பொது தமிழ் பகுதி ஆ சிற்றிலக்கியங்கள்

சிற்றிலக்கியங்கள்

குறவஞ்சி
பரணி
முத்தொள்ளாயிரம்
தூது
கலம்பகம்
உலா
பள்ளு
காவடிசிந்து
அந்தாதி
பிள்ளைத்தமிழ்

 

குறவஞ்சி

 • “கட்டினும் கழங்கினும்” என்ற தொல்காப்பிய நூற்பாவின் அடிப்படையில் தோன்றியது.
 • குறவஞ்சி என்பது தொல்காப்பியர் கூறும் “வனப்பு” என்ற நூல் வகையுள் அடங்கும்
 • குறம், குறத்திப்பாட்டு என்னும் வேறு பெயர்களும் உண்டு
 • குறவஞ்சி நாட்டியம், குறவஞ்சி நாடகம் என்ற பெயர்களும் உண்டு
 • குறிஞ்சி நிலத்தை அடிப்படையாகக் கொண்டது.
 • குறி சொல்லும் மகளிரை ஔவையார் தன் குறுந்தொகைப் பாட்டில் “அகவன் மகள்” என அழைக்கிறார்
 • குறவஞ்சி அக இலக்கிய நூலாக இருப்பினும் தலைவன், தலைவி பெயர் கூறப்படும்
 • இயற்றமிழ், இசைத்தமிழ் இரண்டும் கலந்த இலக்கியம் குறவஞ்சி
 • குறவஞ்சி பல வகைப் பாக்கள் கலந்து வரப் பாடப்படும்.
 • குறவஞ்சி இலக்கியத்திற்கு முன்னோடி அடிப்படை நூல் = குமரகுருபரரின் மீனாட்சிக் குறம்
 • முதல் குறவஞ்சி நூல் = குற்றால குறவஞ்சி
 • பன்னிரு பாட்டியல் குறவஞ்சியை,
இறப்பு நிகழ்வெதிர் வெண்ணுமுக் காலமும்
திறப்பட உரைப்பது குறத்திப் பாட்டே

குறவஞ்சி நூல்கள்:

திருக்குற்றால குறவஞ்சி(முதல் குறவஞ்சி) திருகூடராசப்ப கவிராயர்
சரபேந்திர பூபாலக் குறவஞ்சி கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்
தமிழரசி குறவஞ்சி வரத நஞ்சையப்ப பிள்ளை
பெத்தலேகம் குறவஞ்சி வேதநாயக சாஸ்திரி
கூட்டுறவுக் குறவஞ்சி தஞ்சைவாணன்
விஸ்வநாத சாஸ்திரி வண்ணக்குறவஞ்சி

திருக்குற்றால குறவஞ்சி:

 • இதன் ஆசிரியர் = திரிகூடராசப்ப கவிராயர்
 • இவர் குற்றாலத்திற்கு அருகே உள்ள மேலகரம் என்னும் ஊரில் பிறந்தவர்
 • முதல் குறவஞ்சி நூல் இதுவே
 • மதுரையை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கர் இவருக்கு “குறவஞ்சி மேடு” என்னும் நிலப்பகுதியை இனாமாக வழங்கினார்.
 • இந்நூலின் தலைவன் = திருக்குற்றால நாதர்
 • இந்நூலின் தலைவி = வசந்தவல்லி
 • இவர் இயற்றிய மற்ற நூல்கள் = குற்றாலத் தலபுராணம், குற்றால மாலை

சரபேந்திர பூபாலக் குறவஞ்சி:

 • இதன் ஆசிரியர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்
 • இவர் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள கொட்டையூரில் பிறந்தவர்.
 • இவரின் ஆசிரியர் = வைத்தியநாத தேசிகர்
 • இவர் தஞ்சை சரபோஜி மன்னரின் அரசவைப் புலவராக விளங்கியவர்.
 • இவர் இயற்றிய நூல்கள் = கொட்டையூர் உலா, திருவிடைமருதூர் புராணம், திருமண நல்லூர் புராணம், கோடீச்சரக் கோவை
 • இந்நூலின் பாட்டுடைத் தலைவன் = தஞ்சை சரபோஜி மன்னர்
 • நூலின் தலைவி = மதனவல்லி

தமிழரசி குறவஞ்சி;

 • தோரமங்கலம் திரு.அ.வரதநஞ்சையப் பிள்ளை இயற்றியது “தமிழரசி குறவஞ்சி”.
 • 96வகை சிற்றிலக்கியங்களுள் குறவஞ்சியும் ஒன்று.
 • தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் = சுவாமிமலை முருகப்பெருமான்.
 • தமிழன்னையையே பாட்டுடைத் தலைவியாக்கி இந்நூல் இயற்றப்பட்டுள்ளது.
 • தமிழரசி குறவஞ்சியை இயற்றியவர் தோரமங்கலம் திரு.அ.வரதநஞ்சையப் பிள்ளை.
 • பெற்றோர் = அப்பசாமிப் பிள்ளை, வரதாயி அம்மையார்.
 • இவர் விரைந்து கவி பாடுவதில் வல்லவர்.
 • கரந்தை தமிழ் சங்கத்தில் “ஆசிரியர்” என்னும் சிறப்புப்பட்டம் பெற்றவர்.
 • “புலவரேறு” எனச் சிறப்பிக்கபடுவார்.
 • கரந்தை தமிழ் சங்கத்தில் நமச்சிவாய முதலியார் தலைமையில் “தங்கத் தோடா” பரிசு பெற்றுள்ளார்.
 • தமிழவேள் உமாமகேசுவரனார் இவரிடம் கேட்டு கொண்டதற்கு இணைக இந்நூலை இயற்றினார்.
 • இந்நூலை கரந்தை தமிழ் சங்கத்தின் வெள்ளி விழாவின் பொது ஞானியாரடிகள் தலைமையில் அரங்கேற்றினர்.

பெத்தலகேம் குறவஞ்சி:

 • பெத்தலகேம் குறவஞ்சியில் உலாவரும் மன்னராக இயேசுவாகவும் தேவமோகினியாக தலைவி சீயோன் மகளாகவும், குறவஞ்சி விசுவாசமாகவும் குறி கூறுதல் தீர்க்க தரிசனமாகவும். சிங்கன் குருவாகவும், நூவன் உபதேசியாகவும், அவர்கள் பிடிக்கும் பறவைகளாக மக்களும் அதற்குப் பயன்படும் வலையாக இறைவாக்கு என்ற நற்செய்தியும் உருவாக்கப்பட்டது.
 • இந்நூல் முற்றுருவகமாகத் திகழ்வது தனிச்சிறப்பு ஆகும்.
 • இந்நூலின் ஆசிரியர் தஞ்சை வேதநாயக சாத்திரியார்.
 • பெற்றோர் = தேவசகாயம், ஞானப்பூ அம்மையார்
 • ஊர் = திருநெல்வேலி
 • தஞ்சையில் மதபோதராக விளங்கிய சுவார்ட்ஸ் பாதிரியார் இவரை தம் மாணவராக ஏற்றுக்கொண்டார்.
 • தஞ்சையை ஆண்ட சரபோசி மன்னரின் உற்ற தோழராக விளங்கினார்.
 • நூல்கள் = ஞானத்தச்சன், ஞானவுலா, ஆரணாதிந்தம்.
 • இவரை “ஞானதீபக் கவிராயர்” என்றும் “அண்ணாவியார்” என்றும் போற்றுவர்.

பரணி

 • பரணி நூல்களின் இலக்கணம் கூறுவது = இலக்கண விளக்கப் பாட்டியல்
ஆணை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி
 • பரணி 13 உறுப்புகளைக் கொண்டது
 • தோற்றவர் பெயரால் இந்நூல் அமையும்
 • பரணி என்பது ஒரு நட்சத்திரம்(நாள்)
 • இரண்டடித் தாழிசையால் பாடப்படுவது பரணியாகும்
 • பரணியின் பாவகை = கலித்தாழிசை
 • “பரணி என்ற நாள்மீன் காளியையும், யமனையும் தன் தெய்வமாக பெற்றது என்றும் அந்த நாள்மீனால் வந்த பெயரே நூலுக்கு பெயராகி வந்தது என்றும்” கூறுகிறார் உ.வே.சா
 • போர்க்கடவுளாகிய கொற்றவைக்கு உரிய நாள் = பரணி
 • முதல் பரணி நூல் = கலிங்கத்துப்பரணி
 • பரணி பாடுவதில் வல்லவர் செயங்கொண்டார்

பரணி நூல்கள்:

கலிங்கத்துப்பரணி செயங்கொண்டார்
தக்கயாகப் பரணி ஒட்டக்கூத்தர்
அஞ்ஞவதைப் பரணி தத்துவராயர்
பாசவதைப் பரணி வைத்திய நாத தேசிகர்

