கல்கி
கல்கி ஆசிரியர் குறிப்பு
- கல்கியின் இயற்பெயர் = இரா.கிருஷ்ணமூர்த்தி
- காலம் = 9 செப்டம்பர் 1899 – 5 திசம்பர் 1954
- ஊர் = தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறை அருகே புத்தமங்களம்
- பெற்றோர் = ராமசாமி அய்யர், தையல்நாயகி
கல்கி புனைப்பெயர்கள்
- கல்கி
- தேனீ
- தமிழ்த்தேனீ
- அகஸ்தியன்
- லாங்கூலன்
- ரா.கி
- குகன்
- பிராமண இளைஞன்
- தமிழ்மகன்
- பெற்றோர்
- எமன்
- விவசாயி
- கர்நாடகம்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
கல்கி சிறப்பு பெயர்கள்
- “தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட்” என அழைக்கப்படுபவர் = கல்கி
- “நாவல் மன்னர்” எனப்படுபவர் = கல்கி
இதழ்
- கல்கி
கல்கி சிறுகதைகள்
- சுபத்திரையின் சகோதரன்
- ஒற்றை ரோஜா
- தீப்பிடித்த குடிசைகள்
- புது ஓவர்சியர்
- வஸ்தாது வேணு
- அமர வாழ்வு
- சுண்டுவின் சந்நியாசம்
- திருடன் மகன் திருடன்
- இமயமலை எங்கள் மலை
- பொங்குமாங்கடல்
- மாஸ்டர் மெதுவடை
- புஷ்பப் பல்லக்கு
- பிரபல நட்சத்திரம்
- பித்தளை ஒட்டியாணம்
- அருணாசலத்தின் அலுவல்
- பரிசல் துறை
- ஸுசீலா எம். ஏ.
- கமலாவின் கல்யாணம்
- தற்கொலை
- எஸ். எஸ். மேனகா
- சாரதையின் தந்திரம்
- கவர்னர் விஜயம்
- நம்பர்
- ஒன்பது குழி நிலம்
- புன்னைவனத்துப் புலி
- திருவழுந்தூர் சிவக்கொழுந்து
- ஜமீன்தார் மகன்
- மயிலைக் காளை
- ரங்கதுர்க்கம் ராஜா
- இடிந்த கோட்டை
- மயில்விழி மான்
- நாடகக்காரி
- “தப்பிலி கப்”
- கணையாழியின் கனவு
- கேதாரியின் தாயார்
- காந்திமதியின் காதலன்
- சிரஞ்சீவிக் கதை
- ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம்
- பாழடைந்த பங்களா
- சந்திரமதி
- போலீஸ் விருந்து
- கைதியின் பிரார்த்தனை
- காரிருளில் ஒரு மின்னல்
- தந்தையும் மகனும்
- பவானி, பி. ஏ, பி. எல்
- கடிதமும் கண்ணீரும்
- வைர மோதிரம்
- வீணை பவானி
- தூக்குத் தண்டனை
- என் தெய்வம்
- எஜமான விசுவாசம்
- இது என்ன சொர்க்கம்
- கைலாசமய்யர் காபரா
- லஞ்சம் வாங்காதவன்
- ஸினிமாக் கதை
- எங்கள் ஊர் சங்கீதப் போட்டி
- ரங்கூன் மாப்பிள்ளை
- தேவகியின் கணவன்
- பால ஜோசியர்
- மாடத்தேவன் சுனை
- காதறாக் கள்ளன்
- மாலதியின் தந்தை
- வீடு தேடும் படலம்
- நீண்ட முகவுரை
- பாங்கர் விநாயகராவ்
- தெய்வயானை
- கோவிந்தனும் வீரப்பனும்
- சின்னத்தம்பியும் திருடர்களும்
- விதூஷகன் சின்னுமுதலி
- அரசூர் பஞ்சாயத்து
- கவர்னர் வண்டி
- தண்டனை யாருக்கு?
