இன்பம்
கற்றவர் முன்தாம் கற்ற கல்வியைக் கூறல் இன்பம் வெற்றியை வாழ்வில் சேர்க்கும் வினைபல புரிதல் இன்பம் சிற்றினக் கயவ ரோடு சேராது வாழ்தல் இன்பம் பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணம் பெறுதல் இன்பம். – சுரதா |
சொற்பொருள்:
- இசைபட – புகழுடன்
- கயவர் – கீழ்க்குணமுடையோர்
இலக்கணக்குறிப்பு:
- தளிர்க்கை – உவமைத்தொகை
- பழந்தமிழ், சிற்றினம், பெருங்குணம் – பண்புத்தொகை
- வழங்கி – வினையெச்சம்
- கற்றல், பெறுதல், வாழ்தல் – தொழிற்பெயர்
ஆசிரியர் குறிப்பு:
- உவமை கவிஞர் சுரதா அவர்களின் இயற்பெயர் இராசகோபாலன்.
- இவர் நாகை மாவட்டம் பழையனூரில் பிறந்தார்.
- பெற்றோர் = திருவேங்கடம், செண்பகம்.
- பாவேந்தர் பாரதிதாசன் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றிக்கொண்டார். அதன் சுருக்கமே சுரதா.
படைப்புகள்:
- தேன்மழை, துறைமுகம், சுவரும் சுண்ணாம்பும், சுரதாவின் கவிதைகள்
சிறப்பு:
- இவரின் தேன்மழை நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கானப் பரிசை பெற்றுள்ளது.
- இவர் கலைமாமணி பட்டத்தையும், தமிழக அரசின் பாவேந்தர் விருதையும் பெற்றுள்ளார்
சமசீர் கல்வி 9 ஆம் வகுப்பு பாட புத்தகம் இன்பம்