கலிங்கத்துப்பரணி:

 • முதல் பரணி நூல் இதுவே
 • இந்நூலின் ஆசிரியர் = செயங்கொண்டார்
 • இவர் தீபங்குடி என்னும் ஊரினர்
 • முதல் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமானை அனுப்பி கலிங்க மன்னன் ஆனந்தவர்மனை வென்றதை பற்றி கூறுகிறது இந்நூல்.
 • இவரின் படைப்புகள் = தீபங்குடி பத்து, இசையாயிரம், மடல், உலா
 • இந்நூலை “தென்தமிழ் தெய்வபரணி” என ஒட்டக்கூத்தர் பாராட்டுகிறார்.
 • செயங்கொண்டாரை “பரணிக்கோர் செயங்கொண்டார்” என பலபட்டடை சொக்கநாதர் பாராட்டுகிறார்.
 • இந்நூலில் 599 தாழிசைகள் உள்ளன.
 • கருணாகரத் தொண்டைமானை “வாண்டையார் கோன்” என்கிறார் செயங்கொண்டார்
 • இவர் “கவிச்சக்ரவர்த்தி” என்ற பட்டம் பெற்றவர்.

தக்கயாகப்பரணி:

 • இதன் ஆசிரியர் = ஒட்டக்கூத்தர்
 • தட்சன் சிவபெருமானை மதிக்காது யாகம் செய்ய அதனால் சினங்கொண்ட சிவனின் மைந்தன் வீரபத்திரன் யாகத்தை அழித்து, உதவிக்கு வந்தோரை வென்று தட்சனின் தலையைத் துண்டித்த புராண வரலாற்றை கூறுவது. தோற்ற தக்கனின் பெயரால் மரபுப்படி பெயர் பெற்றது.
 • இவர் மலரி என்னும் ஊரினர்.
 • இவரின் இயற்பெயர் = கூத்தன்
 • இவரின் சிறப்புப்பெயர்கள் = கவிராட்சசன், கவிச்சக்ரவர்த்தி,காளக்கவி, சர்வஞ்சக் கவி, கௌடப் புலவர்
 • இவரின் படைப்புகள் = மூவருலா, ஈட்டி எழுபது, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், அரும்பைத் தொள்ளாயிரம், காங்கேயன் நாலாயிரக்கோவை
 • “கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன்” என்ற சிறப்பு இவருக்கு உண்டு.
 • தக்கயாகப்பரணியின் வேறு பெயர் = வீரபத்திர பரணி
 • இவர் கலைமகளுக்கு என்று கூத்தனூரில் தனி கோயில் கட்டினார்

முத்தொள்ளாயிரம்

 • முத்தொள்ளாயிரம் மூவேந்தர்களைப் பற்றிய 900 பாடல்களைக் கொண்டது.
 • ஆயினும் இந்நூல் முழுமையாக கிடைக்கவில்லை.
 • “புறத்திரட்டு” என்னும் நூல் வழியாக 108 வெண்பாக்களும், பழைய உரை நூல்களில் மேற்கோளாக 22 வெண்பாக்களும் கிடைத்துள்ளன.
 • மூவேந்தர்களின் ஆட்சிச்சிறப்பு, படைச்சிறப்பு, போர்த்திறன், கொடை முதலிய செய்திகளை இப்பாடல்கள் விளக்குகின்றன.
 • இந்நூலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
 • சேரர் பற்றி 23 பாடல்களும், சோழர் பற்றி 46 பாடல்களும், பாண்டியர் பற்றி 61 பாடைகளும் என மொத்தம் 130 பாடல்கள் கிடைத்துள்ளன.
 • இதில் அகப்பாடல்கள் 75, புறப்பாடல்கள் 55 உள்ளன