- சுயநலம்
- புலி ராஜா
- விஷ மந்திரம்
கல்கி நாவல்கள்
- கள்வனின் காதலி (1937)
- தியாகபூமி (1938-1939)
- மகுடபதி (1942)
- அபலையின் கண்ணீர் (1947)
- சோலைமலை இளவரசி (1947)
- அலை ஓசை (1948) (சாகித்திய அகாதமி விருது பெற்ற நாவல்)
- தேவகியின் கணவன் (1950)
- மோகினித்தீவு (1950)
- பொய்மான் கரடு (1951)
- புன்னைவனத்துப் புலி (1952)
- அமரதாரா (1954)
- விமலா (கல்கியின் முதல் நாவல்)
கல்கி வரலாற்று புதினங்கள்
- சிவகாமியின் சபதம்
- பார்த்திபன் கனவு (முதல் நாவல்)
- பொன்னியின் செல்வன்
கட்டுரை நூல்கள்
- ஏட்டிக்குப் போட்டி (முதல் நூல் – நகைச்சுவை கட்டுரைகள்)
- சந்கீதயோகம் (தமிழிசை குறித்த கட்டுரைகள்)
நாடகங்கள்
- சந்திரகாசன்
கல்கி குறிப்புகள்
- 1922-இல் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார்.
- முதல் கட்டுரை “ஏட்டிக்குப் போட்டி” 1927-இல் வெளியானது.
- கல்கியின் முதல் நூல் = சாரதையின் தந்திரம் (சிறுகதை தொகுதி)
- தமிழிசைக்காகக் கல்கி சதாசிவம் மற்றும் எம். எஸ். சுப்புலட்சுமியுடன் இணைந்து பாடுபட்டார் கல்கி.
- கல்கி எழுதி முடிக்காமல் விட்ட அமரதாரா நாவலை அவர் மறைவுக்குப் பின் எழுதியவர் அவரின் மகள் = ஆனந்தி.
- கல்கியின் அரசிய குரு = இராஜாஜி
- “இராஜாஜியின் போர்வாள்” என அழைக்கப்பட்டவர் = கல்கி
- திரு.வி.காவின் நவசக்தி இதழில் தேனீ என்ற பெயரில் உலக அரசியல் செய்திகளை திரட்டி எழுதினார்.
- தமிழின் முதல் சரித்திர நாவல் = கல்கியின் “பார்த்திபன் கனவு”
- கல்கி இதழில் தன் முதல் வரலாற்றுக் கற்பனாவாத நாவலான பார்த்திபன் கனவை எழுதினார்
- சிறையில் இருந்தபோது கல்கி, “விமலா” என்ற தமது முதல் நாவலை எழுதினார்.
- கல்கி எழுதிய முதல் நாடகம் = சந்திரகாசன்
- “கல்கி” என்ற புனைப்பெயரில் கிருஷ்ணமூர்த்தி எழுதிய முதல் கட்டுரை = ஏட்டிக்குப் போட்டி
- கல்கி வெளியிட்ட முதல் புனைகதைநூல் = எட்டு சிறுகதைகள் கொண்ட “சாரதையின் தந்திரம்” என்னும் தொகுப்பு.
- கல்கி என்ற பெயரில் அவர் எழுதிய முதல் தொடர்கதை கள்வனின் காதலி
- கர்நாடகம் என்னும் புனைபெயரில் அவர் எழுதிய இசை விமர்சனக் கட்டுரைகள் புகழ்பெற்றவை.
- கல்கியை கடுமையாக விமர்சனம் செய்தவர் = சிறுகதை மன்ன புதுமைப்பித்தன் ஆவார்.
- கல்கியின் தீவிர விமர்சகரான எழுத்தாளர் புதுமைப்பித்தன் அகாலமாய் மரணமடைந்தபோது, நிதி திரட்டி அவர் குடும்பத்தாருக்கு உதவியிருக்கிறார் கல்கி.
