ஈரோடு தமிழன்பன்

ஈரோடு தமிழன்பன்

ஈரோடு தமிழன்பன்

ஈரோடு தமிழன்பன் குறிப்பு

  • ஈரோடு தமிழன்பனின் இயற்பெயர் = ஜெகதீசன்
  • பெற்றோர் = நடராஜன், வள்ளியம்மாள்
  • ஊர் = கோவை மாவட்டம் சென்னிமலை
  • இவர் பாரதிதாசன் பரம்பரையினர்
  • மூத்த மகனுக்குப் பாப்லோ நெருதா என்றும் இளைய மகனுக்குப் பாரதிதாசன் என்றும் பெயர் சூட்டினார்.

சிறப்புப் பெயர்கள்

  • மரபில் பூத்து புதுமையில் கனிந்தவர்
  • ஆயிரம் அரங்கம் கண்ட கவியரங்கக் கவிஞர்

ஈரோடு தமிழன்பன் புனைபெயர்

  • விடிவெள்ளி
  • தமிழன்பன்
  • மலையமான்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

ஈரோடு தமிழன்பன் புதினம்

  • நெஞ்சின் நிழல்

ஈரோடு தமிழன்பன் சிறுகதைகள்

  • கவி பாடின காவலர்
  • கரும்புச்சுவை கதைகள்
  • ஒரு மழை நாளில்

ஈரோடு தமிழன்பன் பாடல்கள்

  • குறை ராட்டினம் (குழந்தைப் பாடல்கள்)
  • கொடி காத்த குமரன் (சிறார் வில்லுப்பாட்டு)
  • வள்ளிச்சந்தம் (சிறார் பாடல்கள்)

ஈரோடு தமிழன்பன் கட்டுரைகள்

ஈரோடு தமிழன்பன்

  • பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்
  • கலையா! கைவினையா!
  • பாப்லோ நெருதா பார்வையில் இந்தியா
  • தாயின் மணிக்கொடி
  • சிகரங்கள் மேல் விரியும் சிறகுகள்
  • இலக்கிய பயன்
  • கவிதை சிந்தனைகள்
  • புரட்சிக் கவிஞர் கவிதைகளில் தமிழ், தமிழன், தமிழ்நாடு
  • வீரத்துறவி விவேகானந்தரும் மனோன்மணியம் சுந்தரனாரும் ஒரு சந்திப்பில்

திறனாய்வு நூல்கள்

  • மதிப்பீடுகள்

ஈரோடு தமிழன்பன் கவிதை நூல்கள்

  • சிலிர்ப்புகள்
  • தோணி வருகிறது (முதல் கவிதை)
  • விடியல் விழுதுகள்
  • தீவுகள் கரையேறுகின்றன
  • நிலா வரும் நேரம்
  • கண்ணுக்கு வெளியே சில கனாக்கள்
  • என் வீட்டிற்கு எதிரே ஒர் எருக்கஞ் செடி
  • நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும்
  • ஓலைச்சுவடியும் குறுந்தகடும்
  • கருவறையில் இருந்து ஒரு குரல்
  • உன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன்…… வால்ட் விட்மன் (தமிழ்ப் புதுக்கவிதையிலான பயண நூல்)
  • நாமிருக்கும் நாடு
  • ஊர் சுற்றி வந்த ஓசை
  • கிழக்குச் சாளரம்
  • பனி பெய்யும் பகல்
  • இன்னும் சில வினாக்கள்
  • திசை கடக்கும் சிறகுகள்
  • மாற்று மனிதம்
  • சொல்ல வந்தது
  • புத்தகம் என்பது
  • தத்துபித்துவம்
  • அணைக்கவா என்ற அமேரிக்கா

ஈரோடு தமிழன்பன்

  • கஜல் பிறைகள் (முதல் தமிழ்க் கஜல் கவிதைத் தொகுதி)
  • ஒரு கூடைப் பழமொன்ரியு (பழமொழி, சென்ரியு இணைந்த முதல் தமிழ்க் கவிதைத் தொகுதி)
  • அன்னை மடியே உன்னை மறவேன்
  • பூக்களின் விடைகள் புலரி கைகளில்
  • சிறுசிறு சூரியர்கள்
  • இசை அமைக்கும் இமை அசைப்புகள்
  • ஒரு கவளம் சோறும் ஒரு கவிதையும்
  • நட்பூ
  • இன்னிசை அளபெடைச்சென்னிமலை
  • ஞாபகச் சாளரம்
  • இன்னும் இசை உண்டு இந்த வீணையில்
  • முகமொழி 100
  • ஒளியின் தாயகம் ஒப்பிலா நாயகம்
  • காலத்தால் மறையாத கருப்புச் சூரியன்
  • மூன்று பெயர்களும் என் முகவரிப் புத்தகமும்
  • tamil thahu
  • சூரியப் பிறைகள் (ஹைக்கூ கவிதைகள்)
  • இடுகுறிப் பெயரில்லை இஸ்லாம்
  • ஊமை வெயில்
  • புதுநெறி காட்டிய புரட்சிக் கவிஞர்
  • திரும்பி வந்த தேர்வலம்
  • அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்
  • காலத்திற்கு ஒருநாள் முந்தி