தூது

 • தன் கருத்தைப் பிறிதொருவருக்கு தெரிவிக்குமாறு இடையில் ஒருவரைத் தன் சார்பாக அனுப்புவதே தூது.
 • தூது இரு வகைப்படும் = அகத்தூது, புறத்தூது
 • “காமம் மிக்க கழிபடர் கிளவி” என்ற தொல்காப்பிய அடியின் அடிப்படையில் தோன்றிய இலக்கியம் தூது
 • “தொடை(மாலை) வாங்கி வா” என்று கூறும் இலக்கியம் தூது
 • தூது கலிவென்பாவால் பாடப்படுவது
 • முதல் தூது நூல் = நெஞ்சு விடு தூது(உமாபதி சிவம்)
 • தூதின் இலக்கணம் கூறும் நூல் = இலக்கண விளக்கப் பாட்டியல்
 • தூதாக அனுப்பப்படுபவை = அன்னம், மயில், கிலி, குயில், வண்டு, நெஞ்சம், முகில், தென்றல், மான், தமிழ்
 • இப்பத்தும் தூதாக அனுப்பி பாடியவர் = மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை(தச விடு தூது)

தூது நூல்கள்:

உமாபதி சிவம் நெஞ்சு விடு தூது(முதல் தூது நூல்)
பலபட்டடை சொக்கநாதப் புலவர் அழகர் கிள்ளை விடு தூது
சுப்ரதீபக் கவிராயர் விறலி விடு தூது
வெள்ளைவாரணர் காக்கை விடு தூது
ஆசிரியர் பெயர் தெரியவில்லை தமிழ் விடு தூது
அமிர்தம் பிள்ளை தமிழ் விடு தூது
மீனாட்சிசுந்தரம் பிள்ளை தச விடு தூது

நெஞ்சு விடு தூது:

 • இந்நூலின் ஆசிரியர் உமாபதி சிவம்
 • ஆசிரியர் தம்மை தலைவியாகவும், தம் குருநாதர் மறைஞான சம்பந்தரைத் தலைவனாகவும் வைத்துப் பாடியுள்ளார்.
 • இந்நூலில் 129 கண்ணிகள் உள்ளன.

தமிழ் விடு தூது:

 • ஆசிரியர் பெயர் தெரியாத இத்தூது நூல் மிக சிறப்பான நூல் ஆகும்.
 • மதுரை சொக்கநாதரிடம் தலைவி ஒருத்தி தமிழை தூது அனுப்புகின்றாள்.
 • இந்நூலில் 268 கண்ணிகள் உள்ளன.

அழகர் கிள்ளை விடு தூது:

 • திருமாலிருஞ்சோலை மலையில் கோவில் கொண்டிருக்கும் அழகரிடத்து பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை என்ற புலவர் கிளியைத் தூது விடுவதாக அமைத்துப் பாடியிருப்பது அழகர் கிள்ளை விடு தூது ஆகும்.
 • இந்நூல் 250 ஆண்டுகளுக்கு முந்தைய நூலாகும்.
 • இந்நூல் காப்பு வெண்பா ஒன்றையும் 239 கண்ணிகளையும் உடையது.
 • பாட்டின் இரண்டு அடி கண்ணி எனப்படும்.
 • சொக்கநாதப் பிள்ளை மரபினர் பலபட்டடைக்கணக்கு என்னும் ஒருவகைப் பணியைச் செய்து வந்தனர்.
 • இவர் தந்தையார் பெயர் சொக்கலிங்கம் பிள்ளை.
 • நூல்கள் = மதுரை மும்மணிக்கோவை, தென்றல் விடு தூது போன்றவை

கலம்பகம்

 • பல்வகை வண்ணமும், மனமும் கொண்ட மலர்களால் கட்டப்பட்டக் கதம்பம் போன்று பல்வகை உறுப்புகளைக் கொண்டு அகம், புறமாகிய பொருட்கூறுகள் கலந்து வர பல்வகைச் சுவைகள் பொருந்தி வருவதால் ‘கலம்பகம்” எனப் பெயர் பெற்றது.
 • கலம் + பகம் = கலம்பகம்
 • கலம் = 12
 • பகம் = 6
 • கலம்பகம் 18 உறுப்புகளைக் கொண்டது.
 • கலம்பகத்தின் இலக்கணம் கூறும் நூல் = பன்னிரு பாட்டியல்முதல் கலம்பக நூல் = நந்திக் கலம்பகம்(ஆசிரியர் பெயர் தெரியவில்லை)
  “கன்பாய கலபகத்திற்கு இரட்டையர்கள்” எனக் கூறப்படும்
  அந்தாதி தொடை அமையப் பாடப்படும் சிற்றிலக்கியம் கலம்பகம்
  அகப்பொருளும் புறப்பொருளும் கலந்து பாடப்படும்
  கதம்பம் என்பது கலம்பகம் என்று திரிந்ததாக கூறுவார் உ.வே.சா

கலம்பக நூல்:

