29 SEPTEMBER 2021 TAMIL CURRENT AFFAIRS

29 SEPTEMBER 2021 TAMIL CURRENT AFFAIRS

       29 SEPTEMBER 2021 TAMIL CURRENT AFFAIRS  TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 29 செப்டம்பர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இந்தியாவின் முதல் விளையாட்டு நடுவர் மையம்

29 SEPTEMBER 2021 TAMIL CURRENT AFFAIRS

  • இந்தியாவின் முதல் விளையாட்டு நடுவர் மையம், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில், மத்திய சட்ட அமைச்சர் கிர்ரன் ரிஜ்ஜு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது
  • இம்மையத்தை “ட்ரான்ஸ் ஸ்டெடியா” என்ற அமைப்பு உருவாக்கி உள்ளது
  • இம்மையம் விளையாட்டுத் துறையில் ஏற்படும் சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது
  • டிரான்ஸ்ஸ்டேடியா என்பது ஒரு விளையாட்டை மையமாகக் கொண்ட அமைப்பாகும், இது இந்தியாவில் விளையாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது.

இந்திரா நூயியின் நினைவு குறிப்புகள் புத்தகம்

29 SEPTEMBER 2021 TAMIL CURRENT AFFAIRS

  • உலகப் புகழ் பெற்ற பெப்சி குளிர்பான நிறுவனத்தின் முன்னால் தலைவர் மற்றும் முதன்மை அதிகாரியான “இந்திரா நூயி”, “என் வாழ்க்கை முழுமையாக: வேலை, குடும்பம் மற்றும் நமது எதிர்காலம்” எனப் பொருள்படும் “My Life in Full: Work, Family and Our Future” என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்
  • இவர் பெப்சி நிறுவனத்தில் 24 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். அதில் 12 ஆண்டுகள் தலைமை பொறுப்பை ஏற்று, 35 பில்லியனாக இருந்த நிறுவனத்தின் வருவாயை, 63.5 பில்லியன் டாலராக உயர்த்தினார்

இராணுவ பொறியியல் சேவைகள் தினம்

29 SEPTEMBER 2021 TAMIL CURRENT AFFAIRS

  • இராணுவ பொறியியல் சேவைகள் தினம் அல்லது இராணுவ பொறியியல் சேவைகள் உதய தினம், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26 ஆம் தேதி இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்டது
  • இந்த வருடம் 99-வது இராணுவ பொறியியல் சேவைகள் தினம் கொண்டாடப்பட்டது
  • மிலிட்டரி இன்ஜினியர் சர்வீசஸ் (எம்இஎஸ்) என்பது அதன் அதிகாரிகள் மற்றும் துணை ஊழியர்களின் இராணுவ மற்றும் சிவில் கூறுகளைக் கொண்ட ஒரு இடை-சேவை நிறுவனமாகும்.
  • MES இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான மற்றும் பராமரிப்பு முகமையாகும், இது ஆண்டுக்கு சுமார் 30000 கோடி மதிப்பிலான வேலைகளை மேற்கொள்கிறது

உலக இருதய தினம்

29 SEPTEMBER 2021 TAMIL CURRENT AFFAIRS

  • உலக இருதய தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது
  • இத்தினத்தின் நோக்கம், இதய நோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய உடல்நலப் பிரச்சினைகளுக்கு மக்களின் கவனத்தை ஈர்ப்பதாகும்
  • மாரடைப்பு, பக்கவாதம், இதய செயலிழப்பு மற்றும் இதனுடன் தொடர்புடைய வேறு எந்த இருதய நோய்களையும் தவிர்ப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கைமுறையில் மாற்றங்களை ஊக்குவிப்பதற்காக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது

உணவு இழப்பு மற்றும் கழிவு பற்றிய சர்வதேச விழிப்புணர்வு தினம்

29 SEPTEMBER 2021 TAMIL CURRENT AFFAIRS

  • ஐக்கிய நாடுகள் போதுசபையானது, கடந்த 2019 ஆம் ஆண்டு, ஒவ்வொரு ஆடநின் செப்டம்பர் 29 ஆம் தேதியை “உணவு இழப்பு மற்றும் கழிவு பற்றிய சர்வதேச விழிப்புணர்வு தினம்” கடைபிடிக்கப்பட வேண்டும் என தெரிவித்தது
  • உலகளவில், அறுவடை மற்றும் சில்லறை விற்பனையில் 14 சதவிகித உணவுகள் வீணாகின்றது என்றும், மொத்த உலகளாவிய உணவு உற்பத்தியில் 17 சதவிகிதம் வீணாகிறது (வீடுகளில் 11 சதவீதம், உணவு சேவையில் 5 சதவீதம் மற்றும் சில்லறை விற்பனையில் 2 சதவீதம்) என்றும் தெரிவித்துள்ளது

