புறநானூறு
நெல்லும் உயிரன்றே; நீரும்உயி ரன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்; அதனால் யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே; – மோசிகீரனார் |
சொற்பொருள்:
- அறிகை – அறிதல் வேண்டும்
- தானை – படை
- கடனே – கடமை
ஆசிரியர் குறிப்பு:
- மோசிகீரனார், தென்பாண்டி நாட்டிலுள்ள “மோசி” என்னும் ஊரில் வாழ்தவர்.
- “கீரன்” என்னும் குடிப்பெயரை உடையவர்.
- உடல் சோர்வினால் அரசுக்குரிய முரசுக் கட்டிலில் உறங்கியபோது, “சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை” என்ற அரசனால் கவரிவீசப் பெற்ற பெருமைக்குரியவர்.
- இவர் பாடிய பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகியவற்றுள் உள்ளன.
நூல் குறிப்பு:
- புறம் + நான்கு + நூறு = புறநானூறு.
- இந்நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
- இது புறம் பற்றிய நானூறு பாடல்களின் தொகுப்பு.
- புறம் என்பது மறம் செய்தலும் அறம் செய்தலும் ஆகும்.