இராவண காவியம்
புலவர் குழந்தை குறிப்பு
- பெயர் = புலவர் குழந்தை
- ஊர் = ஈரோடு மாவட்டம் ஓலவலசுப் பண்ணைக்காரர்குடி
- பெற்றோர் = முத்துச்சாமிக் கவுண்டர், சின்னம்மையார்
- காலம் = ஜூலை 1, 1906 – செப்டம்பர் 22, 1972
புலவர் குழந்தை நடத்திய இதழ்
- வேளாண் (மாத இதழ்)
புலவர் குழந்தை செய்யுள் நூல்கள்
- இராவணகாவியம்
- அரசியலரங்கம் (சிந்துப்பாவில் தமிழக வரலாற்றினைச் சுவைபடக் கூறுகிறது)
- காமஞ்சரி (இது பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் மனோன்மணீயம் போல ஒரு நாடகக் காவியமாகும்)
- நெருஞ்சிப்பழம்
- உலகப் பெரியோன் கென்னடி
- திருநணா சிலேடை வெண்பா
- புலவர் குழந்தைப் பாடல்கள்
- கன்னியம்மன் சிந்து
- ஆடி வேட்டை
- நல்லதம்பி சர்க்கரைத் தாலாட்டு
- வெள்ளகோவில் வீரகுமாரசாமிரத உற்சவச்சிந்து
- வீரகுமாரசாமி காவடிச்சிந்து
- வெள்ளகோவில் வழிநடைச்சிந்து
- ஆடிப்பேட்டை நல்லதம்பி சர்க்கரைத் தாலாட்டு
- வெள்ளகோவில் வீரகுமாரசாமி ரத உற்சவச்சிந்து
- வீரகுமாரசாமி காவடிச்சிந்து
- வெள்ளகோவில் வழிநடைச்சிந்து
புலவர் குழந்தை உரை எழுதிய நூல்கள்
- திருக்குறள் குழந்தை உரை (25 நாட்களில் முடித்தார்)
- தொல்காப்பியப் பொருளதிகாரம்
- நீதிக்களஞ்சியம்
புலவர் குழந்தை யாப்பிலக்கண நூல்கள்
- யாப்பதிகாரம்
- தொடையதிகாரம்
- இந்நூல் (பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் எனும் இலக்கண நூல் போன்றே இலக்கண நூற்பா நூல்)
புலவர் குழந்தை உரைநடை நூல்கள்
- தொல்காப்பியர் காலத்தமிழர்
- திருக்குறளும் பரிமேலழகரும்
- புவாமுல்லை
- கொங்கு நாடு
- தமிழக வரலாறு
- தமிழ் வாழ்க
- தீரன் சின்னமலை
- கொங்குநாடும் தமிழும்
- கொங்குகுலமணிகள்
- அருந்தமிழ்விருந்து
- அருந்தமிழ் அமிழ்து
- சங்கத் தமிழ்ச் செல்வம்
- ஒன்றேகுலம்
- அண்ணல் காந்தி
- தமிழ் எழுத்து சீர்திருத்தம்
இராவண காவியம் நூல் அமைப்பு
- காண்டம் = 5 காண்டங்கள்
- படலங்கள் = 57 படலங்கள்
- பாடல்கள் = 3100
- முதல் படலம் = தமிழகப் படலம்
- இறுதி படலம் = இறுவாய்ப் படலம்
இராவண காவியம் காண்டப் பிரிவுகள்
- முதல் காண்டம் = தமிழ்க் காண்டம்
- 2-வது காண்டம் = இலங்கைக் காண்டம்
- 3-வது காண்டம் = விந்தக் காண்டம்
- 4-வது காண்டம் = பழிபுரி காண்டம்
- 5-வது காண்டம் = போர்க் காண்டம்
புலவர் குழந்தை ஆசிரியர் சிறப்பு
- இயற்கையிலேயே கவிபாடும் ஆற்றல் வாய்க்கப் பெற்றவர்.
- இசைப் பாடல்களே இவர் முதன் முதலாகப் பாடிய பாடல்கள்.
- ஆசிரியர் உதவியின்றித் தாமே முயன்று தமிழ் கற்றுச் சீரிய புலமை எய்தினார்.
- அதன் அடையாளமாக 1934இல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் புலவர் பட்டம் பெற்றார்.
- ஆசிரியராகவும் தலைமைத் தமிழாசிரியராகவும் 39 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
- இவரது நூல்கள் 2006 இல் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டது.
புலவர் குழந்தை ஆசிரியர் குறிப்பு
- இராவண காவியம், இருபதாம் நூற்றாண்டில் தமிழ்மொழியில் தோன்றிய காவியங்களுள் ஒன்று.
- திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் புலவர் குழந்தை அவர்களால் இயற்றப்பட்ட இக்காவியம் 1946 இல் வெளிவந்தது.
- இராமாயண காவியக் கதையைக் கொண்டே இராவணனைக் காவியத் தலைவனாகக் கொண்டு இக்காவியம் படைக்கப்பட்டது.
- இக்காவியத்தை வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணனைத் தமிழ்க் கதாநாயகனாகச் சித்திரிக்கிறது.
- இந்த நூல் சென்னை மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியில் 1948 – ஆம் ஆண்டு ஜூன் 2 – ஆம் தேதி தடைசெய்யப்பட்டு பிறகு 1971-ஆம் ஆண்டு அரசின் தடை நீக்கப்பட்டது.
- தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தில் புலவர் குழந்தை தம்மை இணைத்துக் கொண்டார்.
- சுயமரியாதைக் கொள்கையில் உறுதியுடையவராய்த் திகழ்ந்தார். இறை நம்பிக்கை இல்லாதவர்.
- 1938, 1948 ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டார்.
- விதவை மணம், கலப்பு மணம், சீர்திருத்தமணம் ஆகியவற்றை முன்னின்று நடத்தினார்.
- திருக்குறள் குழந்தை உரை என்ற நூலினை இருபத்தைந்து நாட்களில் எழுதி வெளியிட்டார்.
- புலவர் குழந்தையின் யாப்பிலக்கண நூல்கள் எளிமையாக யாப்பிலக்கணத்தை, கவிதை இயற்றும் நெறிகளை விளக்குகின்றன. அவ்வகையில் யாப்பதிகாரம், தொடையதிகாரம் ஆகியவை சூத்திர வடிவில் இலக்கண நெறிகளை விளக்குவனவாகும்.
- பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் எனும் இலக்கண நூல் போன்றே இன்னூல் என்னும் இலக்கண நூற்பா நூலை எழுதி வெளியிட்டார்.
- “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற இயக்கத்தின் போது தமிழ்நாடு தமிழருக்கே என்ற எழுத்துக்கான அச்சு கட்டைகளை செய்து கொடுத்து ஒரு துணி வணிகம் கொண்டு வேட்டி, துண்டு, சேலை கரைகளில் அச்சிட்டு தமிழ்நாடு முழுவதும் பரப்பினார்.
இராவண காவியம் நூல் குறிப்பு
- உயிர்க்கொலை மறுப்பு இக்காப்பியத்தின் கருப்பொருள் ஆகும்.
- 1944-ல் கம்பராமாயணம் குறித்து அறிஞர் அண்ணாவுக்கும், நாவலர் சோமசுந்தர பாரதியார், இரா.பி. சேதுப்பிள்ளை ஆகியோருக்கும் நடந்த சொற் போரும், அதனைத் தொடர்ந்து அப்பேச்சுகளின் தொகுப் பாக வெளிவந்த “தீ பரவட்டும்” எனும் நூலும் தமிழ் மக்களிடையே பரப்பரப்பை ஏற்படுத்தியது.
- 1946-ல் “செந்தமிழ்க் குழந்தை செப்பினான் அறிவுல கொப்பு மாறே” என்று புரட்சிக் கவிஞர் வழங்கிய சிறப்புப் பாயிரத்தோடு, இராவண காவியம் வெளி வந்தது.
- “தமிழ் புலவர்கள் எல்லாம் தமிழரை இழிவுபடுத்தும் புராணக் கதைகளையே பாடிவந்தார்கள். அதற்கு மாறாக இராவண கவியத்தைப் படைத்து இழிவைப் போக்கிய புலவர் குழந்தை அவர்களைப் பாராட்டுகிறேன்” என்று 1971-ம் ஆண்டு விழுப்புரத்தில் புலவர் குழந்தையை பாராட்டினார் தந்தை பெரியார்.
அறிஞர் அண்ணா |
இராவண காவியம் பழைமைக்குப் பயணச்சீட்டு. புதுமைக்கு நுழைவுச் சீட்டு |
புரட்சிக் கவிஞரின் புதுக் கவிதை போல, புதிய தமிழகத்தின் ஓவியம் இந்நூல் | |
தன்மான இயக்கத்தார், தமிழ்ப் பகைவர்கள், காவியமறியாதோர், கலையுணர்வு இல்லாதோர் என்ற அவமொழியினை அடித்துத் துரத்தும் ஆற்றல் ஆயுதம் | |
தமிழ் மறுமலர்ச்சியின் தலை சிறந்த நறுமலர் | |
நெடுநாள் ஆராய்ச்சியும், நுண்ணிய புலமையும், இனப்பற்றும் ஒருங்கே அமைந்த காவியம் | |
தமிழரின் புது வாழ்விற்கான போர் முரசு. |