நந்திக் கலம்பகம்(முதல் கலம்பக நூல்) ஆசிரியர் பெயர் தெரியவில்லை
ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் நம்பியாண்டார் நம்பி
திருவரங்கக் கலம்பகம் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
திருவாமாத்தூர்க் கலம்பகம் இரட்டையர்கள்
தில்லைக் கலம்பகம் இரட்டையர்கள்
மதுரைக் கலம்பகம், காசிக் கலம்பகம் குமரகுருபரர்
திருக்காவலூர்க் கலம்பகம் வீரமாமுனிவர்
புள்ளிருக்குவேளூர் கலம்பகம் படிக்காசுப் புலவர்
திருசெந்திற் கலம்பகம் சாமிநாததேசிகர்(ஈசான தேசிகர்)
சேயூர்க் கலம்பகம் அந்தக்கவி வீரராகவர்

நந்திக் கலம்பகம்:

 • இதன் தலைவன் = மூன்றாம் நந்திவர்மன்
 • இதுவே கலம்பக நூல்களில் முதல் நூல்
 • இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை
 • 144 பாடல்கள் உள்ளன
 • தமிழ் மீது கொண்ட காதலால் மன்னன் உயிர் விட்டான்.
 • “நந்தி கலம்பகத்தால் இறந்ததை நாடறியும்” என்பது சோமேசர் முதுமொழி வெண்பா பாடல்

திருவரங்கக் கலம்பகம்:

 • இதன் ஆசிரியர் பிள்ளை பெருமாள் ஐயங்கார்
 • இவர் எட்டு நூல்களை எழுதியுள்ளார்.
 • இவ்வெட்டு நூல்களையும் “அஷ்டப் பிரபந்தம்” எனக் கூறப்படும்.
 • “அஷ்டப் பிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்” என்னும் வழக்கு இதன் சிறப்பை உணர்த்தும்.
 • இவர், “அழகிய மணவாளதாசர், திவ்வியக்கவி” எனவும் அழைக்கப்படுவார்.
 • இவர் 1623 முதல் 1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் அவையில் ஓர் அலுவலராய் அமர்ந்து வாழ்க்கை நடத்தி வந்தார்.

ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்:

 • இதன் ஆசிரியர் = நம்பியாண்டார் நம்பி
 • இவற் 11 திருமுறைகளைத் தொகுத்தவர்.
 • இவரைத் “தமிழ் வியாசர்” ஈனப் போற்றப்படுவார்.
 • இவரின் ஊர் = திருநாரையூர்
 • இவர் இயற்றியது ஒன்பது நூல்கள்.
 • இவரின் திருத்தொண்டர் திருவந்தாதி பெரியபுராணத்திற்கு வழி நூலக அமைத்து அடியார் பெருமை பேசுகிறது

உலா

 • “ஊரொடு தோற்றமும் உரிதென மொழிப” என்ற தொல்காப்பிய நூற்பா அடிப்படையில் தோன்றிய இலக்கியம் உலா இலக்கியம்
 • உலாவின் வேறு பெயர்கள் = பவனி, பெண்பாற் கைக்ள்கிளை
 • உலா வர பயன்படுவன = தேர், குதிரை, யானை
 • உலாவில் முன்னிலைப் பகுதி, பின்னிலைப் பகுதி என இரு பகுதிகள் உண்டு
 • தசாங்கம் உலா இலக்கியத்தில் இடம் பெரும்
 • முதல் உலா நூல் = திருக்கைலாய ஞானஉலா(ஆதி உலா அல்லது தெய்வீக உலா)
 • உலாவின் பாவகை = கலிவெண்பா
 • “கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தர்”

முன்னிலைப் பகுதி:

 • முன்னிலைப் பகுதியில் தலைவனின் சிறப்புக் கூறப்படும்
 • ஏழு வகைப் பருவ ஆண்கள் கூறப்படுவர்
 • பாலன் = 1-7 வயது
 • மீளி = 8-10 வயது
 • மறவோன் = 11-14 வயது
 • திறலோன் = 15 வயது
 • காளை = 16 வயது
 • விடலை = 17-30 வயது
 • முதுமகன் = 30 வயதிற்கு மேல்

பின்னிலைப் பகுதி:

