உழவின் சிறப்பு
“மேழி பிடிக்கும்கை வேல்வேந்தர் நோக்கும்கை ஆழி தரித்தே அருளும்கை – சூழ்வினையை நீக்கும்கை என்றும் நிலைக்கும்கை நீடுழி காக்கும்கை காராளர் கை – கம்பர் |
சொற்பொருள்:
- மேழி – கலப்பை, ஏர்
- வேந்தர் – மன்னர்
- ஆழி – மோதிரம், சக்கரம், கடல்
- காராளர் – மேகத்தை ஆளுகின்றவர்களாகிய உழவர்.
ஆசிரியர் குறிப்பு:
- இயற்பெயர் = கம்பர்
- பிறந்த ஊர் = தேரழுந்தூர், மயிலாடுதுறைக்கு அண்மையில் உள்ளது.
- தந்தை பெயர் = ஆதித்தன்
- போற்றியவர் = சடையப்ப வள்ளல்
- இயற்றிய நூல்கள் = கம்பராமாயணம், சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம்
- சிறப்பு = கல்வியில் பெரியவர் கம்பர், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
- காலம் = 12ஆம் நூற்றாண்டு