நான்மணிக்கடிகை
நூல் அமைப்பு
- ஆசிரியர் = விளம்பி நாகனார்
- ஊர் =விளம்பி
- பாடல்கள் = 2 + 104
- பாவகை = வெண்பா
வேறு பெயர்
- துண்டு
நான்மணிக்கடிகை பெயர்க்காரணம்
- நான்கு + மணி + கடிகை = நான்மணிக் கடிகை
- கடிகை = துண்டு, ஆபரணம், தோள்வளை. நான்கு மணிகள் பதிக்கப் பெற்ற தோள்வளை போல் நான்கு நீதி மணிகளால் நிலைநாடாப்பட்ட பாடல்களைக் கொண்ட நூல்.
கடவுள் வாழ்த்து
- முதல் இரண்டு கடவுள் வாழ்த்து பாடலிலும் நான்கு கருத்துக்கள் உள்ளன.
- கடவுள் வாழ்த்து திருமலைப் பற்றியது.
பொதுவான குறிப்புகள்
- ஒவ்வொரு பாடலிலும் நாலு கருத்துக்கள் உள்ளன.
- நூலில் வடமொழி கலப்பு அதிகம்.
- இந்நூல் தொல்காப்பியர் கூறும் அம்மை என்ற வனப்பிற்கு உரியது.
- ஜி.யு.போப் இந்நூலின் 7, 100 ஆகிய இரு பாடல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார்.
- இந்நூலின் மிகப் பிரபலமான அடி = “யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி”
நான்மணிக்கடிகை பாடல்
- யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி
- இந்நிலத்தே மன்னுதல் வேண்டின் இசைநடுக
- தன்னொடு செல்வது வேண்டின் அறம் செய்க
- வெல்வது வேண்டின் வெகுளிவிடல்
- இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்
- வளமில்லாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்
- ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல்
- கொண்டானிற் சிறந்த கேளிர் பிறர்இல்
- மனைக்கு விளக்கம் மடவாள்
- மடவாளுக்கு விளக்கம் புதல்வர்
- புதல்வர்க்கு விளக்கம் கல்வி
- கல்விக்கு இலக்கம் புகழ்சால் உணர்வு