காளமேகப்புலவர்

காளமேகப்புலவர்

காளமேகப்புலவர்

காளமேகப்புலவர் ஆசிரியர் குறிப்பு

  • இயற் பெயர் = வரதன்
  • பிறந்த ஊர் = கும்பகோணத்திற்கு அருகில் உள்ள “நந்திக்கிராமம்” எனவும், விழுப்புரம் மாவடத்தில் உள்ள “எண்ணாயிரம்” எனவும் கூறுவர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

காளமேகப்புலவர் பெயர்க் காரணம்

  • “கார்மேகம் போல்” கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால், இவர் “காளமேக புலவர்” என அழைக்கப் பெற்றார்.
  • கரியமேகம் எவ்வாறு விடாது பெய்யுமோ, அதுபோல் “இம்” என்னும் முன்னே எழுநூறு கவிப்பாடும் ஆற்றல் மிக்கவர்.

காளமேகப்புலவர்

காளமேகப்புலவர் சிறப்பு பெயர்கள்

  • வசை பாட காளமேகம்
  • வசைகவி
  • ஆசுகவி

ஆசுகவி என்றால் என்ன

  • ஆசுகவி எனப்படுவோர் எடுத்த மாத்திரத்திலே கவி பாடக்கூடிய திறமை படைத்த புலவர்களைக் குறிக்கும்.

காளமேகப்புலவர்

காளமேகப்புலவர் நூல்கள்

  • திருவானைக்கா உலா
  • திருவானைக்கா சரஸ்வதி மாலை
  • சமுத்திரவிலாசம்
  • சித்திரமடல்
  • பரப்பிரம்ம விளக்கம்
  • வினோத ரசமஞ்சரி
  • தமிழ் நாவலர் சரிதை
  • புலவர் புராணம்
  • தனிச்செய்யுள் சிந்தாமணி
  • பெருந்தொகை
  • கடல் விலாசம்

சிறப்பு

  • சிலேடை, வசைப் பாடுவதில் வல்லவர்.
  • ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் ஆகிய நான்கு வகை கவிதைகளையும் பாடும் திறன் கொண்டவர் இவர்.
  • திருமலைராயன் அவைக்கள தலைமைப் புலவர் அதிமதுரகவியோடு வாதிட்டு “எமகண்டம்” பாடி அவரை வென்றவர்.
  • மூச்சு விடும் முன்னே முந்நூறும், நானூறும் பாடும் தன்மையுடையவர் காளமேக புலவர் என்பதை அதிமதுரகவிராயரே தன் பாடலில் குறிப்பிடுகிறார்.
  • வர்க்க எழுத்துக்களை மட்டுமே கொண்டு பல பாடல் புனைந்தவர்.
  • குதிரையையும், காவிரியையும் ஒன்றாக ஒப்பனை செய்து பாடியவர்

காளமேகப்புலவர்

குறிப்புகள்

  • இவர் வைணவராக இருந்து சைவராக மாறினார்.
  • திருவரங்கம் பெரிய கோயிலில் மடைப்பள்ளியில் சமையல் தொழில் செய்தவர்
  • இவர் மறைந்த இடம் = திருவானைக்கா
  • திருவானைக்கா கோயில் தாசியான மோகனாங்கியால் சைவரானார்
  • காளமேக புலவர் பலசமயங்களில் இயற்றிப் பாடிய தனிப்பாடல்கள் மொத்தம் 158 பாடல்கள் ஆகும்.

மேற்கோள்

  • ஓடும் சுழிசுத்தம் உண்டாகும் துன்னலரைச்
  • சாடும் பரிவாய்த் தலைசாய்க்கும் – நாடறியத்
  • தேடுபுகழான் திருமலைராயன் வரையில் ஆடுபரிகாவிரியாமே

 

Leave a Reply