பொருள் இலக்கணம்
அகப்பொருள் இலக்கணம்
- பொருள் என்பது = ஒழுக்கமுறை.
- அறவழியில் பொருளீட்டிப் பல்லாரோடு பகுத்துண்டு வாழும் வாழ்வியல் நெறிமுறைகளைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே போற்றிக் காத்தவர், தமிழர்.
- வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தவர் தமிழரே!
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
பொருள் இலக்கணம் எத்தனை வகைப்படும்
- பொருள் இலக்கணம் இரண்டு வகைப்படும். அவை,
- அகப்பொருள் இலக்கணம்
- புறப்பொருள் இலக்கணம்
அகப்பொருள் என்றால் என்ன
- அன்புடைய தலைவன் தலைவி பற்றிய ஒழுக்கத்தினைக் கூறுவது அகத்திணை எனப்படும்.
அகத்திணை எத்தனை வகைப்படும்
- அகத்திணை ஏழு வகைப்படும். அவை,
- குறுஞ்சி
- முல்லை
- மருதம்
- நெய்தல்
- பாலை
- கைக்கிளை
- பெருந்திணை
அன்பின் ஐந்திணை யாவை
- அன்பின் ஐந்திணை = குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.
அகப்பொருள் பொருள்கள்
- அகப்பொருள் போன்ருள்கள் = மூன்று. அவை,
- முதற்பொருள்
- கருப்பொருள்
- உரிப்பொருள்
முதற்பொருள் என்றால் என்ன
- அகவொழுக்கம் நிகழ்தற்குக் காரணமான நிலமும் பொழுதும் முதற்பொருள் எனப்படும்.
ஐவகை நிலங்கள்
- குறிஞ்சி = மலையும் மலைசார்ந்த இடமும்
- முல்லை = காடும் காடு சார்ந்த இடமும்
- மருதம் = வயலும் வயல்சார்ந்த இடமும்
- நெய்தல் = கடலும் கடல்சார்ந்த இடமும்
- பாலை = மணலும் மணல்சார்ந்த இடமும்.
பொழுது எத்தனை வகைப்படும்
- பொழுது இரண்டு வகைப்படும். அவை,
- பெரும்பொழுது
- சிறுபொழுது.
பெரும்பொழுது என்றால் என்ன
- ஒரு ஆண்டின் ஆறு பெரும் கூறுகளை பெரும்பொழுது என்பர். அவை,
- கார்காலம் = ஆவணி, புரட்டாசி
- குளிர்காலம் = ஐப்பசி, கார்த்திகை
- முன்பனிக்காலம் = மார்கழி, தை
- பின்பனிக்காலம் = மாசி, பங்குனி
- இளவேனிற்காலம் = சித்திரை, வைகாசி
- முதுவேனிற்காலம் = ஆனி, ஆடி
சிறுபொழுது என்றால் என்ன
- ஒரு நாளின் ஆறு கூறுகளை சிறுபொழுது என்பர். அவை,
- காலை = காலை 6 மணிமுதல் 10 மணிவரை
- நண்பகல் = காலை 10 மணிமுதல் 2 மணிவரை
- ஏற்பாடு = பிற்பகல் 2 மணிமுதல் 6 மணிவரை
- மாலை = மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை
- யாமம் = இரவு 10 மணிமுதல் இரவு 2 மணிவரை
- வைகறை = இரவு 2 மணிமுதல் காலை 6 மணிவரை.
எற்பாடு என்றால் என்ன
- எற்பாடு = எல் + பாடு.
- எல் = ஞாயிறு.
- பாடு = மறையும் நேரம்.
திணையும் பொழுதும்
திணை | பெரும்பொழுது | சிறுபொழுது |
---|---|---|
குறிஞ்சி | குளிர்காலம், முன்பனிக்காலம் | யாமம் |
முல்லை | கார்காலம் | மாலை |
மருதம் | ஆறு பெரும்பொழுதுகள் | வைகறை |
நெய்தல் | ஆறு பெரும்பொழுதுகள் | எற்பாடு |
பாலை | இளவேனில், முதுவேனில், பின்பனி | நண்பகல் |
கருப்பொருள் என்றால் என்ன
- அந்தந்த நிலத்திற்குரிய தெய்வம், மக்கள், உணவு, விலங்கு முதலியன பொருள்கள் கருப்பொருள் எனப்படும்.
அன்பின் ஐந்திணை
அன்பின் ஐந்திணை
கருப்பொருள் | குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை |
---|---|---|---|---|---|
தெய்வம் | முருகன் | திருமால் | இந்திரன் | வருணன் | கொற்றவை |
மக்கள் | வெற்பன், குறவர், குறத்தியர் | தோன்றல், ஆயர், ஆய்ச்சியர் | ஊரன், உழவர், உழத்தியர் | சேர்ப்பன், பரதன், பரத்தியர் | எயினர், எயிற்றியர் |
உணவு | மலைநெல், தினை | வரகு, சாமை | செந்நெல், வெண்ணெல் | மீன், உப்புக்குப் பெற்ற பொருள் | சூறையாடலால் வரும் பொருள் |
விலங்கு | புலி, கரடி, சிங்கம் | முயல், மான், புலி | எருமை, நீர்நாய் | முதலை, சுறா | வலியிழந்த யானை |
பூ | குறிஞ்சி, காந்தள் | முல்லை, தோன்றி | செங்கழுநீர், தாமரை | தாழை, நெய்தல் | குரவம், பாதிரி |
மரம் | அகில், வேங்கை | கொன்றை, காயா | காஞ்சி, மருதம் | புன்னை, ஞாழல் | இலுப்பை, பாலை |
பறவை | கிளி, மயில் | காட்டுக்கோழி, மயில் | நாரை, நீர்க்கோழி, அன்னம் | கடற்காகம் | புறா, பருந்து |
ஊர் | சிறுகுடி | பாடி, சேரி | பேரூர், மூதூர் | பட்டினம், பாக்கம் | குறும்பு |
நீர் | அருவிநீர், சுனை நீர் | காட்டாறு | மனைக்கிணறு, பொய்கை | மணற்கிணறு, உவர்க்கழி | வற்றிய சுனை, கிணறு |
பறை | தொண்டகம் | ஏறுகோட்பறை | மணமுழா, நெல்லரிகிணை | மீன்கோட்பறை | துடி |
கருப்பொருள் | குறிஞ்சி | முல்லை | மருத யாழ் | விளரி யாழ் | பாலை யாழ் |
தெய்வம் | முருகன் | திருமால் | மருதப்பண் | செவ்வழிப்பண் | பஞ்சுரப்பண் |
தொழில் | தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல் | ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல் | நெல்லரிதல், களை பறித்தல் | மீன்பிடித்தல், உப்பு விளைத்தல் | வழிப்பறி, நிரை கவர்தல் |