 • பின்னிலைப் பகுதியில் ஏழு பருவப் பெண்களின் காமம் கூறப்படும்.
 • ஏழு வகைப் பருவ மகளிர்
 • பேதை = 5-7 வயது
 • பெதும்பை = 8-11 வயது
 • மங்கை = 12-13 வயது
 • மடந்தை = 14-19 வயது
 • அரிவை = 20-25 வயது
 • தெரிவை = 26-32 வயது
 • பேரிளம் பெண் = 33-40 வயது

உலாவின் நூல்கள்:

திருக்கைலாய ஞான உலா சேரமான் பெருமாள் நாயனார்
மூவருலா ஒட்டக்கூத்தர்
ஆளுடைய பிள்ளை திரு உலா மாலை நம்பியாண்டார் நம்பி
ஏகாம்பரநாதர் உலா இரட்டையர்கள்
திருவாரூர் உலா அந்தக்கவி வீரராகவர்
திருக்கழுகுன்ற உலா அந்தக்கவி வீரராகவர்
திருகுற்றாலனாதர் உலா திரிகூட ராசப்ப கவிராயர்
தில்லை உலா ஒட்டக்கூத்தர்
சிவந்த்தெழுந்த பல்லவராயன் உலா படிக்காசுப் புலவர்

மூவருலா:

 • இந்நூலின் ஆசிரியர் = ஓட்டக்கூத்தர்
 • “கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தர் “ எனச் சிறப்பிக்கப்படுபவர்.
 • மூவருலா என்பது மூன்று சோழ மன்னர்களை பற்றியது.
 • இதில் விக்ரமசோழ உலா, குலோத்துங்க சோழ உலா, இராசராசசோழன் உலா ஆகிய மூன்று உலாக்கள் உள்ளன.

விக்ரமசோழன் உலா:

 • முதற் குலோத்துங்கசோழனின் நான்காவது மகன் விக்ரமசோழன்.
 • அவனின் தயார் மதுராந்தகி.
 • இவர் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்தார்.

திருக்கைலாய ஞான உலா:

 • இதன் ஆசரியர் சேரமான் பெருமாள் நாயனார்
 • இந்நூலை “தெய்வீக உலா, ஆதி உலா” என்றும் கூறுவர்.
 • உலா நூல்களில் இதுவே முதல் நூல்.

பள்ளு

 • இதனை “உழத்திப்பாட்டு, பள்லேசல்” என்றும் கூறுவர்
 • இது உழவர் வாழ்வை சித்தரித்து கூறும்
 • இது மருத நில நூலாக கருதப்படுகிறது
 • பாவகை = சிந்தும் விருத்தமும் பரவி வர பாடப்படும்
 • இது கோலாட்டமாக பாடப்படும் என்கிறார் டி.கே.சி
 • பள்ளு இலக்கியத்தை “உழத்திப்பாட்டு” எனக் கூறியவர் = வீரமாமுனிவர்
 • “பள்” என்பது பள்ளமான நன்செய் நிலங்களையும், அங்குச் செய்யப்படும் உழவினையும் குறிக்கும்
 • தொல்காப்பியர் குறிப்பிடும் எட்டு வகைப்பிரிவில் ஒன்றான “புலன்” என்னும் இலக்கியம் பள்ளு ஆகும்
சேரி மொழியாற் செவ்விதிற் கிளத்து
தேர்தல் வேண்டாது குறித்து தோன்றிற்
புலனென மொழிப புலனுணர்ந் தோரே
 • சந்த நயம் மிக்கது இந்நூல் வகை
 • “நெல்லு வகையை எண்ணினாலும், பள்ளு வகையை எண்ண முடியாது” என்பது பழமொழி
 • முதல் பள்ளு நூல் = முக்கூடற்பள்ளு

முக்கூடற்பள்ளு:

 • இதுவே பள்ளு நூல்களில் முதல் நூல்
 • இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. சிலர் எண்ணாயிணப் புலவர் என்பர்
 • திருநெல்வேலிக்குச் சிறிது வடகிழக்கில் தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் கலக்கும் இடத்திற்கு வடக்கே உள்ள சிற்றூர் முக்கூடல்.
 • அங்குள்ள இறைவனாகிய அழகர் மீது பாடப்பட்டது இந்நூல்.
 • சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங் கொண்ட நூல், “முக்கூடற்பள்ளு” ஆகும்.
 • இந்நூலை இயற்றியவர் பெயர் தெரியவில்லை.
 • இது சிந்தும் விருத்தமும் பரவிவர பாடப்பெறும்.
 • இதன் காலம் பதினேழாம் நூற்றாண்டு
 • “முக்கூடல் நாடகம்” படைத்தவர் = சின்னத்தம்பி வேளாளர்

