கம்பராமாயணம்
கம்பராமாயணம் – ஆசிரியர் குறிப்பு
- பெயர் = கம்பர்
- ஊர் = சோழநாட்டு திருவழுந்தூர்
- தந்தை = காளி கோவில் பூசாரியான ஆதித்தன்
- மகன் = அம்பிகாபதி
- மகள் = காவிரி
ஆசிரியரின் சிறப்பு பெயர்
- கவிச்சக்ரவர்த்தி (நாதமுனிகள்)
- கவிப்பேரரசர்
- கவிக்கோமான்
- கம்பநாடுடைய வள்ளல்
- சந்த வேந்தர்
- தமிழரின் கவிதாமண்டலத்தை ஆண்டவன்
இவரின் படைப்புகள்
- ஏர் எழுபது
- சிலை எழுபது
- திருக்கை வழக்கம்
- சரஸ்வதி அந்தாதி
- சடகோபர் அந்தாதி(நம்மாழ்வார் பற்றியது)
கம்பராமாயணம் – சிறப்பு பெயர்கள்
- கம்பசித்திரம்
- கம்பநாடகம்
- தோமறுமாக்கதை
- மானுடம் பாடும் காவியம்
- இயற்கை பரிணாமம்
- தமிழர் கவித்துவத்தின் பேரெல்லை
- முற்காலக் காப்பியங்களை எல்லாம் தமிழுலகம் மறக்கச் செய்து தன்னிடத்திலே தமிழர் உள்ளதை தேக்கி வாய்த்த புகழ் உடையது = கம்பராமாயணம்
கம்பராமாயணம் – நூல் அமைப்பு
- காண்டம் = 6
- படலம் = 113
- மொத்த பாடல்கள் = 10569
- முதல் படலம் = ஆற்றுப்படலம்
- இறுதிப்படலம் = விடை கொடுத்த படலம்
காண்டங்கள்
- பால காண்டம்
- அயோத்தியாகாண்டம்
- ஆரண்யகாண்டம்
- கிட்கிந்தா காண்டம்
- சுந்தர காண்டம்
- யுத்தகாண்டம்
- ஏழாவது காண்டம் ஒட்டக்கூத்தர் பாடிய “உத்தர காண்டம்”
சிறப்பு
- மு.இராகவையங்கார் = “வடமொழி தென்மொழிக் காப்பிய நயங்களாகிய பொன் மையில் தம் சித்திரக்கோலைத் தோய்த்துத் தம் கப்பிய ஓவியத்தைக் கம்பநாடார் வரைந்தார்.
- வ.வே.சு.ஐயர் = “கம்பயராமாயணம் தனக்கு முதல் நூலான வான்மீகி இராமாயணத்தையே விஞ்சும் சுவையுடைய காப்பியமாகும்”
- வ.வே.சு ஐயர் = பெருங்காப்பிய இலக்கணத்தில் உலகக் காப்பியங்களை எல்லாம் கம்பராமாயணம் வென்றுவிட்டது
- வையாபுரி பிள்ளை = கம்பன் காவியம் தமிழரின் கவித்துவத்தின் பேரெல்லை
- எஸ்.மகாராஜன் = “உலகத்திலேயே வேறொரு நாட்டில், இவ்வளவு பழமையான கவிஞன் இருபதாம் நூற்றாண்டு மக்களுடைய மனதை இப்படி ஆட்கொண்டதில்லை”
- பாரதியார் = “கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு” என்கிறார்.
- பாரதியார் = “கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை” என்கிறார்.
- கவிமணி = “வீசும் தென்றல் காற்றுண்டு – கையில் கம்பன் கவியுண்டு” என்கிறார்.
- கவிமணி = கம்பன் கவியே கவி
- “கல்வியிற் பெரியவர் கம்பர்”
- “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்”
- “கம்ப நாடன் கவிதையிற்போல் கற்றோருக்கு இதயம் களியாதே”
- “விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்”
- தமிழுக்கு கதி = கம்பர், திருவள்ளுவர்
- திருமணம் செல்வக்கேசவராய முதலியார் = தமிழுக்கு கதியாவர் இருவர்; ககரத்தை கம்பர் என்றும், திகரத்தை திருவள்ளுவர் என்றும் கூறுகிறார்
- 96 வகை ஓசை வகைகளை கம்பர் கையாண்டுள்ளார்.
