கடவுள் வாழ்த்து
முத்தே பவளமே மொய்த்தபசும் பொற்சுடரே சித்தேஎன் னுள்ளத் தெளிவே பராபரமே கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த விண்ணே ஆனந்த வியப்பே பராபரமே – தாயுமானவர் |
சொற்பொருள்:
- சுடர் – ஒளி
- ஆனந்தம் – மகிழ்ச்சி
- பராபரம் – மேலான பொருள், இறைவன்
ஆசிரியர் குறிப்பு:
- பெயர் = தாயுமானவர்
- பெயர் காரணம் = திருச்சி மலைமீது உள்ள இறைவனான தாயுமானவர் அருளால் பிறந்தமையால் இவருக்கு தாயுமானவர் என்று பெயர் சூட்டப்பட்டது.
- பெற்றோர் = கேடிலியப்பர் – கெசவல்லி அம்மையார்
- மனைவி = மட்டுவார்குழலி
- ஊர் = நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு(வேதாரண்யம்)
- நூல் = தாயுமானவர் திருப்பாடல் திரட்டு
- பணி = திருச்சியை ஆண்ட விஷய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூல அலுவலர்
- காலம் = கி.பி. 18ம் நூற்றாண்டு
- நினைவில்லம் = இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரத்தில் உள்ளது
நூல் குறிப்பு:
- இப்பாடல் “தாயுமானவர் திருப்பாடல் திரட்டு” என்னும் நூலில் “பராபரக்கண்ணி” என்னும் தலைப்பில் உள்ளது.