மாணிக்கவாசகர்
மாணிக்கவாசகர் வாழ்க்கை குறிப்பு
- இயற்பெயர் = தெரியவில்லை
- பெற்றோர் = சம்பு பாதசாரியார், சிவஞானவதியார்
- ஊர் = பாண்டி நாட்டு திருவாதவூர்
- வாழ்ந்த காலம் = 32 ஆண்டுகள்
- மார்க்கம் = ஞானம் என்னும் சன் மார்க்கம்
- நெறி = ஞானம் நெறி
- ஆட்கொள்ளட்பாட இடம் = திருப்பெருந்துறை
- இறைவனடி சேர்ந்த இடம் = சிதம்பரம்
மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள்
- 8 ஆம் திருமுறை = திருவாசகம், திருக்கோவையார்
- திருவெம்பாவை
- போற்றித் திருவகவல்
திருவாசகம் வேறு பெயர்கள்
- தமிழ் வேதம்
- சைவ வேதம்
திருக்கோவையார் வேறு பெயர்கள்
- திருசிற்றம்பலக்கோவை
- ஆரணம்
- ஏரணம்
- காமநூல்
- எழுத்து
- இராசாக்கோவை
மாணிக்கவாசகர் சிறப்பு பெயர்கள்
- திருவாதவூரார்
- தென்னவன் பிரம்மராயன்
- அழுது அடியடைந்த அன்பர்
- வாதவூர் அடிகள்
- பெருந்துறைப் பிள்ளை
- அருள் வாசகர்
- மணிவாசகர்
சிறப்புகள்
- மன்னனக்காக குதிரை வாங்க சென்ற பொது திருப்பெருந்துறை இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார்.
- இவருக்காக இறைவன் நரியை பரியக்கினார் (பரி=குதிரை)
- பாண்டியன் மாணிக்கவாசகரை “கல்லைக்கட்டி வைகையில்” இட்ட பொது, கோபமுற்று வைகையில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தினான்.
- திருவாசகத்தை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்துள்ளார்.
- இராமலிங்க அடிகள், திருவாசகத்தின் இனிமையை போற்றுகிறார்.
தேன்கலந்து பால்கலந்து செழுங்கணித் தீஞ்சுவைகலந்து ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே |
- இவர் பொருட்டே வந்தி என்ற கிழவியின் கூலி ஆளாய் இறைவன் பிட்டுக்கு மண் சுமந்தார்.
- பாடல்களை இவர் சொல்ல இறைவனே எழுதினார்.
- புத்தர்களை ஊமையாக்கியது, புத்த அரசனின் ஊமை மகளைப் பேசவைத்தது போன்ற அற்புதங்களை செய்துள்ளார்.
- “திருவாசகம் ஒருகால் ஓதின் கருங்கல் மனமும் கரைந்துருகும்” – நால்வர் நான்மணிமாலை
திருவாசகம் சிறப்புகள்
- திருவாசகத்தில், “தும்பி ஊதுதல், பொற்சுண்ணம் இடித்தல், தெள்ளேணம் கொட்டுதல், திருத்தோள் நோக்கம், பூவல்லி காதல், அம்மானை ஆடல்” முதலான நாட்டுப்புற விளையாட்டுகள் பாடல்களில் கூறப்பட்டுள்ளன.
- “திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார்” என்ற பழமொழி உண்டாயிற்று.
- 51 தலைப்புகளில் 659 பாடல்கள் உள்ளன.
- திருவாசகத்திற்கு பேராசிரியர் உரை அளித்துள்ளார்.
திருக்கோவையார் சிறப்புகள்
- “பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என இறைவன் கேட்க மாணிக்கவாசகர் திருக்கோவையாரை பாடினார்.
- திருக்கோவையாரை, “திருசிற்றம்பலக்கோவை” எனவும் அழைப்பர்
- “இராசாக்கோவை” என்று அழைக்கப்படும் நூல் = திருக்கோவையார் ஆகும்.
- இந்நூலின் வேறு பெயர்கள் = ஆரணம், ஏரணம், காமநூல், எழுத்து
- இந்நூல் கட்டளை கலித்துறையால் பாடப்பட்டது.
- 400 பாடல்களைக் கொண்டது.
- கோவை நூல்களுள் காலத்தால் முற்பட்டது
- திருக்கோவையாருக்கு பண்டிதமணி கதிரேசஞ்செட்டியார் உரை வகுத்துள்ளார்.
குறிப்புகள்
- அரிமர்த்த பாண்டியனிடம் அமைச்சராக இருந்தவர்.
- மன்னனிடம் “தென்னவன் பிரம்மராயன்” என்னும் பட்டம் பெற்றார்.
- மாணிக்கவாசகர் சிவபெருமானைத் தலைவனாகக் கொண்டு 20 பாடல்களில் திருவெம்பாவை பாடினார்.
மேற்கோள்
- நமச்சிவாயம் வாழ்க நாதம் தாள்வாழ்க
- ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி
- தென்னாடுடைய சிவனே போற்றி
- எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
- வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
- உற்றாரை யார்வேண்டேன் ஊர் வேண்டேன் பேர்வேண்டேன்
- அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
- புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப்
- பல்மிருகமாகிப் பறவையாய் பாம்பாகி
Use full
It was use ful
Use full
Hii bro
It is very important note