கலம்பகம்
கலம்பகம்
- பல்வகை வண்ணமும், மனமும் கொண்ட மலர்களால் கட்டப்பட்டக் கதம்பம் போன்று பல்வகை உறுப்புகளைக் கொண்டு அகம், புறமாகிய பொருட்கூறுகள் கலந்து வர பல்வகைச் சுவைகள் பொருந்தி வருவதால் ‘கலம் பகம்” எனப் பெயர் பெற்றது.
- கலம் + பகம் = கலம் பகம்
- கலம் = 12
- பகம் = 6
- கலம் பகம் 18 உறுப்புகளைக் கொண்டது.
- கலம்பகத்தின் இலக்கணம் கூறும் நூல் = பன்னிரு பாட்டியல்
- முதல் கலம்பக நூல் = நந்திக் கலம் பகம் (ஆசிரியர் பெயர் தெரியவில்லை)
- “கன்பாய கலபகத்திற்கு இரட்டையர்கள்” எனக் கூறப்படும்
- அந்தாதி தொடை அமையப் பாடப்படும் சிற்றிலக்கியம் கலம் பகம்
- அகப்பொருளும் புறப்பொருளும் கலந்து பாடப்படும்
- கதம்பம் என்பது கலம்-பகம் என்று திரிந்ததாக கூறுவார் உ.வே.சா
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
கலம்பக நூல்கள்
நந்திக் கலம்பகம் (முதல் கலம் பக நூல்) |
ஆசிரியர் பெயர் தெரியவில்லை |
ஆளுடைய பிள்ளையார் திருக்கலம் பகம் |
நம்பியாண்டார் நம்பி |
திருவரங்கக் கலம் பகம் |
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் |
திருவாமாத்தூர்க் கலம் பகம் |
இரட்டையர்கள் |
தில்லைக் கலம் பகம் |
இரட்டையர்கள் |
மதுரைக் கலம் பகம், காசிக் கல ம்பகம் |
குமரகுருபரர் |
திருக்காவலூர்க் கல ம்பகம் |
வீரமாமுனிவர் |
புள்ளிருக்குவேளூர் கலம் பகம் |
படிக்காசுப் புலவர் |
திருசெந்திற் கலம் பகம் |
சாமிநாததேசிகர் (ஈசான தேசிகர்) |
சேயூர்க் கலம்ப கம் |
அந்தக்கவி வீரராகவர் |
நந்திக் கலம்பகம்
- இதன் தலைவன் = மூன்றாம் நந்திவர்மன்
- இதுவே கலம்பக நூல்களில் முதல் நூல்
- இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை
- 144 பாடல்கள் உள்ளன
- தமிழ் மீது கொண்ட காதலால் மன்னன் உயிர் விட்டான்.
- “நந்தி கலம்பகத்தால் இறந்ததை நாடறியும்” என்பது சோமேசர் முதுமொழி வெண்பா பாடல்
திருவரங்கக் கலம்பகம்
- இதன் ஆசிரியர் பிள்ளை பெருமாள் ஐயங்கார்
- இவர் எட்டு நூல்களை எழுதியுள்ளார்.
- இவ்வெட்டு நூல்களையும் “அஷ்டப் பிரபந்தம்” எனக் கூறப்படும்.
- “அஷ்டப் பிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்” என்னும் வழக்கு இதன் சிறப்பை உணர்த்தும்.
- இவர், “அழகிய மணவாளதாசர், திவ்வியக்கவி” எனவும் அழைக்கப்படுவார்.
- இவர் 1623 முதல் 1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் அவையில் ஓர் அலுவலராய் அமர்ந்து வாழ்க்கை நடத்தி வந்தார்.
ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
- இதன் ஆசிரியர் = நம்பியாண்டார் நம்பி
- இவற் 11 திருமுறைகளைத் தொகுத்தவர்.
- இவரைத் “தமிழ் வியாசர்” எனப் போற்றப்படுவார்.
- இவரின் ஊர் = திருநாரையூர்
- இவர் இயற்றியது ஒன்பது நூல்கள்.
- இவரின் திருத்தொண்டர் திருவந்தாதி பெரியபுராணத்திற்கு வழி நூலக அமைத்து அடியார் பெருமை பேசுகிறது.