ஈரோடு தமிழன்பன்

  • சென்னிமலை கிளியோபாத்ராக்கள் (முதல் தமிழ் லிமரைக்குக் கவிதைத் தொகுதி))
  • வார்த்தைகள் கேட்ட வரம்
  • ஒருவண்டி சென்ரியு (முதல் தமிழ் சென்ரியுக் கவிதைத் தொகுதி)
  • பரணி பாடலாம்
  • தமிழோவியம்
  • என் அருமை ஈழமே!
  • கதை முடியவில்லை
  • கனவில் சில பக்கங்கள்
  • சொல்ல வந்தது
  • இவர்களோடும் இவற்றோடும்
  • கனாக்காணும் வினாக்கள் (வினாக்களாலான முதல் தமிழ்க் கவிதைத் தொகுதி)
  • மின்னல் உறங்கும் போது
  • கதவை தட்டிய பழைய காதலி
  • விடியல் விழுதுகள்
  • கவின் குறு நூறு
  • வணக்கம் வள்ளுவ (சாகித்ய அகாதமி விருது)
  • தமிழன்பன் கவிதைகள் (தமிழக அரசு பரிசு)
  • பொதுவுடைமைப் பூபாளம்
  • மின்மினிக்காடு
  • சிகரங்கள் மேல் விரியும் சிறகுகள்

ஈரோடு தமிழன்பன் – விருதுகள்

  • 1964 ஈரோடு தமிழ் இலக்கியப் பேரவை அளித்த தங்கப்பதக்கம்
  • 1973 தமிழன்பன் கவிதைகள் எனும் சிறந்த நூலுக்காகத் தமிழக அரசு வழங்கிய முதல் பரிசு
  • 1991 தமிழக அரசு அளித்த பாரதிதாசன் விருது
  • 1996 அமெரிக்காவில் வாசிங்டன்-பால்டிமோர்த் தமிழ்ச் சங்கம் வழங்கிய புதுக்கவிக்கோ விருது
  • 1997 ஒரு மழை நாளில் எனும் சிறந்த சிறுகதைப் படைப்பிற்காக பாரத ஸ்டேட் வங்கி வழங்கிய முதல் பரிசு
  • 1998 முரசொலி அறக்கட்டளை அளித்த கலைஞர் விருது
  • 1999 தமிழக அரசு நல்கிய கலைமாமணி விருது
  • 1999 ஈரோடு தமிழ் இலக்கியப் பேரவை வழங்கிய இராணா இலக்கிய விருது
  • 2000 பனி பெய்யும் பகல் எனும் சிறந்த கவிதை நூலுக்காகத் தமிழக அரசு வழங்கிய முதல் பரிசு
  • 2001 பாரதிதாசனோடு பத்தாண்டுகள் எனும் நூலுக்காகப் பாவேந்தர் பாசறை அளித்த முதல் பரிசு
  • 2001 தமிழக அரசு அளித்த குறள் பீட விருது
  • 2002 கரந்தைத் தமிழ்ச் சங்கம் வழங்கிய தமிழவேள் உமாமகேசுவரனார் விருது
  • 2003 ஒரு வண்டி சென்ரியு எனும் சிறந்த நூலுக்காகத் திருப்பூர்த் தமிழ்ச் சங்கம் வழங்கிய முதல் பரிசு
  • 2003 செய்யாறு தமிழ்ச் சங்கம் வழங்கிய கவிப்பேரருவி விருது
  • 2004 சேலம் தமிழ்ச் சங்கம் வழங்கிய தமிழ் வாகைச் செம்மல் விருது
  • 2004 வணக்கம் வள்ளுவ! என்னும் கவிதை நூலுக்காகச் சாகித்திய அகாதெமி அளித்த விருது
  • 2004 சிற்பி இலக்கிய விருது
  • 2005 திராவிடர் கழகம் நல்கிய பெரியார் விருது
  • 2005 தஞ்சை பாரத் கல்வி நிறுவனக் குழுமம் வழங்கிய கவிஞானி விருது
  • 2008 அமெரிக்க மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் அளித்த வாழ்நாள் சாதனையாளர் விருது
  • 2008 சென்னைக் கம்பன் கழகம் வழங்கிய விருது
  • 2010 தமிழ்நாடு புத்தகப் பதிப்பாளர்-விற்பனையாளர் சங்கம் (BAPASI) வழங்கிய கலைஞர் பொற்கிழி விருது
  • 2011 விடியல் (Dawn) அமைப்பு அளித்த பாரதி விருது
  • 2011 கவிக்கோ விருது
  • 2014 கவிமுகில் அறக்கட்டளை-விழிகள் பதிப்பகம் வழங்கிய கவிப்பேரிமையம் விருது
  • 2016 விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கிய செம்மொழி ஞாயிறு விருது
  • 2017 அமெரிக்க மெட்ரோப்பிளக்ஸ் தமிழ்ச் சங்கம் வழங்கிய மகாகவி விருது
  • 2017 எஸ். ஆர். எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய பரிதிமாற்கலைஞர் விருது
  • 2017 தினத்தந்திக் குழுமம் வழங்கிய சி. பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது
  • 2018 தமிழ்நாடு ஊடகவியலாளர் சங்கம் வழங்கிய ஊடகச் சிற்பி விருது
  • 2019 இந்தியச் சமுதாய மக்களாட்சியக் கட்சி (D.P.I.) வழங்கிய கவிக்கோ விருது
  • 2019 தமிழ்ச் செய்தி வாசிப்பாளர் சங்கம் வழங்கிய கவிச்செம்மல் விருது
  • 2020 உலகத் தமிழ் ஹைக்கூ மன்றம் வழங்கிய பாஷோ விருது
  • 2022 வடஅமெரிக்க தமிழ் சங்க வழங்கும் “உலகத் தமிழ் பீட விருது”
  • 2022 கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகம் வழங்கிய “நாவலர் விருது”

