உலா இலக்கியம்

உலா இலக்கியம்

உலா இலக்கியம்
உலா இலக்கியம்

உலா இலக்கியம்

  • “ஊரொடு தோற்றமும் உரிதென மொழிப” என்ற தொல்காப்பிய நூற்பா அடிப்படையில் தோன்றிய இலக்கியம் உலா இலக்கியம்
  • உலாவின் வேறு பெயர்கள் = பவனி, பெண்பாற் கைக்கிளை
  • உலா வர பயன்படுவன = தேர், குதிரை, யானை
  • உலாவில் முன்னிலைப் பகுதி, பின்னிலைப் பகுதி என இரு பகுதிகள் உண்டு
  • தசாங்கம் உலா இலக்கியத்தில் இடம் பெரும்
  • முதல் உலா நூல் = திருக்கைலாய ஞானஉலா(ஆதி உலா அல்லது தெய்வீக உலா)
  • உலாவின் பாவகை = கலிவெண்பா
  • உலா பாடுவதில் வல்லவர் = ஒட்டக்கூத்தர். “கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தர்”

உலாவின் முன்னிலைப் பகுதி

  • முன்னிலைப் பகுதியில் தலைவனின் சிறப்புக் கூறப்படும்
  • ஏழு வகைப் பருவன் ஆண்கள் கூறப்படுவர்
    1. பாலன் = 1-7 வயது
    2. மீளி = 8-10 வயது
    3. மறவோன் = 11-14 வயது
    4. திறலோன் = 15 வயது
    5. காளை = 16 வயது
    6. விடலை = 17-30 வயது
    7. முதுமகன் = 30 வயதிற்கு மேல்

உலாவின் பின்னிலைப் பகுதி

  • பின்னிலைப் பகுதியில் ஏழு பருவப் பெண்களின் காமம் கூறப்படும்.
  • ஏழு வகைப் பருவ மகளிர்
    1. பேதை = 5-7 வயது
    2. பெதும்பை = 8-11 வயது
    3. மங்கை = 12-13 வயது
    4. மடந்தை = 14-19 வயது
    5. அரிவை = 20-25 வயது
    6. தெரிவை = 26-32 வயது
    7. பேரிளம் பெண் = 33-40 வயது

உலா நூல்கள்

திருக்கைலாய ஞான உலா

சேரமான் பெருமாள் நாயனார்
மூவருலா

ஒட்டக்கூத்தர்

ஆளுடைய பிள்ளை திரு உலா மாலை

நம்பியாண்டார் நம்பி
ஏகாம்பரநாதர் உலா

இரட்டையர்கள்

திருவாரூர் உலா

அந்தக்கவி வீரராகவர்
திருக்கழுகுன்ற உலா

அந்தக்கவி வீரராகவர்

திருகுற்றாலனாதர் உலா

திரிகூட ராசப்ப கவிராயர்
தில்லை உலா

ஒட்டக்கூத்தர்

சிவந்த்தெழுந்த பல்லவராயன் உலா

படிக்காசுப் புலவர்

மூவருலா

  • இந்நூலின் ஆசிரியர் = ஓட்டக்கூத்தர்
  • “கோவை உலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தர் “ எனச் சிறப்பிக்கப்படுபவர்.
  • மூவருலா என்பது மூன்று சோழ மன்னர்களை பற்றியது.
  • இதில் விக்ரமசோழ உலா, குலோத்துங்க சோழ உலா, இராசராசசோழன் உலா ஆகிய மூன்று உலாக்கள் உள்ளன.

உலா இலக்கியம்

விக்ரமசோழன் உலா

  • முதற் குலோத்துங்கசோழனின் நான்காவது மகன் விக்ரமசோழன்.
  • அவனின் தயார் மதுராந்தகி.
  • இவர் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக்கொண்டு ஆட்சி செய்தார்.

திருக்கைலாய ஞான உலா

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *