திருக்குறள்
திருக்குறள் விளக்கம்
- ஆசிரியர் = திருவள்ளுவர்
- பாவகை = குறள் வெண்பா
பெயர்க்காரணம்
- திரு + குறள் = திருக்குறள்
- குறுகிய அடிகளை கொண்டதால் இப்பெயர் பெற்றது.
- “திருக் குறள்” என்பது “அடையடுத்த கருவியாகு பெயர்”
திருக்குறளின் சிறப்பு கூறுபவை
திருக்குறளின் முன்னோடி எனப்படுவது |
புறநானூறு |
திருக்குறளின் விளக்கம் எனப்படுவது |
நாலடியார்(சமண முனிவர்கள்) |
திருக்குறளின் பெருமையை கூறுவது |
திருவள்ளுவ மாலை |
திருக்குறளின் சாரம் எனப்படுவது |
நீதிநெறிவிளக்கம் (குமரகுருபரர்) |
திருக்குறளின் ஒழிபு எனப்படுவது |
திருவருட்பயன் (உமாபதி சிவம்) |
திருக்குறளின் வேறு பெயர்கள்
- திருவள்ளுவம்
- தமிழ் மறை
- பொதுமறை
- முப்பால்
- பொய்யாமொழி
- தெய்வநூல்
- வாயுறைவாழ்த்து
- உத்தரவேதம்
- திருவள்ளுவப் பயன்(நச்சினார்க்கினியர்)
- தமிழ் மாதின் இனிய உயர் நிலை
- அறஇலக்கியம்
- அறிவியல் இலக்கியம்
- குறிக்கோள் இலக்கியம்
- நீதி இல்லகியத்தின் நந்தாவிளக்கு
- பொருளுரை (சீத்தலை சாத்தனார்)
திருவள்ளுவரின் வேறு பெயர்கள்
- நாயனார்
- தேவர் (நச்சினார்க்கினியர்)
- முதற்பாவலர்
- தெய்வப்புலவர் (இளம்பூரனார்)
- நான்முகன்
- மாதானுபாங்கி
- செந்நாப்போதார்
- பெருநாவலர்
- பொய்யில் புலவன் (சீத்தலை சாத்தனார்)
திருவள்ளுவரின் காலம்
- கி.மு.1 = வி.ஆர்.ஆர்.தீட்சிதர்
- கி.மு.31 = மறைமலை அடிகள்(இதனை நாம் பின்பற்றுகிறோம்)
- கி.மு.1-3 = இராசமாணிக்கனார்
நூல் பகுப்பு முறை
- பால் = 3(அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்)
- அதிகாரம் = 133
- மொதப்பாடல்கள் = 1330
- இயல்கள் = 9
அறத்துப்பால்
- அறத்துப்பால் 38 அதிகாரங்களையும் 4 இயல்களையும் உடையது.
- பாயிரவியல் = 4 அதிகாரங்கள்
- இல்லறவியல் = 20 அதிகாரங்கள்
- துறவறவியல் = 13 அதிகாரங்கள்
- ஊழியல் = 1 அதிகாரங்கள்
பொருட்பால்
- பொருட்பாலில் 70 அதிகாரங்களையும் 3 இயல்களையும் உள்ளது.
- அரசியல் = 25 அதிகாரங்கள்
- அங்கவியல் = 32 அதிகாரங்கள்
- குடியியல் = 13 அதிகாரங்கள்
இன்பத்துப்பால்
- இன்பத்துப்பால் 25 அதிகாரங்களையும் 2 இயல்களையும் உடையது.
- களவியல் = 7 அதிகாரங்கள்
- கற்பியல் = 18 அதிகாரங்கள்
திருக் குறள் உரைகள்
- திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர்
தருமர் மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமே லழகர், – திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், கலிங்கர் வள்ளுவர்நூற்கு எல்லையுரை செய்தார் இவர் |
- திருக்குறளுக்கு உரை எழுதியவருள் காலத்தால் முந்தியவர் = தருமர்
- திருக்குறளுக்கு உரை எழுதியவருள் காலத்தால் பிந்தியவர் = பரிமேழலகர்
- மு.வ, நாமக்கல் கவிஞர், புலவர் குழந்தை ஆகியோரும் உரை எழுதியுள்ளனர்.
பொதுவான குறிப்புகள்
- திருக் குறள் “அ”கரத்தில் தொடங்கி “ன”கரத்தில் முடிகிறது.
- சிவசிவ வெண்பா, தினகர வெண்பா, வடமலை வெண்பா போன்ற பல நூல்கள் திருக்குறளின் பெருமையை கூறுகின்றன.
- திருக்குறளை முதலில் பதிப்பித்தவர் = மலயத்துவான் மகன் ஞானப்பிரகாசம் முதலில் பதிப்பித்து தஞ்சையில் வெளியிட்டார்.
- தை 2ம் நாள் = திருவள்ளுவர் தினம்
- தமிழிற்கு “கதி” எனப்படுவது = க – கம்பராமாயணம், தி – திருக் குறள்
- திருக்குறளில் 12000 சொற்கள் உள்ளன. இவற்றில் வட சொற்கள் ஐம்பதிற்கும் குறைவு. ஏறத்தாழ அவை 0.4% ஆகும்.
திருக்குறள் மொழிப்பெயர்ப்பு
- இலத்தின் = வீரமாமுனிவர்
- ஜெர்மன் = கிரால்
- ஆங்கிலம் = ஜி.யு.போப், வ.வே.சு.ஐயர், இராஜாஜி
- பிரெஞ்ச் = ஏரியல்
- வடமொழி =அப்பாதீட்சிதர்
- இந்தி = பி.டி.ஜெயின்
- தெலுங்கு = வைத்தியநாத பிள்ளை
திருக்குறள் சிறப்புகள்
- பாரதியார் வள்ளுவரை பாராட்டுதல்
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகல் கொண்ட தமிழ்நாடு |
- பாரதியார் மேலும், “கம்பனைப் போல், வள்ளுவனைப் போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணும் பிறந்ததில்லை, உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை” என்கிறார்.
- மனோன்மணியம் சுந்தரனார் வள்ளுவரை புகழ்தல்
வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன் ருணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக் கொரு நீதி |
- சுத்தானந்த பாரதி கூறுவது
எம்மதம் எவ்வினமும் எந்நாளும் சம்மதம் என்று ஏற்கும் தமிழ்வேதம் |
- திரு.வி.க கூற்று = திருக்குறள் ஒரு வகுப்பாற்கோ, ஒரு மதத்தாற்கோ, ஒரு நிறத்தாற்கோ, ஒரு மொழியார்க்கோ, ஒரு நாட்டாற்கோ உரியதன்று; அது மன்பதைக்கு உலகுக்குப் பொது.
- கி.ஆ.பெ.விஸ்வநாதம் கூற்று = திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால், தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்கு தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஓர் நூல் தோன்றியிராவிட்டால் தமிழ்மொழி உலகிற்கு தெரிந்திருக்காது.
முக்கிய அடிகள்
- அறத்தான் வருவதே இன்பம்
- மனத்துக்கண் மாசிலன் ஆகுதல் அறம்
- திருவேறு தெள்ளியராதலும் வேறு
- பெண்ணிற் பெருந்தக்க யாவுள்
- ஊழிற் பெருவழி யாவுள
- முயற்சி திருவினை யாக்கும்
- இடுக்கண் வருங்கால் நகுக
- கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
- அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
- ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்
திருக்குறளில் 14000 சொற்கள் உள்ளன check the text
திருக்குறளில் 14000 சொற்கள் உள்ளன check the text up