திருமுருகாற்றுப்படை
திருமுருகாற்றுப்படை
- பொருள் = ஆற்றுப்படை
- திணை = புறத்திணை
- பாவகை = ஆசிரியப்பா
- அடி எல்லை = 317
கடவுள் வாழ்த்து போன்றது
- பத்துப்பாட்டில் முதற்பாட்டாக இருப்பது திருமுருகாற்றுப்படை
- பத்துப்பாட்டின் பத்து நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து போல் அமைந்துள்ளது.
- வேறு எந்த தெய்வத்திற்கும் வேறு எந்த நூலிலும் இவ்வளவு நீண்ட பாடல் இல்லை.
திருமுருகாற்றுப்படையின் ஆசிரியர்
- பாடிய புலவர் = நக்கீரர்
- பாட்டுடைத் தலைவன் = முருகப் பெருமான்
திருமுருகாற்றுப்படை வேறு பெயர்
- முருகு
- புலவராற்றுப்படை
உரை
- நச்சினார்க்கினியர் உரை
- பரிமேலழகர் உரை
முருகனின் அறுபடை வீடு
தலங்கள் |
தலக்குறிப்பு |
திருப்பரங்குன்றம் |
மதுரைக்கு தென்மேற்கில் உள்ளது |
திருச்சீர்அலைவாய் |
சீராக வந்து மோதும் அலைகளின் கரை வாயிலில் அமைந்துள்ள திருச்செந்தூர் |
திரு ஆவின்குடி |
பொதினிமலை. நாளடைவில் இதுவே பழனிமலை என் ஆயிற்று. |
திருவேரகம் |
சுவாமிமலை. இதனை திருப்பதி என்று நச்சினார்கினியர் கூறுகிறார் |
மலைப்பகுதி |
திருத்தணி. முருகன் குடியிருக்கும் குன்றுகள் |
பழமுதிர்சோலை |
மதுரையை அடுத்துள்ள அழகர் மலை. இது திருமால் இருஞ்சோலை எனவும் வழங்கப்படுகிறது. |
நூல் குறிப்பிடும் செய்திகள்
- முதல் பகுதி = திருப்பரங்குன்றம் என்னும் மலைக்கோவில், இயற்கை வளம், முருகனின் திருக்கோலம், சூரனுடன் முருகன் செய்த போர்.
- இரண்டாம் பகுதி = திருச்சீர் அலைவாய் (திருச்செந்தூர்) தலம், முருகனுடைய ஆறுமுகங்கள், பன்னிரு தோள்களின் செயல்கள்.
- மூன்றாம் பகுதி = திரு ஆவின்குடி (பழனி மலை), வழிபாடும் மகளிரின் சிறப்புகள், முருகனை வெளிப்படும் முனிவரின் பெருமைகள்.
- நான்காம் பகுதி = திருவேரகம் (திருப்பதி) என்னும் தலம், வெளிப்படும் மக்கள், மந்திரம் ஓதுவார் செயல்கள்,
- ஐந்தாம் பகுதி = மலைப்பகுதி, மகளிர், குரக் குரவை, முருகனின் அணி, ஆசை, அழகு
- ஆறாம் பகுதி = பழமுதிர்சோலை, முருகன் இருக்கும் நீர்த்துறை, பழமுதிர் சோலையின் அருவி, முருகன் அருளும் முறை.
பொதுவான குறிப்புகள்
- பத்துப்பாட்டில் காலத்தால் பிந்திய நூல் இதுவே.
- நக்கீரர் பாடியவை = நெடுநல்வாடை, திருமுருகாற்றுப் படை
- ஆற்றுப்படை நூல்கள் பரிசில் பெறச் செல்வோரால் பெயர் பெரும். திருமுருகாற்றுப் படை மட்டும் பரிசில் கொடுப்போரால் (முருகன்) பெயர் பெற்றது.
- முருகனை முருகன் ஆற்றுப்படுத்துவதே திருமுருகாற்றுப்படை என்கிறார் துறை அரங்கனார்.
முக்கிய அடிகள்
- உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு – (முதல் 2 வரிகள்)
- இழுமென இழிதரும் அருவிப்
பழமுதிர் சோலை மலைகிழ வோனே – (இறுதி 2 வரிகள்)
- ஆல்கெழு கடவுள் புதல்வ! மால்வரை
மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!
- முட்டாள் தாமரைத் துஞ்சி வைகறைக்
கட்கமழ் நெய்தல் ஓதி எல்படக்