- சந்த வேந்தர் எனப்படும் கம்பர், தனது கம்பராமாயணத்தில் 460க்கும் மேற்பட்ட சந்தங்களை பயன்படுத்தி உள்ளார்
- கம்பராமாயணத்தில் ஒவ்வொரு 22 பாடல்களுக்கு ஒருமுறை, சந்தத்தை வேறுபடுத்தி பாடியுள்ளார் கம்பர்
- காக்கும் பெருமாள் = கம்பர் ஒரே பாடலுக்காகச் சந்ததி மாற்றவும் செய்துள்ளார்
- “கம்பராமாயணம் பெண் நடையுடையது” என்றவர் = கா.சு.பிள்ளை
கம்பரை பற்றி பாரதியார்
- கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்
- புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு
- யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் ……….. பூமிதனிலே யாங்கணும் பிறந்தில்லை
பொதுவான குறிப்புகள்
- கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் = இராமாவதாரம்
- கம்பர் இறந்த இடம் = நாட்டரசன் கோட்டை
- கம்பரின் சமாதி உள்ள இடம் = நாட்டரசன் கோட்டை
- வான்மீகி எழுதாத “இரணியன் வதைப் படலம்” கம்பராமாயணத்தின் மிக சிறந்த பகுதியாக கருதப்படுகிறது.
- கமபராமாயணம் ஒரு வழி நூல்
- கம்பர் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை 1000 பாடல்களுக்கு ஒருமுறை பாடியுள்ளார்.
- கம்பர் தன் காப்பியத்தை அரங்கேற்றிய இடம் = திருவரங்கம்
- கம்பராமாயணத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட விருத்தம் = கலி விருத்தம்
- கம்பருக்கு தமிழக அரசு திருவழுந்தூரில் மணி மண்டபம் அமைத்து சிறப்பித்துள்ளது.
- இவர் மூன்றாம் குலோத்துங்கனின் அவை களப் புலவர் ஆவார்.
- இவரின் மகன் அம்பிகாபதி சோழன் மகளை காதலித்ததில் ஏற்பட்ட பிரச்சனையில் அம்பிகாபதி, அமராவதி இருவரின் உயிர் நீங்க, இவர் சோழ நாட்டை விட்டு வெளியேறினார்.
- 15 நாட்களில் கம்பராமாயாணம் முழுவதும் எழுதி முடித்தார் (10569 பாடல்கள்)
- கம்பனுக்கு முன்பு இருந்த தமிழ் இராமாயணங்கள் = இராமாயண வெண்பா, சைன ராமாயணம்
- கம்பராமாயணத்தோடு ஒப்பிடப்படும் உலகக் காப்பியம் = இலியட் (ஹோமர்)
- உலக அரங்கில் தமிழுக்கு உயரிய மதிப்பைப் பெற்றுத் தந்த இலக்கியங்கள் = திருக்குறளும் கம்பராமாயணமும் ஆகும்
மேற்கோள்
- தாதகு சோலை தோறும் செண்பகக் காடு தோறும்
- எல்லோரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தாலே
- இல்லாரும் இல்லை உடையாரும்
- இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்
- அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினால்
- இன்று போய் நாளை வா
- வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்
- வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
- உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்
- கை வண்ணம் அங்குக் கண்டேன்
- கால் வண்ணம் இங்குக் கண்டேன்
- அன்றலர்ந்த செந்தாமரையை வென்றதம்மா
- ஐம்பெரும் காப்பியம்
- ஐஞ்சிறுங் காப்பியம்
- நாலாயர திவ்வியப் பிரபந்தம்
- திருவிளையாடற் புராணம்
- தேம்பாவணி
- சீராபுரணம்
- சிற்றிலக்கியங்கள்
- மனோன்மணியம்
திருவழுந்தூர் அல்ல தேரிழந்தூர்