மெய்பொருள் கல்வி
கற்பிப்போர் கண்கொடுப் போரே! – அந்தக் கணக்காயர் உரையினில் இருசெவி சேரே! நற்பெயர் எடுத்திட வேண்டும்! – நாளும் நன்றாகப் படித்துநீ முன்னேற வேண்டும்! – வாணிதாசன் |
சொற்பொருள்:
- பதுமை – உருவம்
- மெய்பொருள் – நிலையான பொருள்
- கணக்காயர் – ஆசிரியர்
ஆசிரியர் குறிப்பு:
- இயற்பெயர்: எத்திராசலு (எ) அரங்கசாமி
- பெயர்: வாணிதாசன்
- பிறந்த இடம்: புதுவையை அடுத்த வில்லியனூர்
- பெற்றோர்: அரங்க திருக்காமு – துளசியம்மாள்
சிறப்பு:
- “கவிஞரேறு, பாவலர்மணி” என்னும் பட்டங்கள் பெற்றுள்ளார்.
- தமிழகத்தின் “வேர்ட்ஸ் வொர்த்” என இவரைத் தமிழுலகம் புகல்கிறது.
- உருசியா, ஆங்கிலம் முதலிய மொழிகளில் இவர் பாடல்கள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.
காலம்:
- 22.07.1915 – 07.08.1974
நூல் குறிப்பு:
- கவிஞர் வாணிதாசன் தமிழ் உலகிற்குப் புனைந்து அளித்துள்ள “குழந்தை இலக்கியம்” என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.