலை
- வசந்தமாலை
- வரலாற்று வஞ்சி
- வருக்கக் கோவை
- வருக்கமாலை
- வளமடல்
- வாகைமாலை
- வாதோரணமஞ்சரி
- வாயுறைவாழ்த்து
- விருத்தவிலக்கணம்
- விளக்குநிலை
- வீரவெட்சிமாலை
- வெட்சிக்கரந்தைமஞ்சரி
- வேனில் மாலை