முகவுரையில் திருத்தும்
முகவுரையில் திருத்தும்
1973-ம் ஆண்டு “கேசவானந்த பாரதி எதிர் இந்திய அரசு” (Kesavananda Bharati vs Union of India (1973)) வழக்கில் முதல் முறையாக இந்திய அரசியல் அமைப்பு சட்ட விதி 368-ஐ (Article 368) பயன்படுத்தி, முகவுரையை திருத்த முடியுமா (Is Preamble be Amended?) என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் முன்னுரை அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இல்லாததால் அதை திருத்த முடியாது என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் முகவுரையில் பொறிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் அடிப்படைக் அம்சங்களையோ அல்லது அடிப்படை கூறுகளை அழிக்கவோ அல்லது மாற்றவோ, விதி 368-ஐ பயன்படுத்த முடியாது என இவ்வழக்கில் வாதாடப்பட்டது.
அனால் உச்சநீதிமன்றமோ (Supreme Court), “முகவுரையானது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் ஒரு பகுதியே (Preamble is the integral part of the Constitution)” என தீர்பளித்தது. மேலும் இது தொடர்பாக பெருபரி யூனியன் வழக்கில் (Berubari Union (1960)) அது அளித்த தீர்ப்பு தவறானது என்று நீதிமன்றம் கூறியது. மேலும் ‘அடிப்படை அம்சங்களுக்கு’ எந்தத் திருத்தமும், மாற்றமும் செய்யப்படக் கூடாது என்ற நிபந்தனைக்கு உட்பட்டு (subject to the condition that no amendment is done to the ‘basic features’), முன்னுரையைத் திருத்த முடியும் என்று கூறப்பட்டது. அதாவது, “ முன்னுரையில் உள்ள அரசியலமைப்பின் அடிப்படை கூறுகள் அல்லது அடிப்படை அம்சங்களை 368 வது பிரிவின் கீழ் ஒரு திருந்தங்கள் மூலம் மாற்ற முடியாது என்று நீதிமன்றம் உறுதிபடப் தெரிவித்தது”.
உச்சநீதிமன்றம் மேலும் கூறியதாவது, “நமது அரசியலமைப்பு எனும் அணிமாளிகை, முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைக் கூறுகள் என்ற அஸ்திவாரத்தின் மீது எழுப்பப்பட்டது. இந்த அடிப்படைக் கூறுகளில் எவற்றையேனும் நீக்கிவிட்டால், மேற்கட்டுமானம் நிலைத்திருக்க வாய்ப்பில்லை. அதுபோல் அரசியலமைப்பும் அரசியல் அமைப்பாக இருக்காது. அது தனது தனித்தன்மையை இழந்துவிடும். எனவு முகவுரையில் இடம்பெற்றுள்ள அரசியலமைப்பின் அடிப்படைக் கூறுகள் அல்லது கட்டமைப்பினை 368-வது பிரிவின் படி திருத்தும் ஏய்த்து மாற்றிவிட முடியாது (The Court observed, ‘The edifice of our Constitution is based upon the basic elements mentioned in the Preamble. If any of these elements are removed, the structure will not survive and it will not be the same Constitution or it cannot maintain its identity. An amending power cannot be interpreted so as to confer power on the Parliament to take away any of these fundamental and basic characteristics of the polity).
முகவுரையில் திருத்தும்
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரையானது இதுவரை ஒரே ஒருமுறை தான் திருத்தும் செய்யப்பட்டுள்ளது. 1976-ஆம் ஆண்டு 42-வது சட்டத்திருத்தத்தின் (42nd Amendment Act of 1976) மூலம், அரசியலமைப்பின் முகவுரையில் “சமத்துவம், மதசார்பின்மை மற்றும் ஒருமைப்பாடு” (Socialist, Secular and Integrity) ஆகிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டன.
- PREAMBLE OF INDIAN CONSTITUTION / அரசியலமைப்பின் முகப்புரை
- WORDS IN THE PREAMBLE / முகவுரையில் உள்ள சொற்கள்