சமசீர் கல்வி 8 ஆம் வகுப்பு பாட புத்தகம் விவேகசிந்தாமணி

விவேகசிந்தாமணி

தேன்நுகர் வண்டு மதுதனை உண்டு
தியங்கியே கிடந்ததைக் கண்டு
தான்அதைச் சம்பு வின்கனி என்று
தடங்கையில் எடுத்துமுன் பார்த்தாள்
வான்உறு மதியம் வந்தென்(று) எண்ணி
மலர்க்கரம் குவியுமென்(று) அஞ்சிப்
போனது வண்டோ பறந்தது பழந்தான்
புதுமையோ இதுஎனப் புகன்றாள்

சொற்பொருள்:

  • மது – தேன்
  • தியங்கி – மயங்கி
  • சம்பு – நாவல்
  • மதியம் – நிலவு

நூல் குறிப்பு:

  • விவேகசிந்தாமணி என்னும் இநூல், புலவர் பலரால் இயற்றப்பட்ட பாக்களின் தொகுப்பு.
  • இந்நூலை தொகுத்தவர் யாரென தெரியவில்லை.

Leave a Reply