 

பள்ளு

 • இதனை “உழத்திப்பாட்டு, பள்லேசல்” என்றும் கூறுவர்
 • இது உழவர் வாழ்வை சித்தரித்து கூறும்
 • இது மருத நில நூலாக கருதப்படுகிறது
 • பாவகை = சிந்தும் விருத்தமும் பரவி வர பாடப்படும்
 • இது கோலாட்டமாக பாடப்படும் என்கிறார் டி.கே.சி
 • பள்ளு இலக்கியத்தை “உழத்திப்பாட்டு” எனக் கூறியவர் = வீரமாமுனிவர்
 • “பள்” என்பது பள்ளமான நன்செய் நிலங்களையும், அங்குச் செய்யப்படும் உழவினையும் குறிக்கும்
 • தொல்காப்பியர் குறிப்பிடும் எட்டு வகைப்பிரிவில் ஒன்றான “புலன்” என்னும் இலக்கியம் பள்ளு ஆகும்
சேரி மொழியாற் செவ்விதிற் கிளத்து
தேர்தல் வேண்டாது குறித்து தோன்றிற்
புலனென மொழிப புலனுணர்ந் தோரே
 • சந்த நயம் மிக்கது இந்நூல் வகை
 • “நெல்லு வகையை எண்ணினாலும், பள்ளு வகையை எண்ண முடியாது” என்பது பழமொழி
 • முதல் பள்ளு நூல் = முக்கூடற்பள்ளு

முக்கூடற்பள்ளு:

 • இதுவே பள்ளு நூல்களில் முதல் நூல்
 • இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. சிலர் எண்ணாயிணப் புலவர் என்பர்
 • திருநெல்வேலிக்குச் சிறிது வடகிழக்கில் தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் கலக்கும் இடத்திற்கு வடக்கே உள்ள சிற்றூர் முக்கூடல்.
 • அங்குள்ள இறைவனாகிய அழகர் மீது பாடப்பட்டது இந்நூல்.
 • சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங் கொண்ட நூல், “முக்கூடற்பள்ளு” ஆகும்.
 • இந்நூலை இயற்றியவர் பெயர் தெரியவில்லை.
 • இது சிந்தும் விருத்தமும் பரவிவர பாடப்பெறும்.
 • இதன் காலம் பதினேழாம் நூற்றாண்டு
 • “முக்கூடல் நாடகம்” படைத்தவர் = சின்னத்தம்பி வேளாளர்

 

காவடிசிந்து

 • பெயர் = அண்ணாமலையார்
 • ஊர் = திருநெல்வேலி மாவட்டம் சென்னிகுளம்
 • பெற்றோர் = சென்னவர் – ஓவுஅம்மாள்
 • நூல்கள் = காவடிச்சிந்து, வீரை அந்தாதி, கோமதி அந்தாதி, வீரைப்பிள்ளைத்தமிழ்
 • சிறப்பு = இளமையிலே நினைவாற்றலும் படைப்பாற்றலும் மிக்கவர்.
 • காலம் = 1861–1890
 • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகிலுள்ள வளமான ஊர் கழுகுமலை.
 • இங்கு கோவில் கொண்டுள்ள முருகனின் சிறப்பை எளிய இனிய இசைப்பாடல்களால் போற்றிப் பாடப் பெற்றது இந்நூல்.

 

அந்தாதி

 • அந்தாதி 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
 • அந்தம் = இறுதி, ஆதி = முதல்
 • ஒவ்வொரு பாடலிலும் உள்ள இறுதி எழுத்தோ, அசையா, சீரோ அடியோ அதற்கு அடுத்து வரும் பாடலின் முதலாக வரும்படி அமைத்துப் பாடுவது அந்தாதி எனப்படும்.
 • இதனை “சொற்றொடர்நிலை” எனவும் கூறுவர்.
 • முதல் அந்தாதி நூல் = காரைக்கால் அம்மையாரின் “அற்புதத் திருவந்தாதி’

அந்தாதி வகைகள்:

 • பதிற்றுப் பத்தந்தாதி
 • யமாக அந்தாதி
 • திரிபந்தாதி
 • நீரோட்டக யமாக அந்தாதி

அந்தாதி நூல்கள்:

