இந்திய அரசியலமைப்பின் முகப்புரை

இந்திய அரசியலமைப்பின் முகப்புரை

இந்திய அரசியலமைப்பின் முகப்புரை

இந்திய அரசியலமைப்பின் முகப்புரை

       முகப்புரை (Preamble), முதன் முதலில் அமெரிக்க அரசியல் அமைப்பு (American Constitution) சட்டத்தில் தான் இடம் பெற்றது. அதனை பின்பற்றியே உலகின் உள்ள பெரும்பாலான நாடுகள், தங்களின் அரசியல் அமைப்பு சட்டத்தில், முகப்புரையை சேர்த்தன. “முகப்புரை” என்பது அரசியல் அமைப்பு சட்டத்தினை பற்றிய ஒரு முன்னுரை அல்லது அறிமுகம் (Introduction or Preface of the Constitution) ஆகும். இதில் அந்த நாடுகளின் அரசியல் அமைப்பு சட்டத்தின் சாரம்சம் அல்லது சுருக்கம் (Essence or Summary) இடம் பெரும்.

குறிக்கோள் தீர்மானம்

       இந்திய அரசியல் அமைப்பு சட்டதின் முகப்புரையானது, ஜவஹர்லால் நேரு அவர்களால் “அரசியல் நிர்ணயசபையில்” (Constituent Assembly) தாக்கல் செய்யப்பட்ட “குறிக்கோள் தீர்மானத்தை” (Objectives Resolution) அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாகும். இந்த குறிக்கோள் தீர்மானம், ஜவஹர்லால் நேருவால் 1946-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி, அரசியல் நிர்ணய சபையில் தாக்கல் செய்யப்பட்டது. குறிக்கோள் தீர்மானத்தை, அரசியல் நிர்ணயசபை ஏற்றுக்கொண்ட தினம் ஜனவரி 22-ம் தேதி 1947 ஆகும்.

அரசியல் அமைப்பு சட்டத்தின் அடையாள அட்டை

  • என்.ஏ.பல்கிவாலா என்பார், அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புரையை, “அரசியல் அமைப்பு சட்டத்தின் அடையாள அட்டை” (Identity Card of the Constitution) என்கிறார்.

இந்திய அரசியலமைப்பின் முகப்புரை திருத்தப்பட்ட ஆண்டு

  • முகப்புரையானது, ஒரே ஒரு முறை மட்டுமே இதுவரை திருத்தும் செய்யப்பட்டுள்ளது. 1976-ம் ஆண்டு 42-வது சட்டத்திருத்தத்தின் (42nd Amendment Act of 1976) மூலம் அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புரையில் 3 புதிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டது. அவை, “சமதர்மம் (Socialist), மதசார்பின்மை (Secular) மற்றும் ஒருமைப்பாடு (Integrity)” ஆகும்.

 

Leave a Reply