ஈரோடு தமிழன்பன் சிறப்புகள்

  • ஆயிரம் அரங்கம் கண்ட கவியரங்கக் கவிஞர்
  • சென்ரியு கவிதைகளை தமிழில் முதல் முதலாக அறிமுகப்படுத்தியவர் = ஈரோடு தமிழன்பன் ஆவார்.
  • தமிழில் வெளிவந்த முதல் சென்ரியு கவிதை நூல் = ஈரோடு தமிழன்பன் அவர்களின் “ஒரு வண்டி சென்ரியு” (2001) என்னும் கவிதை நூல் ஆகும்.
  • தமிழில் முதன் முதலில் லிமெரைக்கூ கவிதையை எழுதியவர் = ஈரோடு தமிழன்பன்.
  • தமிழின் முதல் லிமரைக்கூ கவிதை நூல் = ஈரோடு தமிழன்பனின் ”சென்னிமலை கிளியோபாத்ராக்கள்” நூலாகும்.
  • தமிழில் அதிக அளவில் கவிதைத் தொகுதிகளை – 60க்கும் மேற்பட்ட தொகுதிகளையும்- 6 பெருந்தொகுதிகளையும் வெளியிட்ட முதல் கவிஞர் இவரே.
  • ‘உன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன்… வால்ட் விட்மன்! ‘(1998) எனும் கவிதைத் தொகுதிமூலம் புதுக்கவிதையில் முதல் பயண இலக்கியம் படைத்த முதல் கவிஞர் அவர்.
  • 2000இல் எழுதி 2004ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற வணக்கம், வள்ளுவ! என்னும் கவிதைத் தொகுதிவழிப் புதுக்கவிதையிலான முதல் திறனாய்வு நூலை எழுதிய முதல் கவிஞர் அவர்.
  • ஒரு வண்டி சென்ரியு (2001) எனும் கவிதைத் தொகுதிவழி ஜப்பானியக் கவிதை வடிவங்களுள் ஒன்றான சென்ரியுவைத் தமிழில் அறிமுகப்படுத்திய முதல் கவிஞர் அவர்.
  • ஜப்பானியக் கவிதை வடிவங்களுள் ஒன்றான ஹைக்கூவைத் தமிழில் பிரபலப்படுத்திய முதல் கவிஞர் அவர்.
  • லிமெரிக், ஹைகூ ஆகிய கவிதை வடிவங்களை இணைத்து டெட் பாக்கர் அறிமுகப்படுத்திய கவிதை வடிவமான லிமெரைக்கூவைச் சென்னிமலைக் கிளியோபாத்ராக்கள் (2002) என்னும் கவிதைத் தொகுதி வாயிலாகத் தமிழில் படைத்த முதல் கவிஞர் அவர்.
  • 2009இல் நிகழ்ந்த ஈழப்போரில் கொத்துக்கொத்தாய்த் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது அந்த இனப் படுகொலையைக் கண்டித்துத் தமிழகத்தில் பலரும் எழுத முன்வராத நிலையில் நெஞ்சுரத்துடன் என் அருமை ஈழமே! (2009) என்னும் கவிதைத் தொகுதியைத் துணிச்சலாய் எழுதி வெளியிட்ட முதல் கவிஞர் அவர்.
  • 2012இல் வெளிவந்த கஜல் பிறைகள் வாயிலாகப் பாடதக்க கஜல் கவிதைத் தொகுதியைப் படைத்த முதல் கவிஞர் அவர்.
  • சென்னைப் பல்கலைக்கழகத்தால் இரண்டு முறை தேசியக் கருத்தரங்கு நடத்தப்படப் பொருண்மைக்களமாக விளங்கிய கவிதைகளைப் படைத்த முதல் கவிஞர் அவர்.
