கு ப ரா

கு ப ரா

கு ப ரா

கு ப ரா ஆசிரியர் குறிப்பு

  • முழுப்பெயர் = கு.ப.இராஜகோபாலன்
  • காலம் = ஜனவரி 1902 – ஏப்ரல் 27, 1944
  • ஊர் = கும்பகோணம்
  • பெற்றோர் = பட்டாபிராமையர்- ஜானகி அம்மாள்

கு ப ரா புனைப்பெயர்

  • பாரத்வாஜன்
  • கரிச்சான்
  • சதயம்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

கு ப ரா சிறப்புப்பெயர்

  • “சிறுகதை ஆசான்” என்று அழைக்கப்படுபவர் = கு.ப.இராஜகோபாலன்
  • நவீனத்துவ சிறுகதை வடிவின் முன்னோடி
  • “கும்பகோணம் இரட்டையர்கள்” எனப்படுபவர்கள் = ந.பிச்சமூர்த்தியும், கு,பா.இராசகோபாலனும்

கு ப ரா சிறுகதைகள்

  • நூருன்னிஸா (முதல் சிறுகதை)
  • புனர் ஜென்மம்
  • காணாமலே காதல்
  • பெண் மனம்
  • கனகாம்பரம்
  • காஞ்சன மாலை
  • சிறிது வெளிச்சம்
  • விடியுமா?
  • திரை
  • வீரம்மாளின் காளை
  • தாய்
  • இறுதி வெளிச்சம்
  • அடி மறந்தால் ஆழம்
  • நடுத்தெரு
  • நாகரிகம்

கு ப ரா

கு ப ரா சிறுகதை தொகுப்பு

  • ஆத்மசிந்தனை (1986)
  • ஆற்றாமை (1990)
  • கனகாம்பரம் முதலிய கதைகள் (1944)
  • காணாமலே காதல் (1943)
  • புனர்ஜன்மம் சிறுகதைகள்(1943)

கு.ப.ரா கட்டுரைகள்

  • கண்ணன் என் கவி (1937)
  • எதிர்கால உலகம் (1943)
  • ஸ்ரீஅரவிந்த யோகி (1940)
  • டால்ஸ்டாய் வாழ்க்கையும் உபதேசமும் (1985)
  • பக்தியின் சரிதை (1992)

கு.ப.ரா மொழிபெயர்ப்பு நூல்கள்

  • அனுராதா (புதினம்)
  • ஆறு நவயுக நாவல்கள் (புதினம்)
  • இரட்டை மனிதன் (புதினம்)
  • டால்ஸ்டாய் சிறுகதைகள் – I,II,III பாகங்கள்
  • துர்க்கேஸநந்தினி (புதினம்)
  • தேவி ஸௌதுராணி (புதினம்)
  • ஹரிலட்சுமி (புதினம்)
  • ஹிரண்மயி (புதினம்)

கு.ப.ரா நாடகங்கள்

  • அகலியை (13 நாடகங்களின் தொகுப்பு)

கு.ப.ரா நாவல்

  • தேவராட்டம்

கு.ப.ரா கவிதை நூல்கள்

  • கருவளையும் கையும் (கவிதைத் தொகுதி)
  • மாங்கனிச் சுவைப்பு
  • புத்தனுக்கு
  • நண்பனுக்கு
  • கேள்வி
  • கவிதைக்கு (அ) தலைவியின் தேர்தல்
  • கடற்கரைப் பெண்
  • ராக்கி நினைப்பு
  • வாழ்க்கை வழி
  • வாழ்க்கை
  • விரகம் அல்லது பிரிவாற்றாமை
  • வேறோர் உருவம்
  • உயிர் தரிசனம்
  • விடுதலை
  • பொங்கல்
  • எதற்காக?
  • உரம்
  • என்னதான் பின்?
  • பொன் ஏர் (பிரசுரமான கவிதை)