அற்புதத் திருவந்தாதி(முதல் நூல்) காரைக்கால் அம்மையார்
சரஸ்வதி அந்தாதி, சடகோபர் அந்தாதி கம்பர்
திருவேங்கடத்தந்தாதி பிள்ளை பெருமாள் ஐயங்கார்
திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி(குட்டித் திருவாசகம் எனப்படும்) அதிவீரராம பாண்டியன்
வீரை அந்தாதி, கோமதி அந்தாதி காவடிசிந்து அண்ணாமலையார்

அற்புதத் திருவந்தாதி:

 • இந்நூலின் ஆசிரியர் = காரைக்கால் அம்மையார்
 • இவரின் இயற்பெயர் = புனிதவதி
 • இறைவனால் “அம்மையே” என அழைக்கப்பட்டவர்
 • 63 நாயன்மார்களில் கோவிலில் நின்றிருக்க இவர் மட்டுமே அமர்ந்த நிலையில் இருக்கும் பெருமை பெற்றவர்.
 • இவரின் பாடல்கள் மட்டும் “மூத்த திருப்பதிகம்” எனப் போற்றப்படும்
 • கட்டளை கலித்துறை, அந்தாதி, மாலை என்னும் சிற்றிலக்கிய வகைகளை தொடங்கி வைத்தவர்.
 • ஒரு பொருளை பல பொருளில் பாடும் பதிக மரபை தொடங்கி வைத்தவர்.

திருவேங்கடத் தந்தாதி:

 • இந்நூலின் ஆசிரியர் பிள்ளை பெருமாள் ஐயங்கார்
 • இவர், “அழகிய மணவாளதாசர், திவ்வியக்கவி” எனவும் அழைக்கப்படுவார்.
 • இவர் இயற்றிய எட்டு நூல்களின் தொகுதியை “அஷ்டப்பிரபந்தம்” என்று அழைப்பர்.
 • “அஷ்டப்பிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்” என்னும் பழமொழி இந்நூலின் உயர்வைப் வெளிப்படுத்தும்.
 • இவர் 1623 முதல் 1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் அவையில் ஓர் அலுவலராய் அமர்ந்து வாழ்க்கை நடத்தி வந்தார்.

 

பிள்ளைத்தமிழ்

 • முதல் பிள்ளைத்தமிழ் நூல் = ஒட்டக்கூத்தரின் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
 • பெரியவர்களை குழந்தையாக பாவித்து பாடுதல் ஆகும்
 • இதனை “பிள்ளை கவி, பிள்ளைப் பாட்டு” எனவும் கூறுவர்
 • இது இரு வகைப்படும் = ஆண் பால் பிள்ளைத்தமிழ், பெண்பால் பிள்ளைத்தமிழ்
 • பிள்ளைத்தமிழ் பாடாமல் விலக்கு அளிக்கப்பட்ட கடவுள் = சிவன்

ஆண் பால் பிள்ளைத்தமிழ் பருவங்கள்:

 • காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்.

பெண்பாற் பிள்ளைத்தமிழ் பருவங்கள்:

 • காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, அம்மானை, கழங்கு(நீராடல்), ஊசல்.

பிள்ளைத்தமிழ் நூல்கள்:

குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்(முதல் நூல்) ஒட்டக்கூத்தர்
மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ் குமரகுருபரர்
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் குமரகுருபரர்
திருச்செந்தூர் முருகன்
பிள்ளைத்தமிழ்(பெரிய தமிழ்)
பகழிக் கூத்தர்
காந்தியம்மை பிள்ளைத்தமிழ் அழகிய சொக்கநாதர்
சேக்கிழார் பிள்ளைத்தமிழ் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் அந்தக்கவி வீரராகவர்

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்:

 • இதன் ஆசிரியர் குமரகுருபரர்
 • பெற்றோர் – சண்முகசிகாமணிக் கவிராயர், சிவகாமி சுந்தரியம்மை
 • ஊர் – திருவைகுண்டம்
 • இயற்றிய நூல்கள் – கந்தர்கலிவெண்பா, மதுரை மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, நீதிநெறி விளக்கம் முதலியன.
 • சிறப்பு – தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர். திருப்பணந்தாளிலும், காசியிலும் தம்பெயரால் மேடம் நிறுவி உள்ளார்.
 • இறப்பு – காசியில் இறைவனடி சேர்ந்தார்.
 • காலம் – பதினேழாம் நூற்றாண்டு.

Leave a Comment

Your email address will not be published.