திரிகடுகம்

திரிகடுகம்

திரிகடுகம்

நூல் அமைப்பு

  • ஆசிரியர் = நல்லாதானர்
  • பாடல்கள் = 100 + 1
  • பாவகை = வெண்பா

திரிகடுகம் பெயர்க்காரணம்

  • சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் உடல் நோயைத் தீர்ப்பான. அதனை போன்று இந்நூலில் அமைந்துள்ள ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்தக்களும் உள்ளந்தின் நோயைத் தீர்க்கும்.
  • திரி = மூன்று
  • கடுகம் = காரமுள்ள பொருள்

ஆசிரியர் குறிப்பு

  • இவர் திருநெல்வேலி மாவட்டம் “திருத்து” என்னும் ஊரை சேர்ந்தவர்.
  • “செருஅடுதோள் நல்லாதன்” எனப் பாயிரம் குறிப்பிடுவதால் இவர் போர் வீரராய் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது

பொதுவான குறிப்புகள்

  • “திரி கடுகம் = சுக்கு, மிளகு, திப்பிலி” என திவாகர நிகண்டு கூறுகிறது
  • இந்நூலின் கடவுள் வாழ்த்து திருமாலைப் பற்றி கூறுகிறது.
  • இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் “இம்மூன்றும்” அல்லது “இம்மூவர்” என்னும் சொல் வருகிறது.
  • மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல்.
  • இந்நூலில் 66 பாடல்களில் நன்மை தருபவை எவை என்பது பற்றி கூறப்பட்டுள்ளது.
  • இந்நூலில் 34 பாடல்களில் தீமை தருபவை எவை எனக் கூறப்பட்டுள்ளது.
  • கணவன் மனைவி வாழ்க்கை பற்றியே 35 பாடல்கள் உள்ளன.
  • 300 அறக்கருத்துக்கள் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

திரிகடுகம் பாடல்கள்

  • நெஞ்சம் அடங்குதல் வீடாகும்
  • வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
  • தாளாளன் என்பான் கடன்பட வாழாதான்
  • நிறை நெஞ்சம் உடையானை நல்குரவு அஞ்சும்
  • நட்பின் கொழுநனை பொய் வழங்கின் இல்லாகும்
  • கொண்டான் குறிப்பரிவாள் பொண்டாட்டி

 

 

 

Leave a Reply