தமிழ் நாடக முன்னோடிகள்
நாடகம்:
- கண்ணுக்கும் காதுக்கும் மனத்துக்கும் இன்பம் பயக்கும் கலை நாடகக்கலை.
- உணர்ச்சியை தூண்டி, உள்ளத்தில் புதைத்து கிடக்கும் அன்பையும் அறிவையும் வெளிப்படுத்தி மக்களைப் பண்படுத்தும் சிறந்த கலை நாடகம்.
- சயந்தம், முறுவல், மதிவாணன் நாடகத்தமிழ், செயிற்றியம் முதலிய நாடக இலக்கான நூல்களின் பெயர்கள் மட்டுமே இப்போது கிடைக்கின்றன.
- இடைக்காலச் சோழப் பேரரசர்கள் ஆதரவில் ஆலயங்களில் நாடங்கங்கள் நடத்தப் பெற்றுள்ளன என அறிகிறோம்.
பரிதிமாற் கலைஞர்(1870 – 1903):
| தமிழ் நாடக பேராசிரியர் |
- உயர்தனிச் செம்மொழித் தகுதி தமிழுக்கே உண்டு என அக்காலத்திலேயே முழங்கியவர்.
- சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தம் பெயரைத் தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என மாற்றி அமைத்துக் கொண்டார்.
- இவர், தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டே நாடகத் தொண்டாற்றினார்.
- மேலைநாட்டு நாடக ஆசிரியர்களான ஷேக்ஸ்பியர், எப்சன், மோலியர் ஆகியோரைப் போன்று தமிழகத்தில் நாடகாசிரியர்கள் தோன்ற வேண்டும் எனப் பெரிதும் விழைந்தவர்.
- ரூபாவதி, கலாவதி, மான்விஜயம் என்பது இவரின் நாடங்கங்கள்.
| ரூபாவதி, கலாவதி, மானவிஜயம், நாடகவியல் |
- இவர் வடமொழி, மேனாட்டு மரபுகளைத் தமிழ் நாடக மரபோடு இணைத்து “நாடகவியல்” என்னும் நூலைப் படைத்தார்.
- இவரது “மானவிஜயம்” நாடகம், “களவழி நாற்பது” என்னும் இலக்கியத்தை அடிப்படையாக கொண்டு இயற்றப்பட்டது. சேரமான் கணைக்கால் இரும்போரையுடன் புலவர் பொய்கையாரும் இறந்துபடுகின்றார்; இவ்விருவர் இறப்பிற்கும் தானே காரணம் என்று எண்ணிய சோழன் செங்கணான்
| “மானப் பெருமையை மனக்கொண்டு அந்தோ ஈனப் பாரில் இருத்தல் வேட்டிலை உண்ணும் போழ்தினில் உன்னைத் கொன்றவன் செங்கணான் எனும்இச் சிறுமதி யுடையான்” |
- என்று புலம்பித் தன்னை மாய்த்துக்கொள்ளும் காட்சி, செந்தமிழ் நடைபயில, அவலச்சுவையை வெளிப்படுத்தும் இடமாகும்.
சந்க்கரதாசு சுவாமிகள்(1867 – 1920):
| நாடகத்தமிழ் உலகின் இமயமலை, தமிழ்த் நாடக தலைமைஆசிரியர் |
- நாடகம் மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே சுவாமிகளின் முதல் நோக்கமாகும்.
- எனவே, பாமர மக்களுக்குத் தெரிந்த பழங்கதைகளை நாடகமாக்கினார்.
- நாடகத்தைச் சமுதாய சீர்திருத்தக் கருவியாகவும் கையிலெடுத்த சுவாமிகள், தம் நாடகங்கள் வாயிலாகப் பக்தி, ஒழுக்கம் ஆகியனவற்றை வலியுறுத்தி, மக்களுக்கு நல்லறிவு புகுட்டினார்.
- சிறுவர்களைக் கொண்டு நாடகக் குழுக்களைத் தோற்றுவித்தார்.
நாடகங்கள்:
| வள்ளி திருமணம், கோவலன் சரித்திரம், சதி சுலோச்சனா, இலவகுசா, பக்தப் பிரகலாதா, நல்லதங்காள், சதி அனுசுயா, வீர அபிமன்யு, |
- இவர் நாற்பது நாடகங்களை இயற்றியுள்ளார்.
புத்தநெறி சுப்பிரமணியம் பாராட்டு:
| “துடிப்பிருக்கும் சங்கரதாசு எழுத்தில் எல்லாம் சுவைசொட்டும் சந்தநயம் தேய்ந்திருக்கும்” |
- என்று சுவாமிகளின் சந்தப்பாடல்களை பற்றி புகழ்கிறார்.