கு ப ரா

கு.ப.ரா வாழ்க்கை வரலாற்று நூல்கள்

  • ஸ்ரீஅரவிந்த யோகி
  • டால்ஸ்டாய் வாழ்க்கையும் உபதேசமும்

கு.ப.ரா இலக்கியத் திறனாய்வு நூல்

  • கண்ணன் என் கவி

கு ப ரா குறிப்புகள்

  • கும்பகோணத்தில் “மறுமலர்ச்சி நிலையம்” என்ற பெயரில் புத்தக நிலையத்தை நடத்தினார்.
  • கும்பகோணத்தில் கு.ப. ராஜகோபாலனுக்கு பக்கத்து வீட்டுக்காரராக கவிஞர் ந. பிச்சமூர்த்தி இருந்தார். பிறகு கல்லூரியிலும், வாழ்விலும், ரசனையிலும், இலக்கியத்திலும் தொடர்ந்து 20 ஆண்டு காலம் `கும்பகோணம் இரட்டையர்கள்’ என்று மற்றவர்கள் கூறும்படி இணைபிரியாதவர்களாய் இவர்கள் இருவரும் இருந்தனர்.
  • கு.ப.ரா.வும், ந.பிச்சமூர்த்தியும் இணைந்து, கும்பகோணத்தில், “பாரதிசங்கம்’ என்ற அமைப்பை நிறுவினார்கள்.
  • கு.ப.ராஜகோபாலனின் சிறுகதைகள் கனகாம்பரம் என்னும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளன.
  • கல்கி ஒரு கட்டுரையில் சி.சுப்ரமணிய பாரதியார் சிறந்த கவிஞர், ஆனால் மகாகவி அல்ல என்றார். அதை மறுத்து கு.ப.ராஜகோபாலனும் சிட்டியும் சேர்ந்து எழுதிய கட்டுரைகள் ‘கண்ணன் என் கவி’ என்ற பெயரில் வெளிவந்தன. இந்நூல் தமிழ்த் திறனாய்வு வரலாற்றில் முக்கியமான ஒன்று என கருதப்படுகிறது.
  • கு.ப.ராஜகோபாலன் புதுமைப்பித்தனுக்கு நேர் எதிரான போக்குகள் கொண்டவர். சிறுகதை வடிவம், இலக்கியத்தின் அடிப்படை நோக்கம் ஆகியவை சார்ந்த பல முக்கியமான விவாதங்கள் கு.ப.ரா.வுக்கும் புதுமைப்பித்தனுக்கும் இடையேதான் நடைபெற்றுள்ளன.
  • கிருஷ்ணமாசாரியார் என்ற வடமொழி அறிஞருடன் இணைந்து “காளிதாசர்’ என்னும் பெயரில் ஒரு மாத இதழை நடத்தினார்.
  • சரத் சந்திர சட்டர்ஜி, சியாராம் சரண குப்தர், வி.ச.காண்டேகர், லியோ டால்ஸ்டாய், ரமேச சந்திர தத்தர் ஆகிய ஐந்து தலைசிறந்த எழுத்தாளர்களின் புகழ்பெற்ற ஆறு நாவல்களை “ஆறு நவயுக நாவல்கள்’ என்னும் நூலாக வெளியிட்டுள்ளார்.
  • “ஸ்ரீஅரவிந்த யோகி’, “டால்ஸ்டாய் வாழ்க்கையும் உபதேசமும்’ என்னும் வாழ்க்கை வரலாற்று நூல்கள் இரண்டு படைத்துள்ளார்.

கு ப ரா சிறப்புகள்

  • சிறுகதையின் வடிவ ஒருமையை பற்றி புரிதலும், அதற்கான தொடர்ந்த கவனமும் உடைய முதல் தமிழ் எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன் என க.நா.சுப்ரமணியம், சி.சு. செல்லப்பா போன்ற விமர்சகர்கள் கூறியிருக்கின்றனர்.
  • கு.ப.ராஜகோபாலன் தமிழிலக்கியத்தில் ஆண் பெண் உறவை உளவியல் சார்ந்து ஆராய்வதில் ஒரு முன்னோடி.
  • “உத்தியோகம் என்பதில்லாமல் எழுத்துக்களை மட்டும் நம்பி உயிர் வாழ வேண்டி வந்த அவனுடைய நிலைமையைப் பார்த்து நான் வேதனைப்பட்டிருக்கிறேன். அவன் எழுதுவதில் சளைக்கவில்லை. வறுமை ஏற ஏறப் பத்திரிகைகளில் அவன் எழுத்துக்கள் அதிகப்பட்டன, இம்மனநிலை தான் அவன் துறவையும் லட்சியத்தையும் சாதனையையும் காட்டும் திறவுகோல்” – என்பது கு.ப.ரா பற்றிய ந.பிச்சமூர்த்தியின் முத்திரை வாசகங்கள்.

 

 

Leave a Reply