பரிபாடல்
பரிபாடலின் உருவம்
- திணை = அகமும் புறமும்
- பாவகை = பரிபாட்டு
- பாடல்கள் = 70 (கிடைத்தவை 22)
- புலவர் = 13
- அடி எல்லை = 25-400
பெயர்க்காரணம்
- பரிந்து வரும் இசையால் ஆன பாடல்கள்.
- வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களுக்கும் பலவகையான் அடிகளுக்கும் பரிந்து இடம் கொடுக்கும் தன்மை உடையது பரிபாட்டு ஆகும்.
- பா வகையால் பெயர் பெற்ற நூல் இதுவாகும்
- தொல்காப்பியர் காலம் வரை கலிப்பாவும், பரிபாட்டும் வழக்கில் இருந்தது.
நாடக வழக்கிலும் உலகியல் வழக்கிலும் பாடல் சான்ற புலன்நெறி வழக்கம் கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும் உரிய தாகும் என்மனார் புலவர். |
பரிபாடல் வேறு பெயர்கள்
- பரிபாட்டு
- ஓங்கு பரி பாடல்
- இசைப்பாட்டு
- பொருட்கலவை நூல்
- தமிழின் முதல் இசைபாடல் நூல்
தொகுப்பு
- இந்நூலை தொகுத்தவர் தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.
பரிபாடல் உரை, பதிப்பு
- பரிமேலழகர் உரை உள்ளது.
- நூலை முதலில் பதிப்பித்தவர் = உ.வே.சா
பாடல் பகிர்வு முறை
திருமாற்கு இருநான்கு; செவ்வேட்கு முப்பத் தொருபாட்டு காடுகாட்கு ஒன்று; – மருவினிய வையை இரு பத்தாறு; மாமதுரை நான்கென்ப செய்ய பரிபாடல் திறம் |
தெய்வம் |
பழம்பாடலின் படி | தற்போது இருப்பவை |
திருமாலுக்கு | 8 |
6 |
செவ்வேள்(முருகன்) |
31 | 8 |
காடுகாள்(காளி) | 1 |
0 |
வையை |
26 | 8 |
மதுரை | 4 |
0 |
மொத்தம் |
70 |
22 |
பரிப் பாடல் கூறும் என்னுப்பெயர்கள்
எண் |
என்னுப்பெயர்கள் |
0 |
பாழ் |
1/2 |
பாகு |
9 |
தொண்டு |
பரிபாடல் குறிப்பு
- தொல்காப்பிய விதிப்பை பரிபாட்டு வகையில் அமைந்த ஒரே தொகை நூல் பரி பாடல் மட்டுமே.
- தெய்வங்கள் அடிப்படையில் பகுப்பு முறை அமைந்த ஒரே தொகை நூல் இதுவே.
- பாண்டிய நாட்டை மட்டுமே கூறுகிறது.
- பாண்டிய நாட்டை மட்டும் கூறும் நூல்கள் = பரி பாடல், கலித்தொகை
- இந்நூல் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கினையும் கூறுகிறது.
- “கின்று” என்னும் காலம் காட்டும் இடைநிலை முதலில் பரிபாடலில் தான் வருகிறது.
- இந்நூல் உலகின் தோற்றம் குறித்து கூறுகிறது.
- தைந்நீராடல் பற்றி கூறும் நூல் = பரிபாடல்.
- இந்நூல் இசையோடு பாடப்பட்டது.
மு.வ கூற்று
- சங்க காலத்திற்குப் பிறகு பரிபாட்டு என்ற செய்யுள் வடிவம் போற்றப்படாமல் போயிற்று.
- விருதப்பாட்டு வளர்ந்த பிறகு கலிப்பாவும், பரிபாட்டும் போற்றப்படவில்லை
முக்கிய அடிகள்
- மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையுந் சீறார் பூவின்
இதழகத்து அனைய தெருவம், இதழகத்து
அரும் பொகுட்டு அனைத்தே அண்ணல் கோயில்
- தீயினுள் தெறல் நீ! பூவினுள் நாற்றம் நீ!
கல்லினுள் மணியும் நீ! சொல்லினுள் வாய்மை நீ
- ஐம்பெரும் காப்பியம்
- ஐஞ்சிறுங் காப்பியம்
- நாலாயர திவ்வியப் பிரபந்தம்
- திருவிளையாடற் புராணம்
- தேம்பாவணி
- சீராபுரணம்
- சிற்றிலக்கியங்கள்
- மனோன்மணியம்
- பாஞ்சலிசபதம்