அரசியல் நிர்ணய சபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 389 ஆகும்
11 பிரிட்டிஷ் இந்திய மாகணங்களில் இருந்து 292 இடங்கள்
சுதந்திர அரசுகளின் 93 இடங்கள்
முதன்மை ஆணையர்கள் வசமுள்ள மாகாணத்தில் இருந்து 4 இடங்கள்
அரசியல் நிர்ணயசபையின் அமைப்பு – இதில் 296 இடங்கள் பிரிட்டிஷ் இந்தியாவிற்கும் , 93 இடங்கள் சுதந்திர மாகாண அரசகளுக்கும் ஒதுக்கப்பட்டன
296 இடங்களில், 292 இடங்களுக்காண உறுப்பினர்கள் 11 மாகாணங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டனர்
11 மாகாணங்கள் = மதராஸ், பாம்பே, உத்திரப்பிரதேசம், பீகார், மத்திய மாகாணம், ஒரிசா, பஞ்சாப், வடமேற்கு எல்லை, சிந்து, வங்காளம் மற்றும் அஸ்ஸாம்
4 உறுப்பினர்கள், நான்கு முதன்மை ஆணையரின் மாகங்களில் இருந்து, மாகாணத்திற்கு ஒருவர் என தேர்வு செய்யப்பட்டனர்.
நான்கு மாகாணங்கள் = டெல்லி, அஜ்மீர்-மேர்வாரா, கூர்க், பலுசிஸ்தான்
மாகாணங்கள் மற்றும் இந்திய மாநில மக்கள் தொகை விகிதத்தின் அடிப்படையில் (சுமார் 10 இலட்சம் பேருக்கு ஒரு உறுப்பினர்) உறுப்பினர் இடங்கள், அந்தந்த பகுதியில் உள்ள பெரும்பான்மை சமுதாயங்களைச் சேர்ந்தவர்களுக்கு அமையுமாறு இருந்தது
பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள 296 இடங்களை, மூன்று பிரிவில் பிரித்தனர். அவை
முஸ்லிம்
சீக்கியர்கள்
பொது (முஸ்லிம், சீக்கியர் அல்லாதவர்கள்)
ஒவ்வொரு மதத்தினை சார்ந்த உறுப்பினர்களையும், அம்மதத்தை சார்ந்த மக்கள் தேர்வுசெய்து மாகான சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர். அதன்படி
இந்துக்கள் = 163 பேர்
முஸ்லிம்கள் = 80 பேர்
தாழ்த்தப்பட்ட பிரிவினர் = 31 பேர்
இந்திய கிறித்துவர்கள் = 6 பேர்
பழங்குடியினர் = 6 பேர்
சீக்கியர்கள் = 4 பேர்
ஆங்கிலோ-இந்தியர்கள் = 3 பேர்
பார்சிகள் = 3 பேர்
சுதந்திர அரசுகளுக்கான 93 இடங்களுக்கான உறுப்பினர்களை, அந்தந்த அரசுகளின் தலைமை பிரிவால் பரிந்துரை செய்து அனுப்பப்பட்டனர்
பிரிட்டிஷ் மாகாணங்களில் உள்ள 296 இடங்களுக்கான தேர்தல் 1946-ம் வருடம் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்றது. இதில் கட்சிகள் பெற்ற வெற்றியானது,
இந்திய காங்கிரஸ் = 208 இடங்கள்
முஸ்லிம் லீக் = 73 இடங்கள்
சுயேச்சை = 15 இடங்கள்
இந்த தேர்தலானது நேரடி தேர்தல் அல்ல. மறைமுகத் தேர்தல் முறையாகும்.
“பிரிவினை திட்டம்” (அல்லது) “டிக்கி பேர்ட் திட்டம்” (அல்லது) “ஜூன் 3 திட்டம்” அல்லது “மவுண்ட்பேட்டன் திட்டத்தின்” படி இந்திய, பாகிஸ்தான் பிரிக்கப்பட்டு, மேற்கு பஞ்சாப், கிழக்கு வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து, பலுசிஸ்தான், சில்ஹெட் (அஸ்ஸாம்) ஆகியவை பாகிஸ்தானுடன் சேர்க்கப்பட்டதால் மொத்த “இந்திய” உறுப்பினர்களின் எண்ணிக்கை 299 ஆனது.
299 உறுப்பினர்களில்
9 மாகாணங்களில் = 226 உறுப்பினர்கள்
3 முதன்மை ஆணையர் மாகாணம் = 3 உறுப்பினர்கள் (டெல்லி, அஜ்மீர், கூர்க்)
29 சுதந்திர அரசில் = 7௦ உறுப்பினர்கள்
மாகாண வாரியாக உறுப்பினர்கள் எண்ணிக்கையில்,
ஒருங்கிணைந்த மாகாணம் = 55 உறுபினர்கள்
மதராஸ் மாகாணம் = 49 உறுபினர்கள்
பீகார் = 36உறுப்பினர்கள்
சுதந்திர அரசில் மிக அதிகபட்சமாக மைசூர் அரசில் – 7 உறுப்பினர்கள் இருந்தனர்
அரசியல் நிர்ணயசபையின் அமைப்பு
இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் அனைவரும் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள் இல்லை.
பாதி பேர் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். மீதம் பரிந்துரை செய்து அனுப்பப்பட்டவர்கள்.
தேர்தல் ஆனது அனைவரும் வாக்களித்து தேர்வு செய்யப்படவில்லை. 1935-ம் வருட இந்திய அரசு சட்டப்படி, வாக்குரிமையானது சொத்து, வரி செலுத்துதல், மற்றும் கல்வி தகுதி அடிப்படையில் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் மட்டுமே வாக்களித்து தேர்வு செய்தனர்
அரசியல் நிர்ணய சபையில், காங்கிரசின் சார்பில் முக்கியத் தலைவர்கள் ஒவ்வொரு அமைப்பு பிரிவிற்கும் இருந்தனர்
பெண்கள் = விஜயலட்சுமி பண்டிட், துர்காபாய், சரோஜினி நாயுடு
ஆங்கிலோ இந்தியர் = பிரான்க் அந்தோணி
ஆதிவாசி = ஜெயபால் சிங்
பிற்படுத்தப்பட்டோர் = ஹரேந்திர முகர்ஜி
கூர்க்கா சமுகம் = ஏ.பகதூர்
அரசியல் நிர்ணய சபையில் அணைத்து முக்கிய தலைவர்களும் தேர்வுசெய்யப்பட்ட நிலையில், இதில் இடம்பெறாத ஒரே முக்கிய தலைவர் = மகாத்மா காந்தி மற்றும் முகமது அலி ஜின்னா மட்டுமே.
அரசியல் நிர்ணயசபையின் அமைப்பு – அதிகாரப்பூர்வ முத்திரையாக “யானை” (Elephant) சின்னம் தேர்வுசெய்யப்பட்டது