- வரலாற்றுப்புனைவில் கல்கியின் நாவல்களுக்கு முன்னோடி தி.த.சரவணமுத்துப் பிள்ளை எழுதிய மோகனாங்கி என்னும் நாவல்.
- சர் வால்டர் ஸ்காட், அலெக்ஸாண்டர் டூமா போன்ற எழுத்தாளர்களைத் தனது முன்னோடிகளாக கல்கி குறிப்பிட்டிருக்கிறார்.
- கல்கியின் சிவகாமியின் சபதம் ராமாயணத்தின் சாயலையும் பொன்னியின் செல்வன் மகாபாரதத்தின் சாயலையும் கொண்டது.
- கல்கியின் ஆஸ்தான ஓவியர் = மணியம்
கல்கி சிறப்புகள்
- 1999 இல் இந்திய அரசு சார்பில் கல்கியை போற்றும் வகையில் அவரின் உருவம் பொறித்த தபால் தலை வெளியிட்டது.
- 1999-ல் கல்கியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி தமிழக அரசு கல்கியின் படைப்புகள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்கியது.
- சாகித்திய காதமி விருது பெற்ற தமிழின் முதல் நாவல் = கல்கியின் “அலை ஓசை”.
- திரு.வி.க.வின் மீது கொண்ட ஈடுபாட்டால் தம் பெயரைக் கல்கி என வைத்துக் கொண்டார் என்பர்.
- கல்கி அவதாரம் போல சுதந்திரப்போர் என்னும் பிரளயத்தில் தான் மிதப்பதாக எண்ணி கல்கி என பெயர் வைத்துக்கொண்டதாக கல்கி எழுதியிருக்கிறார்.
- ஆனந்த விகடனை வெற்றிகரமான பொதுவாசிப்புக்குரிய இதழாக ஆக்கியவர் கல்கி.
- தமிழிசை இயக்கத்தை நிலைநாட்டியவை கல்கியின் எழுத்துக்கள்.
- கல்கி எழுதிய கட்டுரைகளே எம்.கே. தியாகராஜ பாகவதர் 1948ல் இறுதியாக அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் இருந்து விடுதலையாக உதவின என்று சொல்லப்படுகிறது.
- கல்கி எழுதிய ’காற்றினிலே வரும் கீதம்’ என்னும் திரைப்படப் பாடல் தமிழிசையின் முதன்மையான பாடலாக கருதப்படுகிறது.
- கல்கி தமிழிசை இயக்கத்தை ஆதரித்து எழுதிய கட்டுரைகள் சங்கீதயோகம் என்ற பெயரில் நூலாக தொகுக்கப்பட்டுள்ளன.
- ஜெயமோகன் = ’இந்தியக் காவிய மரபின் சாயலை மேற்கத்திய சாகசக் கதைகளின் சித்தரிப்புடன் இணைத்துத் தன் புனைவுத் தளத்தை உருவாக்கினார்’
- சுதந்திரப் போராட்டத்தைப் பின்னணியாக கொாண்டு “கல்கி” தீட்டிய “அலை ஓசை” அவருடைய சமூக நாவல்களில் புகழ் பெற்றது. தமது படைப்புகளில் இதுவே தலைசிறந்தது என்பது கல்கியின் கருத்து.
- கல்கியின் வாழ்க்கை வரலாற்றை சுந்தா (மீனாட்சிசுந்தரம்) பொன்னியின் புதல்வர் என்ற பெயரில் எழுதியிருக்கிறார்.
- அறிஞர் அண்ணா = “சரித்திரத்தின் பெருமையை அடுப்பறை பெண்களும் எட்டிப்பார்க்கும் நிலையை உருவாக்கியவர் கல்கி” என்றார்.
- உங்களுடைய எழுத்தில் ஒரு காந்த சக்தி இருக்கிறது’ என்று கல்கியைப் பாராட்டினார் ராஜாஜி…
விருதுகள்
- “அலை ஓசை” நாவலுக்காக சாகித்திய காதமி விருது (1956)
- சங்கீத கலாசிகாமணி விருது.