சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் செம்மொழித் தமிழ்

செம்மொழித் தமிழ்

உலக மொழிகள்:

  • உலகத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. அவற்றுள் பல பேச்சு மொழிகளே.
  • “எளிதில் பேசவும், எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே” என்று வள்ளலார் அருள்கிறார்.

செம்மொழிகள்:

  • திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் செம்மொழிகள் எனப்படும்.
  • கிரேக்கம், இலத்தின், சமஸ்கிருதம், சீனம், எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகியவற்றை செம்மொழிகள் எனப் பட்டியலிடுகிறார் மொழியியல் அறிஞர் ச.அகத்தியலிங்கம்.

திருக்குறள் பற்றி டாக்டர் கிரௌல்:

  • டாக்டர் கிரௌல், “ தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்; தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது” என்று மொழிந்து இன்புற்றார்.

தமிழின் தொன்மை:

  • உலகில் பழமையான நிலபகுதியான “குமரிக்கண்டத்தில்” தமிழ் தோன்றியதாக “தண்டியலங்கார” மேற்கோள் செய்யுள் கூறுகிறது.
“ஒங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்”

தமிழின் மேன்மை:

  • தமிழ் மெல்லோசை மொழி, அதனாலேயே உலக முதன் மொழியாய்த் தோன்றியும் வழக்கொழியாமல் இன்றும் இளமை மாறாமல் கன்னித்தமிழாய் இருந்து வருகிறது.

தமிழ் மொழியின் தாய்மை:

  • பெற்றோரை குறிக்கும் “அம்மை, அப்பன்” என்னும் குமரிநாட்டுத்(நாஞ்சில் நாடு) தமிழ்ச்சொற்கள், வடமொழி உட்பட உலகப் பெருமொழிகள் பலவற்றிலும் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன.

தமிழ் மொழியின் தூய்மை:

  • “தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றித் தழைத்தோங்கவும் செய்யும்” என்று கூறினார் கால்டுவெல்.

தமிழ் மொழியின் செம்மை:

  • மொழிக்கு இலக்கான வரம்பும் சொற்களின் திருந்திய வடிவும் அவசியம். இவற்றை தமிழில் உள்ளது போல, வேறு எம்மொழியிலும் காண இயலாது. அதனாலேயே தமிழ், “செந்தமிழ்” எனப்பட்டது.

தமிழ் மொழியின் இயற்கை வளர்ச்சி:

“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” – தொல்காப்பியம்
  • தமிழில் இடுகுறி பெயர்கள் குறைவு.
  • ஒருமை, பன்மை என்னும் இருவகை எண் மட்டுமே தமிழில் உண்டு.
  • வடமொழியில் ஒருமை, இருமை, பன்மையென மூவகை எண் உள்ளன.
  • தமிழில் உயிர்களுக்கு மட்டுமே பால்வேறுபாடு உண்டு; பொருள்களுக்குப் பால்வேறுபாடு இல்லை.

தமிழ் மொழியின் இலக்கண நிறைவு:

  • எல்லா மொழிகளும் “எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கூறும். ஆனால் தமிழ் அவற்றுடன் சேர்த்து வாழ்வியலுக்கான பொருள் இலக்கணத்தையும்” கூறுகிறது. அதனையும் “அகம், புறம்” என இருவகையாகப் பகுத்துள்ளது.

தமிழ் மொழியின் செய்யுள் சிறப்பு:

  • “கலிப்பா” முதலான செய்யுள் வகைகள் வேறு எம்மொழியிலும் இல்லை.

தமிழ் மொழியின் அணிச் சிறப்பு:

  • புலவர்கள் செய்யுளுக்குச் சிறப்புச் சேர்க்க “உவமை, உருவகம்” முதலிய நூற்றுக்கணக்கான அணிகளைப் பயன்படுத்தி பாடல்களை இயற்றியுள்ளார்கள்.

Leave a Reply