குவாண்டம் தொழில்நுட்பத்திற்கான “மேலாண்மை மையம்”

29 SEPTEMBER 2021 TAMIL CURRENT AFFAIRS

  • இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) டெல்லி அதன் வளாகத்தில், வளர்ந்து வரும் குவாண்டம் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக புதிய “மேலாண்மை மையத்தை” துவக்கி உள்ளது
  • இந்திய அரசின் சார்பில் சமிபத்தில், குவாண்டம் தொழில்நுட்ப பணிகளுக்காக எட்டாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்ட 157 கலைப்பொருட்கள்

29 SEPTEMBER 2021 TAMIL CURRENT AFFAIRS

  • இந்தியப் பிரதமர் மோடியின் சமிபத்திய அமெரிக்க பயணத்தின் பொழுது, அமெரிக்க அரசாங்கம் சார்பில் இந்தியாவிற்கு சொந்தமான 157 புராதான கலைப்பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்களை ஒப்படைத்தது
  • இந்தியப் பிரதமரும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனும் திருட்டு, சட்டவிரோத வர்த்தகம் மற்றும் கலாச்சார பொருட்களின் கடத்தல் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்
  • இதில் 12 ஆம் நூற்றாண்டை சார்ந்த நடராஜர் சிலை, 10 நூற்றாண்டை சேர்ந்த ரேவண்டாவின் மணல் சிற்பம் போன்றவை அடங்கும்.
  • இதில் 71 பொருட்கள் கலாசாரம் சார்ந்தவை என்றும், 60 பொருட்கள் இந்து மதத்தை சார்ந்தது என்றும், 16 பொருட்கள் புத்த மதத்தை சார்ந்தது என்றும், 9 பொருட்கள் சமண மதத்தை சார்ந்தது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகமாக தனியாக சைக்கிள் ஓட்டி புதிய கின்னஸ் சாதனை

29 SEPTEMBER 2021 TAMIL CURRENT AFFAIRS

  • இந்திய ராணுவத்தை சேர்ந்த கர்னல் ஸ்ரீபாத ஸ்ரீராம், காஸ்மீரின் மணாலி முதல் லே வரையிலான 472 கிலோமீட்டர் தூரத்தை, தனியாகவும், வேகமாகவும் சைக்கிளில் ஓட்டி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்
  • அவர், இத்தூரத்தை 34 மணி நேரம் 54 நிமிடங்களில் கடந்து புதிய கின்னஸ் சாதனையை உருவாக்கி உள்ளார்

35 புதிய பயிர் வகைகளை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர்

29 SEPTEMBER 2021 TAMIL CURRENT AFFAIRS

  • இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலால் உருவாக்கப்பட்ட 35 வகையான பயிர் விதிகளை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்
  • இந்நிகழ்ச்சியில், டெல்லியில் இருந்து பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக கலந்துக் கொண்டார். 35 வகையான பயிர் விதிகளை நாட்டுக்காக அர்ப்பணித்தார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் புதிய தலைவர்

  • காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு பிறகு அதன் முழுநேர தலைவராக எஸ்.கே.ஹல்தார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
  • காவிரி நதி நீர் பங்கீட்டில் உள்ள பிரச்சனைகளை களைவதற்காக நீண்ட கால சட்ட போராட்டத்திற்கு பிறகு, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையமும், காவிரி ஒழுங்காற்றாகவும் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

மூத்த குடிமக்களுக்கான உதவி எண் – 14567

29 SEPTEMBER 2021 TAMIL CURRENT AFFAIRS

  • சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில், மூத்த குடிமக்களுக்காக புதிய உதவி எண் சேவை துவங்கப்பட்டுள்ளது. “14567” என்ற இந்த பாண் இந்தியா உதவி எண், ஒரு கட்டணமில்லா சேவை எண்ணாகும்.
  • மூத்த குடிமக்களுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு, உதவி புரியும் வகையில் இச்சேவை துவக்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் 17-வது உதய தினம்

29 SEPTEMBER 2021 TAMIL CURRENT AFFAIRS

  • தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA – National Disaster Management Authority) 17 வது உருவாக்கும் நாள் செப்டம்பர் 28 அன்று கொண்டாடப்பட்டது.
  • இது பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 மூலம் நிறுவப்பட்ட, இந்தியாவில் பேரிடர் மேலாண்மைக்கான உச்ச சட்டரீதியான அமைப்பாகும்.

 

 

  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 28,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 27,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 26,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 25,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 24,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 23,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 22,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 21,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 20,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 19,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 18,2021
  • TNPSC DAILY CURRENT AFFAIRS IN TAMIL 17,2021

Leave a Reply