நாலடியார்

நாலடியார்

நாலடியார்

நூல் உருவம்

  • ஆசிரியர் = சமண முனிவர்கள்
  • தொகுத்தவர் = பதுமனார்
  • பாடல்கள் = 400
  • பொருள் = அறம்
  • பா வகை = வெண்பா

பெயர்க்காரணம்

  • நான்கு அடிகளால் ஆன நானூறு பாடல்களை கொண்டதால் நாலடி நானூறு என்றும் அழைப்பர்

நாலடியார் வேறு பெயர்கள்

  • நாலடி
  • நாலடி நானூறு
  • வேளாண் வேதம்
  • திருக்குறளின் விளக்கம்

நூல் பகுப்பு

  • இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது
  • அறத்துப்பால் = 13 அதிகாரங்கள்
  • பொருட்பால் = 24 அதிகாரங்கள்
  • இன்பத்துப்பால் = 3 அதிகாரங்கள்

நூலின் சிறப்பு

  • முப்பெரும் அற நூல்கள் = 1) திருக்குறள் 2)நாலடி யார் 3)பழமொழி நானூறு
  • இந்நூலை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார்.
  • நூலின் பெருமையை கூறும் அடிகள்

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

      

பழகு தமிழ் சொல்லருமை நாலிரண்டில்

பொதுவான குறிப்புகள்

  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள ஒரே தொகை நூல் இது.
  • நாலடியாரில் முதல் இயல் = துறவறவியல்
  • நாலடியாரை தொகுத்தவர் = பதுமனார்
  • நூலை முப்பாலாக பகுத்தவர் = தருமர்
  • நூலிற்கு உரை கண்டவர் = தருமர், பதுமனார்
  • முத்தரையர் பற்றி கூறுகிறது இந்நூல்
  • நாலடியாரின் உரைகளை உள்ளடக்கியது “நாலடியார் உரைவளம்” என்னும் நூல்.

முக்கிய அடிகள்

  • கல்வி கரையில; கற்பவர் நாள்சில
  • ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, நீர் ஒழியப்
  • பால்உண் குருகின் தெரிந்து
  • கல்வி அழகே அழகு

Leave a Reply