  • ஒரு கூடைப் பழமொன்ரியூ (2014) வழியாகப் பழமொழியையும் சென்ரியூவையும் இணைத்துப் பழமொன்ரியு எனும் கவிதை வடிவத்தை முதன்முதல் உருவாக்கி அறிமுகப் படுத்திய முதல் கவிஞர் அவர்.
  • பாப்லோ நெருதா எழுதிய Book of Questions என்னும் வினாக்களாலான கவிதைத் தொகுதியை முன்மாதிரியாகக் கொண்டு கனாக் காணும் வினாக்கள் (2004), இன்னும் சில வினாக்கள் (2015) எனும் வினாக்களாலான கவிதைத் தொகுதிகள் இரண்டு இயற்றிய முதல் கவிஞர் அவர். பிறப்பால் ஆங்கிலேயராகவும், வாழிடத்தால் சீனராகவும் வாழும் முறையால் தமிழராகவும் வாழ்ந்துவருபவரும் – இங்கிலாந்தில் பிறந்து ஹாங்காங்கில் வாழ்ந்துவருபவருமான பேராசிரியர் கிரிகோரி ஜேம்ஸ் இவ்விரு நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து Poems of Questions என்னும் பெயரில் ஒரே நூலாக வெளியிட்டுள்ளார். இப்படி ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவரால் இக்காலக் கவிதை ஆங்கிலத்தில் முதன்முதலில் ஒரு மொழிபெயர்ப்புக் காண மூலநூல் தந்த முதல் கவிஞர் அவர். இதே நூலுக்குப் பேராசிரியர் கிரிகோரி ஜேம்ஸ் அவர்களும் லொரைன் போக் (Loraine Bock) என்னும் ஸ்பானியப் பெண்மணியும் இணைந்து Poemas de Preguntas என்னும் மகுடம் தாங்கிய ஸ்பானிய மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. இக்காலத் தமிழ்க் கவிதை ஸ்பானிய மொழியில் முதன்முதலில் ஒரு மொழிபெயர்ப்புக் காண மூலநூல் தந்த முதல் கவிஞர் அவர்.
  • 2017 நவம்பர் 8இல் அமெரிக்காவில் டல்லாஸ் நகரிலுள்ள மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கவிஞர் தி. அமிர்தகணேசன் முயற்சியால் ஈரோடு தமிழன்பனின் 1000 கவிதைகளை வாசிக்கும் கவிதைத் திருவிழா நடைபெற்றது. அமெரிக்காவில் நடைபெற்ற முதல் கவிதைத் திருவிழா மட்டுமன்றி இப்படியொரு திருவிழா எடுக்கப்பட்ட முதல் கவிஞரும் ஈரோடு தமிழன்பனே ஆவார்.
  • 2019 செப்டம்பர் 28இல் வட அமெரிக்க வானொலியில் தமிழன்பன் பிறந்தநாள் வானலையில் அமெரிக்கத் தமிழர்கள் பலர் தமிழன்பன் கவிதை வாசிப்பு நிகழ்த்திக் கொண்டாடினர். இப்படியொரு பிறந்தநாள் திருவிழா எடுக்கப்பட்ட முதல் கவிஞரும் ஈரோடு தமிழன்பனே ஆவார்.

 

 

 

Leave a Reply