சதி சுலோசனா:
- சதி சுலோச்சனா நாடகத்தில் இந்திரசித்து, தன் நண்பனிடம் பூக்கள் பற்றிக் கேட்க,
| “பூவின் வேய்வறம் பலகோடி அதனை எவர் போதிப்பார் தேடி அப்பு கலப்பு பதிப்பு கொதிப்பு செப்பு அருப்பு இருப்பு நெருப்பு உப்பு உரப்பு கசப்பு புளிப்புஇத்தனை பூவிற்குமேல் இரவில் கண்விழிப்பு இயம்பிய மொழியெல்லாம் தமிழ்ப் புத்தகக் குறிப்பு” |
- என அடுக்குமொழி பகர்வது இவரது சந்த நடைக்குச் சான்றாகும்.
கோவலன் சரித்திரம்:
- இவர் இயற்றிய “கோவலன் சரித்திரம்” மதுரையில் அரங்கேறியபொழுது, காற்சிலம்பு விற்று வர நகருக்குப் போவதாகக் கோவலன் கூறக் கண்ணகியோ,
| “மாபாவியோர் கூடி வாழும் மாநகருக்கு மன்னா போகாதீர்” |
என்று பாடுவது போன்ற காட்சி. இதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டது.
- சுவாமிகள் அவையினர் முன்பு, “மா என்பது அலைமகளையும், பா என்பது கலைமகளையும், வி என்பது மலைமகளையும் குறிக்கிறது” என்று திருவிளையாடல்புராணம் சான்று காட்டி விளக்கினார்.
நடிப்புத் திறமை:
- நல்ல உடற்கட்டும் எடுப்பான தோற்றமும் உடைய இவர் “எமன், இராவணன், இரணியன்” முதலிய வேதங்கள் புனைந்து மேடையில் நிற்கும் பொது பார்பவர்களுக்குக் கிலி அடிக்கும். இவர் எழுத்துத் திறமையோடு நடிப்புத் திறமையும் பெற்றிருந்தார்.
பம்மல் சம்பந்தனார்(1875 – 1964):
| தமிழ் நாடகத் தந்தை, கலைஞர் |
- பம்மல் சம்பந்தனார் தனது 18வது வயதில் “சுகுணவிலாச சபையைத்” தொடினார்.
- இவர் தேவையற்ற ஆடல் பாடல்களைக் குறைத்தார்.
கலைஞர்:
- பம்மல் சம்பந்தனார், கட்டுக்குலையாதக் நாடகக் குழுவை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்.
- அதனால், நாடகர்களால், “கலைஞர்” என மதிக்கப்பட்டார். இவர் நீதித்துறையில் பணியாற்றியவர்.
நாடகங்கள்:
- இவர் 94 நாடகங்களைத் படைத்துள்ளார்.
| மனோகரா, யயாதி, சிறுத்தொண்டன், கர்ணன், சபாபதி, பொன்விலங்கு, வாணிபுரத்து வீரன் (ஷேக்ஸ்பியர் நாடகங்களை தழுவி), விரும்பிய விதமே, அமலாதித்தியன் |
கேளிக்கை நாடகம், நையாண்டி நாடகம்:
- இவர், நாடகக் காட்சிக்கேற்பத் திரைச்சீலைகளையும் பொருத்தமான ஓவியங்களையும் தொங்கவிடுமாறு வற்புறுத்தினார். இவர் கேளிக்கை நாடகம் என்ற வகையினையும், நாடக நையாண்டியினையும் தமிழ் நாடக உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அடுக்குமொழிகள்:
| “போட்டும் புனைந்தழகாய்க் கட்டும் பீதாம்பரமாம் பட்டும் சோதி செய் பகட்டும் செயலைக் கண்டு கிட்டும் வருணிக்கும் பொழுது எனக்கு மட்டும். |
சபாபதி நாடகம்:
- இவரின் சபாபதி என்ற நாடகம் இன்றளவும் மறக்கமுடியாத நகைச்சுவை நாடகம் ஆகும்.
- சபாபதி என்ற இந்நாடகம் படிக்கவும் பார்க்கவும் நகைச்சுவையை ஏற்படுத்தவல்லது.
குறள் மாற்றுதல்:
- குறள் வடிவத்தைத் தன் போக்கிற்கேற்ப மாற்றி எழுதுவார்.
| “சூதினும் சூதானது யாதெனில் சூதினும் சூதே சூதா னது” |
Entha bookla iruku sir intha topic
பழைய சமச்சீர் கல்வி 7 ஆம் வகுப்பு புத்தகம்
Book edition tell me sir
https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZh2k0Id&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D#book1/
Sir intha book pdf upload pannunga sir
https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZh2k0Id&tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D#book1/